இந்திய ஊடகத்துக்கு இது முக்கியமான ஆண்டு. ஏனென்றால், இந்த ஆண்டில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் ஊடகத்துறையில் நிகழ்ந்துள்ளன. ஒன்று, ‘ராம்நாத் கோயங்கா விருது’ வழங்கும் விழாவில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ஆசிரியர் ராஜ் கமல் ஜா, பிரதமர் முன்னிலையில் அவரது அரசையே விமர்சனம் செய்திருக்கிறார். இன்னொன்று, என்.டி.டி.வி. மீதான தடையும் அது சார்ந்த விவாதங்களும்! இந்த இரண்டும் சொல்லும் நல்ல செய்தி... ஊடகச் சுதந்திரத்தை யாரும் நெரிக்க முடியாது என்பதே! இவற்றில் என்.டி.டி.வி. மீதான மத்திய அரசின் தடை உத்தரவு, பல கேள்விகளை எழுப்புகிறது. என்.டி.டி.வி. செய்தது சரியா, அரசு செய்தது சரியா என்று தீவிரமாக அலசப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் வெளியாகியிருக்கிறது, ‘மோர் நியூஸ் இஸ் குட் நியூஸ்’ எனும் புத்தகம். என்.டி.டி.வி. ஆரம்பித்து தற்போது 28-வது ஆண்டில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் ஊடகத்துறையில் தனது 25 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்ததன் நினைவை அசைபோடும் விதமாக இந்தப் புத்தகம் திகழ்கிறது. என்.டி.டி.வி.யின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஆயி...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்