(இந்த விமர்சனத்தில் ஸ்பாய்லர் இருக்கிறதா என்றெல்லாம் தெரியவில்லை. அப்படி யோசித்து எழுதுவது என் வேலையும் இல்லை என நினைக்கிறேன். அதனால் பார்க்காதவர்கள் படித்து விட்டு ஸ்பாய்லர் ஸ்பாய்லர் என்று கூவ வேண்டாம்.) பிரயத்தனம் கடைசியில் ஒரு கண்ணாடிக் கோப்பை கீழே விழுந்து உடைவதற்குத்தானா இத்தனை ஆயத்தம் இத்தனை பதட்டம் இத்தனை கண்ணீர்? - மனுஷ்ய புத்திரன் 'இறைவி' போல் மற்றுமொரு ஃபெமினிஸ முயற்சிப் படம். அதை விட நன்றாக இருக்கிறது என்பது மட்டும் ஆறுதல். குறிப்பாய் சில வசனங்கள் மற்றும் காட்சிகள். ராமிடம் எப்போதுமே அது உண்டு எனலாம். உதாரணமாய் கற்றது தமிழில் "Touch me if you dare" போல் இதில் "Hope this size fits you". ராமின் சில மனநிலைகள் ரசித்துப் புன்னகைக்க வைக்கின்றன. முதல் 45 நிமிடங்கள் (பிரபுவுக்கு தியா மீது சந்தேகம் வரும் வரை) இது வேறு ஒரு ஜாதிப் படமாக இருந்தது. மிக ஈர்த்தது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதெல்லாம் சுவாரஸ்யமாகவே இருந்தன. அப்பகுதிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது "எம் காலத்தின் கலைஞன்" என்று ராம் குறித்து படத்தின் விமர்ச...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்