முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உத்தமர் பன்னீரின் ஊழல் சாம்ராஜ்யம்

ஆட்சிமுத்துசங்கர் 27 செப்டம்பர் 2014 அன்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு.   ஜெயலலிதாவிடம், விசாரணை நீதிபதியிடம் பேசியாயிற்று.   நீங்கள் விடுதலை செய்யப்படப் போகிறீர்கள் என்று கூறி, 16 பக்கம் கொண்ட தீர்ப்பு நகல் என்று ஒன்றை காண்பித்திருக்கிறார்கள்.   அதை அப்படியே நம்பி,  ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற எவ்விதமான தயாரிப்பு வேலையும் இல்லாமல் ஜெயலலிதா, படோடாபமாக, அதிமுக அடிமைகளை பரப்பன அக்ரஹாரா வட்டாரம் முழுக்க பேனர்களை வைக்கச் சொல்லி, ஆடம்பரமாக கையசைத்தபடி நீதிமன்றம் சென்றார். மற்ற அடிமைகளெல்லாம் உரிய நேரத்துக்கு வந்து விட, பன்னீர்செல்வம் மட்டும் தாமதமாக வந்தார். அவரை பெங்களுரு காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை.    கூட வந்த அல்லக்கைகள் ஃபார்மர் சீப் மினிஸ்டர் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருக்கவும், காவல்துறை அவரை உள்ளே அனுப்பியது.  12 மணிக்கெல்லாம், ஜெயலலிதாவை குற்றவாளி என்று நீதிபதி குன்ஹா அறிவித்ததும், ஜெயலலிதாவுக்கான தண்டனை என்ன என்பதற்கான வாதத்துக்...