முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரிப்போர்ட்டரா இருக்கிறது குத்தமாய்யா ?

வேலை கிடைக்காம இருந்தப்பவும் சரி, வேலை கிடைச்சு சென்னையிலேயே செட்டிலான பிறகும் சரி... ஒவ்வொரு தடவை சொந்த ஊருக்குப் போகும்போதும், நமக்குனே காத்துட்டிருக்கிற  டிக்கெட்டுகளை சமாளிக்கணும்னா, கொஞ்சம் கஷ்டம்தான். இவங்களுக்கெல்லாம் 'நாம என்ன வேலை பார்க்கிறோம்’னு விளக்குறதுக்குள்ளேயே, நொந்துடுவோம். அதுவும் இந்த ரிப்போர்ட்டர் வேலையை விளக்குறது இருக்கே... ஊர்ல இறங்கி, பேக்கோட நடந்துபோனாலே, நாலு திசையில இருந்தும் நோக்கு வர்மம் மாதிரி நோக்குவாங்க. ''எங்கே இருக்கீங்க தம்பி?, ஆளையே பார்க்க முடியலை''னு ஆரம்பிப்பாங்க. 'இதென்னடா கொடுமையா இருக்கு? ஊர்ல உள்ளவங்க அப்படித்தானே கேட்பாங்க?’னு யோசிக்கிறீங்க. எக்ஸ்கியூஸ் மீ.... அந்தாளு இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்கிறது எட்டாவது முறை.   'எங்கே இருக்கீக தம்பி?’னு ஆரம்பிக்கிற ஆம்பளைங்களை விட, 'என்ன வேலை பார்க்கிற?’னு ஆரம்பிக்கிற பெண்கள் கொஞ்சம் டேஞ்சர். 'ரிப்போட்டர்னா? இந்தக் கணக்கு எடுக்கிற வேலையா?’ 'அது இல்லடி, ஊரு ஃபுல்லா சுத்துவாங்கள்ல அது...’ 'இல்லை.. டி.வி-யில மைக்கைப் பிடிச்சுக்கிட்டு நிப்பாங்கல்ல... அந...

லோக்பால் வந்தால் !!!!

         லோக்பால் வந்தால் நமக்கு என்ன நண்பர்களே முடிந்தவர்கள் இதன் நகல் எடுத்து உங்கள் ஊர் மக்களை விழிப்படைய உதவுங்கள்  லோக்பால் வந்தால் நமக்கு என்ன   கிடைத்து விடப்போகிறது ?  எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ? சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மகத்தான மாறுதல்களை இது உண்டாக்கும்?   பொது வாழ்க்கையில் ஒன்றிரண்டு   முக்கிய பயன்கள் - 1)அரசாங்க பொறுப்புகளில் இருக்கும் பெரிய மனிதர்கள் மீது (அமைச்சர்கள்,அரசு செயலாளர்கள்,உயர் போலீஸ் அதிகாரிகள் போன்றோர் ) வழக்குத் தொடுக்க வேண்டுமானால் - இது வரை – அரசிடம் அனுமதி பெற்ற பிறகு தான் செய்ய  முடியும்.  இந்த அனுமதி சாதாரணமாக கிடைப்பதில்லை. (2 ஜி ராஜா விஷயத்தில் இதற்காக 2 வருடங்கள் காத்திருந்து, பின்னர் சுப்ரீம் கோர்ட் வரை போய் போராட வேண்டி இருந்தது ). லோக்பால் வந்து விட்டால் - ஓரளவு ஆதாரங்கள் இருந்தாலே போதும்-  அரசு அனுமதி இல்லாமலே யார் மீது  வேண்டுமானாலும் யார்  வேண...