சி.சரவண கார்த்திகேயன் அருண் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குநரின் திரைப்படம் அருவி. மிகச் சிக்கலான, அதே சமயம் மிக மலினமான வெற்றிச்சூத்திர மாயைகள் நிரம்பிய தமிழ் திரைப்பட உலகில் இப்படி ஒரு உள்ளடக்கம் வெல்லும் என்று நம்பிக்கையுடன் களம் புகுந்திருக்கும் அவரை முதலில் எந்த ifs and buts-ம் இன்றி அணைத்துக் கொள்ளலாம். Asmaa என்ற எகிப்தில் எடுக்கப்பட்ட, அரேபிய மொழித் திரைப்படத்தைத் தழுவியே அருவி எடுக்கப்பட்டது என்ற வாதப் பிரதிவாதங்களுக்குள் போக விரும்பவில்லை. அதைத் தாண்டி இரண்டு விஷயங்களை எடுத்துக் கொண்டு பேச நினைக்கிறேன். ஒன்று திரைப்படம் பற்றியது; மற்றது நம் திரைப்படப் பார்வையாளர்கள் பற்றியது. முன்பொரு காலத்தில் - சுமார் இருபதாண்டுகள் முன் - இந்தியாவில் எய்ட்ஸ் பற்றி படைப்பில் பேசுவது என்பது முற்போக்காக, சமூக அவசியமாக இருந்தது. நிறைய எழுத்துக்களும், படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அது பற்றி வந்தன. (ஒரு நகைச்சுவைத் துணுக்கு நன்றாய் நினைவில் உள்ளது: சவரக்கத்தி மூலம் எய்ட்ஸ் பரவும் என்பதால் அதற்கு ஆணுறை போட்டுச் சிரைப்பார் ஒரு நாவிதர்.) அருவியும் அப்போது வந்திருக்க வே...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்