monday, aprail 14, 2014 அம்பிஆர்கைவ்ஸ் கார்பன் காப்பி.. சன்டிவி தலைமை அலுவலகம் .மந்தைவெளி. தினகரன் அலுவலகம் எரிப்பு சம்பவத்துடன் ஒரு பார்வை 2007 கொஞ்சம் அத்தியாவசிய அரசியல்..... சர்வாதிகார சாம்ராச்சியம் நடத்திய சன்குழுமம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகப் புரிந்து விட்டது. சன் தொலைக்காட்சிகுழுமத்தின் அசுரமான ஊடக பலம் கழகவளர்ச்சிக்கு கைகொடுக்கும் என்பது கனவானது. அது கட்சியை கபளிகரம் செய்யத்துடிக்கிறது என்பது நிருபணமாகிவிட்டது. கருத்துகணிப்பு என்பதாக தினகரன் திணித்து வந்த கருத்தாக்கங்கள், தமிழ்நாட்டில் தயாநிதியை தனிப்பெரும் தலைமை சக்தியாக அடையாளப்படுத்த எடுக்கப்பட்ட சூட்சும திட்டங்கள் என்பது சுளீரென உரைத்தது கருணாநிதிக்கு!காலங் கடந்து இதை கண்டுணர்ந்தார் கருணாநிதி எனினும், 'தன் காலம் முடிந்து போகும் முன்பே சுதாரித்து கொண்டார்தலைவர்' என்பது தான் கழக உடன் பிறப்புகளிடம் மட்டுமல்ல குடும்ப உறவுகளிடமும் நிம்மதியை உருவாக்கியது. தமிழ் நாட்டிலிருந்து மத்திய அமைச்சர் ஆனவர்களில் சிறப்பாக செயல்படுபவர் யார்? என...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்