புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகிவரும் ‘கற்க கசடற’ என்ற கல்வி நிகழ்ச்சியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார் ப.கலாநிதி. பொதுவாக, செய்தித் தொலைக்காட்சிகளில் கடைசி பட்சமாக இருக்கும் கல்விச் செய்திகளை முதன்மைப்படுத்திய பணி அவருடையது. அவரிடம் பேசியதிலிருந்து
“ஒவ்வொருவருக்குமே கல்லூரி என்பது கனவுகளின் கருவறை. எனது கனவுகள் எல்லாம் ஆனந்த விகடனில் நிருபராகச் சேர வேண்டும்; பழ.நெடுமாறன் ஐயாவை பேட்டி எடுக்க வேண்டும். என்பது போலத்தான் இருந்தது.ஆனால் நேர்காணலில் தோல்வியடைந்தேன்.
அதன் பிறகு, நக்கீரனில் கல்லூரி நிரு பர் திட்டம் கொண்டு வந்தார்கள். அதிலும், முதல் இரண்டு கட்டத் தேர்வில் வெற்றி; நேர்காணலில் தோல்வி. 2002-ல் கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு, கும்பகோணத்தில் ஓர் அச்சகத்தில் பணியாற்றிய படியே நண்பர்க ளோடு சேர்ந்து ‘ரோஜாமலர்’ என்ற பத்தி ரிகையை நடத்தி னோம்.
இதனை ஒரு முக்கியத் தகுதியாக கருதி, எனக்கான முதல் செய்தித்துறை வாய்ப்பை 2004-ல் வழங்கியது தினமலர் (சி.என்.எஸ்). பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளிலேயே, 2006 சட்டமன்றத் தேர்தலையொட்டி ‘தினமலர் தேர்தல் களம் 2006’ பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன்.
(2006-ல் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் அன்றைய தினம் (01.03.2006) தினமலர் தேர்தல் களம் பகுதியில் வெளியான தொகுதிப் பங்கீடு குறித்த கட்டுரையும் ஒன்று என அப்போது பேசப்பட்டது.) தேர்தல் முடிந்தபிறகு, வாரமலர் மற்றும் சண்டே ஸ்பெஷல் ஆகியவற்றிற்கு பொறுப்பாளராக சில மாதங்கள் பணியாற்றினேன்.
அதன் பிறகு இந்தியா டுடே இதழில் உதவி ஆசிரியர் பணி. எனது செய்தித் துறை அனு பவத்தில் இந்தியா டுடே பல ஜன்னல்களைத் திறந்தது எனலாம். கலைஞர் கருணாநிதி குறித்த 100 பக்க சிறப்பிதழ் தயாரிக்கப்பட்டபோது, நண்பர் சரவணனுடன் இணைந்து அதற்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினேன்.
14 பக்க அளவில் கருணாநிதியின் (2008 வரையிலான) வாழ்க்கை வரலாற்றை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. கருணாநிதியுடனான நேர்காணலில் நான் கேட்ட பல கேள்விகளுக்கும் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, ஆத்திரம் என கலவையான மனநிலையோடு அவர் பதிலளித்தார்.
from right .....saravanan now in director ,solvathellam unmain in zee tamil tv
புதிய தலைமுறையில் கடந்த ஓராண்டாக, கல்விச் செய்திகளைத் தரும் ‘கற்க கசடற’ நிகழ்ச்சிக்குப் பொறுப்பாளனாக இருக்கிறேன். கிராமப்புற மாணவர்கள், இளைஞர் களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த அனைத்து வாய்ப்புகளும் கைக்கெட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சி இன்று மாபெரும் வெற்றி அடைந்திருப்பது, மன நிறைவைத் தருகிறது.
இதற்கிடையில் புதிய தலைமுறையில் உடன் பணியாற்றும் சவிதா, எனக்குக் காதலியாகி, இப்போது மனைவியாகி இருக்கிறார். தற்போது ஆனந்த விகடனுக்கு வாசகனாக மட்டுமே இருக் கும் நான், பழ.நெடுமாறன் ஐயாவை பலமுறை பேட்டி எடுத்துவிட்டேன். எனது கனவுகளில் இன்னும் சில மிச்சம் இருக்கின்றன. அவற்றைச் சுமந்துகொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறேன் பசித்த வேட்டைக்காரனாய்!” என்றவரிடம் வேட்டையில் வெற்றி பெற
வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம் நாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக