முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெற்கிலிருந்து ஒரு சூரியன்!

கருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாகத் தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி கணபதி ஸ்தபதியைத் தொடர்புகொள்கிறார். ‘‘ஸ்தபதியாரே, கன்னியாகுமரி கடல்ல வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கணும். நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல! இல்லை; இங்கே நம்ம தமிழ்நாட்டுலேர்ந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரி அமையணும்! குமரியிலேர்ந்து வள்ளுவர் நேரா இமயத்தைப் பார்க்கிறார்!’’ கன்னியாகுமரி வள்ளுவர் சிலையைப் பார்க்கையில் அந்த உணர்வைப் பெற்றிருக்கிறேன். அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உண்டு. ‘இந்து - இந்தி - இந்துஸ்தான்’ ஒற்றைக் கலாச்சாரத் தூதர்களில் ஒருவராகப் பின்னாளில் இந்துத்துவச் சக்திகளால் விவேகானந்தர் உருமாற்றப்பட்டபோது, இந்தப் பாறையில் அமைக்கப்பட்ட நினைவிடம் அதற்கான சின்னங்களில் ஒன்றானது. அவர்கள் அளவில் நாட்டின் கடைக்கோடி எல்லையிலும் காவிக் கொடி நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இடம் அது. அலைகள் மோதும் கடற்பாறையில் பறக்கும் காவிக் கொடி, சங்கொலி, எங்கும் ஆக்கிரமித்திருக்கும் இந்தி - ...

மார்பரசியல்

அங்கே என்னடா பார்வை. முகத்தை பார்த்து பேசத்தெரியாதா உனக்கு. அக்கா தங்கச்சியோட பிறந்தவனா நீ?!” என்று நீங்களே எத்தனை ஆண்களை இதுவரை சபித்திருக்கிறீர்களோ. அது ஏன் அது ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்? துணிக்கடை பொம்மையை கூட விடுவதில்லையே! ஏன் தான் இந்த வக்கர புத்தியோ, என்று நீங்கள் எவ்வளவு தான் திட்டி தீர்த்தாலும், உண்மை என்ன தெரியுமா? ஆணின் இந்த இயல்பிற்கு அவன் காரணம் இல்லை. இயற்கை அவனை அப்படி இயங்கும் படியாகத்தான் வடிவமைத்திருக்கிறது. இந்த இயற்கைக்கு வேறு வேலை இல்லையா? போயும் போயும் இப்படியா ஆண்களை வடிவமைக்கணும்? என்று அதற்குள் அலுத்துக்கொள்ளாதீர்கள் ஸ்நேகிதி. இயற்கையின் இந்த ஏற்பாட்டில் நிறைய லாஜிக் இருக்கிறது. மனித இனம் உருவான ஒன்றரை மில்லையன் வருஷத்திற்கு முன்னால் பூமியில் வேறு சில மனித குரங்குகளும் வாழ்ந்துக்கொண்டிருந்தன. இந்த எல்லா மனித குரங்குகளும் கிட்ட தட்ட ஒரே இனம் என்பதால் எல்லாமே தூரத்தில் இருந்து பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும். உதாரணத்திற்கு பொனொபோக்களும், சிம்பான்ஸீக்களூம் வெவ்வேறு விதமான மனித குரங்குகள். பழக்கப்படாதவர் பார்வையில் இரண்டுமே ஒரே மாத...