சாதனா சர்கம். தேனைத்தொட்டு கைகளில் ஒட்டியிருக்கும் வழுவழுப்பு தன்மைக்கு உதாரணமாய் சாதனாசர்கம் குரலை சொல்லலாம் கொஞ்சும் மைனாக்களே பாடலை கேளுங்கள் அதில் வரும் '' என் தீபாவளி பண்டிகை என்ற வரிகளின் போது கவனித்து பாருங்கள் பண்டிகை என்ற வார்த்தை சரியாக உள்நாக்கில் இருந்து வெளிப்படுவது தெரியும்.. அவ்வளோ soft சிநேகிதனே பாடல் முழுவதுமே மேல் அண்ணத்தின் கடைவாயில் இருந்து பாடியது போல இருக்கும்.. '' ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவைகள் செய்யவேண்டும் '' இதில் சேவைகள் என்று சொல்லும் போது சேவை ' க ' ள் க வை இதற்கு மேலும் மென்மையாக உச்சரிக்கவே முடியாது. மேலோட்டமாக கேட்டால் சேவைல் என்று பாடுவது போலதான் தோன்றும். சாதனாவின் குரல் அப்படியே மென்மை தவிர்த்து குறுக்கி ஒலிப்பதை கேட்கவேண்டுமா '' ரமணா படத்தில் வானவில்லே வானவில்லே பாடலை கேளுங்கள் ஒவ்வொரு வார்த்தையும் பளீர் பளீர்ன்னு தெறிக்கும் கீழ இருப்பதெல்லாம் எனக்கு மிகப்பிடித்த...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்