monday, march 31, 2014
அம்பிஆர்கைவ்ஸ் கார்பன் காப்பி..
குக்கூ …. திரைவிமர்சனம்.
குக்கூ …. திரைவிமர்சனம்.
Kukkoo… Tamil Film Review
Kukkoo… Tamil Film Review
ராஜீமுருகன், முன்னாள் ஆனந்தவிகடன் நிரூபர், புதிய படத்திற்கு இயக்குநராகி படைத்திருப்பதுதான் குக்கூ… நிரூபராக இருந்த காலத்தில், பலதரப்பட்ட மக்களை சந்தித்ததாகவும், அதில் இந்த காதல் கதை நாயகனையும், நாயகியையும் சந்தித்ததாகவும், அவரே திரையில் தோன்றி கதையுடன் அப்வெப்பொழுது வந்து சொல்கிறார்.
எலக்ட்டிரிக் டிரெய்னில் பொருள்கள் விற்கும் கண்ணில்லாத கதாநாயகன், அவருடைய கூட்டாளிகள் (பெண்களும் உண்டு) கண்ணில்லாத சுதந்திரக்கொடி (அதாங்க கதாநாயகி பேரு)யை ஒரு சில சந்தர்ப்பங்களில் வழக்கமான திரைப்படங்கள் போல, முதலில் சண்டை பின்னர், கொஞ்சல் பார்முலாவில் காதலிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாக, அதனை நெய் ஊற்றி வளர்க்கும் விதமாக சுற்றத்தாரும் நடந்துகொள்ள கண்ணில்லாத இருவர் காதலும் திருஷ்டி சுந்றி போடும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இடையில், காதலியின் அண்ணன் நண்பன் காதலியின் மீது ஆசைப்பட்டு 3 லட்சம் செலவு செய்து, ஆசிரியர் பணி வாங்க உதவிசெய்தும், திருமணம் முடிக்கவும் ஏற்பாடாகிறது. இதனால், காதலர்களை சேரவிடாமல் துரத்தியடிக்க, விதிவசத்தால் அருகருகே இருக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டும், பல விபத்துக்களை சந்தித்துத்தும் இருவரும் இணைய முடியாத சூழ்நிலைகள்… பார்வையாளர்கள் நமக்கோ என்ன விதிடா இதுன்னு? நொந்துகொள்ள வேண்டி வருகிறது. காதலர்கள் இணைய 3 லட்சம் திருப்பி கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், கண்ணில்லாதவர்கள் அனைவரும் உதவ, கண்னுள்ளவர்கள் உதவமாலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லவர் மாதிரி நடித்து, பணத்தை ஆட்டைய போட்டு, நாயகனையும் நடுரோட்டில் விட்டுச்செல்வதையும், ஒருசிலர் மனசாட்சி இல்லாமல் செல்வதும், அதில் ஒருவர் மிகவும் உதவி செய்து நாயகனைக் காப்பாற்றுவதும்.. அருமையான திரைக்கதை அமைப்பு. பிரச்சினையை மேலும் சிக்கலாக்கிவிடுகிறார்கள். முடிவில், காதலர்கள் இருவரும் வேறு வேறு திசையில் இருக்க, ஆனந்த விகடன் உதவியுடன், நாயகி மும்மையில் இருக்கிறார் எனத் தெரியவர, நாயகன் ரயிலில் சென்று நாயகியை கண்டுபிடிக்கிறாரா என்பதே கிளைமாக்ஸ்.
குக்கூ… ஒரு கவிதை…. சவுண்ட் எபக்ட்தான் படத்தின் சிறப்பான அம்சம். இளையராஜாவின் பாடல்களை சரியாக பயன்படுத்தியிருப்பது… ஆடல்பாடல் கலைஞர்களையும் கதாபாத்திரங்களாக உலாவவிட்டுருப்பது, வெறித்தனமான ரசிகனின் ரசிக்கத்தன்மையை வெளிப்படுத்துவது. கண்ணில்லாதவர்களின் உலகை கூடுமானவரை, உறவினர்களின் சுயநலத்தை, நல்இதயங்களின் செயல்களையும். கண்ணில்லாதவருக்கு பாடம் கற்பிப்பவரையே காதலானக தவறாக நினைத்து வாழும் கதாநாயகி, எதார்த்ததை புரிந்து கொள்வதும், பழைய துணிகளை அணிந்துகொள்ள கொடுத்ததை ஏற்காமல் தன்னுடைய கர்சீப்பை அதனில் வைத்துவிட்டு வருவது 100 சதவீதம் கௌரமாக வாழ கண் அவசியம் இல்லை என்பதை நிரூபிப்பது என… அனைத்து வகையிலும் குக்கூ.. ஒரு கவிதை. சல்யூட் ராஜீமுருகன் சார்.

கண்களுடன் இந்த உலகை எதிர்கொள்ளும் நாம், கண்ணில்லாமலே நம்மிடையே வாழ்ந்து வரும் எண்ணற்றவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவிய அனைத்து தொழில்நுப்ட கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
கருப்பு திரையில் சப்தங்களுடன்... நாம் யாரை பற்றிய படத்தை பார்க்க போகின்றோம்..
என்பதை சப்தங்கள் மூலம் உணர வைக்கின்றார். இயக்குனர் ..
