’ “என்ன இன்னைக்கும் அவன் வரலையா? என்ன ஆச்சு அவனுக்கு?” மாணவர்களும் மாணவிகளும் இணைந்து பயிலும் வகுப்பறை அது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர். விழிகளில் சட்சட்டென மாறும் சமிக்ஞை பரிமாற்றங்கள். மாணவிகளில் சிலர் ரேவதி எனும் அந்த மாணவியையே உற்றுப் பார்க்கின்றனர். இவை அனைத்தும் இமைக்கும் நொடியில் நடந்து முடிகின்றன. வகுப்பு முடிந்து தனியறையில் அமர்ந்திருக்கிறேன். பாலு வருகிறான், கிருஷ்ணனை துணைக்கு அழைத்துக்கொண்டு! “மே ஐ கம் இன் மேடம்.?” “ப்ளீஸ் கம்...” இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க , பாலு ஆரம்பித்தான். “பிரசாத்துக்கு லவ் ஃபெய்லியர் மேடம்...” அதுவரை மும்முரமாக எழுதிக்கொண்டே காது கொடுத்துக்கொண்டிருந்தவள், நிமிர்ந்தேன். “என்ன சொன்ன?” “அவனுக்கு லவ் ஃபெய்லியர் மேடம்” “இந்த வயசுல லவ்வே அதிகம்.. இதுல ஃபெயிலியர் வேறயா? என்ன விஷயம்? முழுசா சொல்லு!” கடகடவென நம்பமுடியாத பல தகவல்களை ஒப்புவித்தான். ஏழாம் வகுப்பு முதல் ஒன்றாய் படித்துவரும் ரேவதியை அவன் காதலிக்கிறானாம்! இதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவள் பத்தாம் வகுப்பு வந்த பிறகு அவனை கண்டுக் கொள்வதே இல்...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்