“டெஹல்கா". இந்திய பத்திரிக்கை உலகையே இந்தப் பெயர் மாற்றிப் போட்டது என்றால் அது மிகையல்ல. 1999ம் ஆண்டு ஒரு சாதாரண வலைத்தளமாக உருவான டெஹல்கா, பிஜேபியின் அரசாங்கத்தையே ஆட்டிப்படைத்தது. நாங்கள் வித்தியாசமானவர்கள் என்ற முழக்கத்தோடு ஆட்சியைப் பிடித்த பிஜேபி கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதத்திலும் குறையாத மோசடிப் பேர்விழிகளைக் கொண்டது என்பதை தோலுரித்துக் காட்டியது டெஹல்கா. டெஹல்கா நடத்திய "ஆபரேஷன் வெஸ்ட் என்ட்” என்ற பெயர் கொண்ட அந்த ஸ்டிங் ஆபரேஷன், பத்திரிக்கை உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி ஸ்டிங் ஆபரேஷன்களின் தந்தை என்று பெயரெடுத்தது. அரசு நிர்வாகத்தில், குறிப்பாக ராணுவத் துறையில் எவ்வளவு சாதாரணமாக ஊழல் புரையோடிப்போயிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது டெஹல்கா. ராணுவ உயர் அதிகாரிகளும், ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகளும், பெண்ணாசை மற்றும் பொன்னாசைக்காக இல்லாத ஒரு ராணுவ தளவாடத்தை வாங்க பேரம் நடத்தும் அளவுக்கு சோரம் போயிருந்தார்கள் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்களாகத் திகழ்ந...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்