முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலைஞர் 90 வரலாறும் தகராறும்

திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பக் குளத்தின் கரையில் இரண்டு சிறுவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 'வா... நீந்தி அந்தக் கரைக்குப் போவோம்’ என்று ஒருவன் அழைத்தான். இருவருமே குதித்து நீந்தினார்கள். பாதி தூரம் கடந்ததும் இன்னொருவன் சொன்னான், 'என்னால் முடியாது. வா... திரும்பிவிடலாம்’ என்று. 'திரும் பிப் போகும் பாதித் தூரத்தை முன்னோக்கிப்போனால், அந்தக் கரையைத் தொட்டு வெற்றிஅடையலாம்’ என்றான் அந்தச் சிறுவன்! கட்சி ஆரம்பித்து சென்னையில் முதல் மாநில மாநாடு. எல்லோரும் மாநாட்டுத் தலைவரை அவரவர் மொழியில் வழிமொழிந்தார்கள். அந்த இளைஞர் கரகர குரலில், 'வாழ்வு மூன்றெழுத்து, வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்றெழுத்து, பண்பிலே பிறக்கும் அன்புக்கு மூன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளைவிக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரன் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, வெற்றிக்கு நம்மை அழைத்திடும் அண்ணா மூன்றெழுத்து...’ என்றபோது மாநாடு குலுங்கியது! இந்திரா என்ற பிம்பமே இந்தியாவை அச்சுறுத் திக்கொண்டிருந்த நேரம் அது. 'எமர்ஜென்சியா?’ என்று யோசிக்கவே ப...

நடிகர் அஜித்குமார் சுப்ரமணியம்

                                                                               புகைப்படம்:மகேஸ்சசி /http://ambiarchives.blogspot.in நட்சத்திர வெளிச்சதில் இருந்தாகவேண்டிய சினிமாவில் ,தனிமனித சுதந்திரத்துக்காக கொள்கை வகுத்துக்கொண்டு தனித்து நிற்கிறார் அஜித். நேர்காணல்: அஜித்குமார் சுப்ரமணியம் சென்னை திருவான்மியூரிலுள்ள இல்லத்தில் நடிகர் அஜித்தை சந்தித்தார் முதன்மை செய்தியாளர் ஜெயராணி .அவரிடம் தன் சினிமா வாழ்க்கை பற்றியும்தனிப்பட்ட கொள்கைகள் பற்றியும் பேசினார் அஜித்.அவர் பேசியதிலிருந்து சில இங்கே. கே:25 ஆண்டுகள் .50 படங்கள் சினிமா வாழ்க்கையை திரும்பிப் பாருங்கள் : ப : வழிகாட்டி இல்லாமல் வந்து நின்ற ஆரம்ப நாட்கள் ,வெற்றிகளாகவும்  தோல்விகாளாகவும் கிடைத்த வாய்ப்புகள்...சினிமா எனக்கு ROLLER COASTER RIDE . சினிமாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று இரண்டு முறை முடிவெடு...