புகைப்படம்:மகேஸ்சசி /http://ambiarchives.blogspot.in
நட்சத்திர வெளிச்சதில் இருந்தாகவேண்டிய சினிமாவில் ,தனிமனித சுதந்திரத்துக்காக கொள்கை வகுத்துக்கொண்டு தனித்து நிற்கிறார் அஜித்.
நேர்காணல்: அஜித்குமார் சுப்ரமணியம்
சென்னை திருவான்மியூரிலுள்ள இல்லத்தில் நடிகர் அஜித்தை சந்தித்தார் முதன்மை செய்தியாளர் ஜெயராணி .அவரிடம் தன் சினிமா வாழ்க்கை பற்றியும்தனிப்பட்ட கொள்கைகள் பற்றியும் பேசினார் அஜித்.அவர் பேசியதிலிருந்து சில இங்கே.
கே:25 ஆண்டுகள் .50 படங்கள் சினிமா வாழ்க்கையை திரும்பிப் பாருங்கள்:
ப:வழிகாட்டி இல்லாமல் வந்து நின்ற ஆரம்ப நாட்கள் ,வெற்றிகளாகவும் தோல்விகாளாகவும் கிடைத்த வாய்ப்புகள்...சினிமா எனக்கு ROLLER COASTER RIDE .
சினிமாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று இரண்டு முறை முடிவெடுத்திருக்கிறேன்.1995 என் படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தன.அது என்னை கடுமையாக பாதித்தது.ஆனால் பிரச்சனைகளிருந்து விலகி ஓடுவது என் இயல்பு அல்ல.அதனால் தொடந்தேன்.2010 ஆண்டு பிரச்சனைகளால் மனச்சோர்வின் உச்சத்தில் இருந்தேன்.அதைப் பற்றி POSTMORTEM செய்யவிரும்பவில்லை.
நன்றிசொல்லிகடிதமெல்லாம்எழுதிவிட்டென்.
ஷாலினிதான் நம்பிக்கை கொடுத்து என்னை மீட்டெடுத்தார்.
கே: சினிமா ஒரு வர்த்தகம் .பெரிய தொகையை சம்பளமாக வாங்குகிற ஹீரோக்கள் அதில் அங்கம் .படத்தின் ப்ரொமா ஒர்க் பண்ணுவது உங்கள் கடமை இல்லையா?
ப: இல்லை.மக்கள் தான் எனக்கு சம்பளம் கொடுக்கின்றனர்.நல்ல படமா இல்லையா என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.ஒரு படம் வெற்றி பெறுமா இல்லையா என்பதை படம் 60% முடிவடையும் போதே தெரிந்துவிடும்.தெரிந்தே ஒரு படத்திற்கு எப்படி விளம்பரம் செய்வது?நல்ல படத்திற்குப் பண்ணலாமே என கேட்கலாம் .அது பாரபட்சம் இல்லையா? அப்புறம் 9-6 என்னுடைய கால்சீட் .நான் ஒரு தொழிலாளி.
என் வேலையை நான் 100% அர்ப்பணிப்போடு சேய்கிறேன்.மற்றது எனக்கான நேரம்;அதில் என்னால் வேலை செய்ய இயலாது.
கே:நடிகர்களை தலைவர்களாக நம்பும் சமூகம் இது...
ப:மன்னிக்கவும் அப்படி யாரும் நம்பவில்லை.மக்கள் பணியாற்ற நல்லா தலைவர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் அர்பணிப்பையும்,பொதுநலத்தையும் கொச்சைப்படுத்த வேண்டாம்.
கே:அண்மை காலமாக ரொம்ப பக்குவப்பட்ட மனிதராக தெரிகிறீர்கள்.
ப: நானும் தவறுகள் செய்திருக்கிறேன்.என் அனுபவங்கள் என்னை பக்குவப்பட வைத்திருக்கின்றன.போட்டி,பொறாமை என எத்ற்குள்ளும் நான் போகவில்லை.நம்மைச் சுற்றி நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் உள்ளன.நாளை என்பது நிச்சயமில்லை.அந்த உண்மை புரிந்தால் நாம் தெளிந்துவிடுவோம்.
கே:தத்துவவாதி போல பேசிகிறீர்கள்.
ப:நான் பேசவில்லை.40 வயது அனுபவம் பேசுகிறது.
நன்றி:இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக