monday, march 31, 2014 அம்பிஆர்கைவ்ஸ் கார்பன் காப்பி.. குக்கூ …. திரைவிமர்சனம். குக்கூ …. திரைவிமர்சனம். Kukkoo… Tamil Film Review ராஜீமுருகன், முன்னாள் ஆனந்தவிகடன் நிரூபர், புதிய படத்திற்கு இயக்குநராகி படைத்திருப்பதுதான் குக்கூ… நிரூபராக இருந்த காலத்தில், பலதரப்பட்ட மக்களை சந்தித்ததாகவும், அதில் இந்த காதல் கதை நாயகனையும், நாயகியையும் சந்தித்ததாகவும், அவரே திரையில் தோன்றி கதையுடன் அப்வெப்பொழுது வந்து சொல்கிறார். எலக்ட்டிரிக் டிரெய்னில் பொருள்கள் விற்கும் கண்ணில்லாத கதாநாயகன், அவருடைய கூட்டாளிகள் (பெண்களும் உண்டு) கண்ணில்லாத சுதந்திரக்கொடி (அதாங்க கதாநாயகி பேரு)யை ஒரு சில சந்தர்ப்பங்களில் வழக்கமான திரைப்படங்கள் போல, முதலில் சண்டை பின்னர், கொஞ்சல் பார்முலாவில் காதலிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாக, அதனை நெய் ஊற்றி வளர்க்கும் விதமாக சுற்றத்தாரும் நடந்துகொள்ள கண்ணில்லாத இருவர் காதலும் திருஷ்டி சுந்றி போடும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இடையில், காதலியின் அண்ணன் நண்பன் காதலியின் மீது ஆசைப்பட்டு 3 லட்சம் செலவு செய்து,...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்