“ஆல் ப்ராப்ளம்ஸ் ஓவர் ப்ரோ” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். “என்னடா தலைவா ரிலீஸைப்பத்திதானே சொல்ற ?” என்றான் வடிவேல். ”ஆமாம் மச்சான்.. உங்கப் பத்திரிக்கைக்குத்தான் கஷ்டம்” ”ஏன்டா.. எங்கப் பத்திரிக்கைக்கு என்ன கஷ்டம் ? ” ”ஆமாடா… ரெண்டு வாரமா தலைவா படத்தை வச்சு கவர் ஸ்டோரி பண்ணிட்டீங்க. ஊர்ல வேற பிரச்சினையே இல்லாத மாதிரி ரெண்டு இஷ்யூவுக்கு இதுதான் கவர் ஸ்டோரியா… ? வாரமிருமுறை பத்திரிக்கைக்கு செய்திகள் இல்லாம கஷ்டப்பட்றது உண்மைதான். அதுக்காக விஜய்க்கு இத்தனை முக்கியத்துவம் தரணுமா ? இதுதான் நிகழ்காலத்தின் குரலா ? ” ”தலைவா மேட்டர்தானேடா ஹாட் டாப்பிக் ? ” ”தலைவாதாண்டா ஹாட் டாபிக். ஆனா தலைவா மட்டுமா ஹாட் டாபிக் ? ” ”சரி இந்தப் பிரச்சினை எப்படிதாம்பா முடிவுக்கு வந்துச்சு ? ” என்றார் கணேசன். ”தலைவா படப்பிரச்சினையை திமுக கையில எடுக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதும்தான் அரசாங்கம் வேக வேகமாக களமிறங்குச்சு. படம் வெளியாகலைன்னதும், தயாரிப்பாளர் சார்பில உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டாங்க. ஆனா அனுமதி வழங்கப்படல. விஜய் தரப்புல ஏதாவது வேகமா...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்