இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்