கதைக்கு ராஜூ முருகன் எங்கேயும் அலையில... தான் பத்திரிக்கையில வேலை செய்யும் போது கட்டுரைக்கு ரெடி பண்ணும் போது சந்திச்ச விஷயத்தை அவர் அசல்ட்டா திரைக்கதையாக்கி இருக்கின்றார்... இப்படி திரைக்கதையாக்கியதில் ஒரு பெரிய நல்ல விஷயம்.. செஞ்சோற்று கடனையும் தீர்த்து விட்டார்... விகடன் கண்ணன் எல்லாம் என்னதான் மாய்ந்து மாய்ந்து லட்சம் எடிஷனை ரெடி பண்ணாலும் அவர் வேலை பார்க்கற ஆனந்த விகடன்லேயே ஒரு போட்டோ போட்டுக்க சாத்தியமே இல்ல... பட் அவரை செல்லுலாய்டில் சிறை பிடிக்க வைத்ததில் இருந்து , அவருடைய திரையுலக குரு லிங்குசாமியை நடிக்க வைப்பதில் இருந்து செஞ்சோற்றுகடனை முதல் படத்திலேயே தன் திரைக்கதை மூலம் தீர்த்துக்கொண்டார்... அந்த ஒரு டச்சிங்காக வெல்டன் அன்டு ஒன்டர்.
சட்டுன்னு தினேஷ் என் மனசுல பச்சக்குன்னு ஓட்டிக்கனது எங்க தெரியுமா? கண்ணை மேல பார்க்கற நடிப்புல இல்லை... கல்யாண வீட்டுல இளையராஜா பாட்டை பாடும் போது,ஒரு மாதிரி தலையை ஆட்டி கைய ஒரு மாதிரி மடக்கனாம் பாருங்க...சான்சே இல்லை..
ஒரு டிவி பேட்டியில அட்டக்கத்தி தினேஷ் பேட்டிக்கொடுக்கறதுக்கு பக்கத்துல இருந்தவர் மீது சாய்ந்துக்கிட்டு தெனாவெட்டா பேட்டி கொடுத்த போது சட்டுன்னு ஒரு எரிச்சல்.... பட்.... படம் பார்க்கும் போது அது ஆர்வக்கோளாறு என்றும் இன்னும் சின்ன பையானக இருக்கின்றார் என்றும் உணர முடிந்தது. சான்சே இல்லை.. அசத்திட்டான்யா மனுஷன்... கண்ணு தெரியாம கமல் மட்டும்தான் திரையுலகில் டெடிகேஷனாக நடிக்க முடியும் என்று கடந்த தலைமுறையின் பிம்பத்தை சுக்கு நூறாக்கி இருக்கின்றான் குக்கூ படத்தின் ஒவ்வோரு பிரேமிலேயும்.
அந்த பொண்ணு மாளவிகா... மலையாள இறக்கு மதி.. ஏற்கனேவே மலையாளத்துல வழக்கு எண் படத்துல அசத்திய பொண்ணு... இயக்குனர் பாலாஜி சக்திவேல் ரெக்மன்ட் செய்ய ராஜு முருகன் அதை மோல்ட் பண்ணட்டார்... என்ன நடிப்பு..
தங்கள் வேதனையை மறைத்து கொள்ள சமுகத்தில் தங்களையும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றுதான் நிறைய நக்கல் கலாய்ப்பில் மாற்று திறனாளில்கள் ஈடுபடுவார்கள்... அவர்கள் முகத்தில் அடித்தால் போல நேரில் சொல்லாவிட்டாலும்...
ங்கோத்தா நான் சொல்லை... நொண்டிக்கு நூத்தி எட்டு குறும்புடா.... ஷீலா மாரு எலுமிச்சை பழ சைசுக்கு இருக்குன்னு எப்படி நக்கல் உடறான் பார்த்திய அந்த நொண்டிப் பு...........!
ஆனால் இவர்கள் பப்பாளியில் இருந்து தேங்காய் வரை பேசி இருப்பார்கள்... ஆனால் மாற்றிதிறனாளி நண்பர்களில் அப்படி பேசினால் தாங்காது.. காரணம்,.. உன்னை விட நான் இந்த கடவுளால் நன்றாக படைக்க பட்டு இருக்கின்றேன்... நீ பேச அருகதை இல்லை.. எனக்கு மட்டுமே பேச அருகதை உள்ளது.. எனக்கு மட்டும்தான் கொம்பு இருக்கின்றது என்று கங்கனம் கட்டிக்கிட்டு கொண்டு இருப்பார்கள்.. உணர்வு என்பது யாவருக்கும் ஒன்றுதான் என்பதை உணராத மூடர்கள்... அல்லது அப்படியே வளர்க்கப்பட்ட பொது புத்தியும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
மாற்றி திறனாளிகளின் காதல்... இரண்டு பேருக்குமே இருக்கும் உணர்வு ஏக்கங்கள் விரசம் இன்றி செல்லுலாய்டில் சிறை பிடித்து இருக்கும் ராஜு முருகனுக்கு நன்றிகள்.
முக்கியமா அந்த பொண்ணை எந்த இடத்திலேயும்.. தப்பா ஒரு பிரேம் கூட வைக்கலை.. ஷேர் ஆட்டோ ஜிலாக்கி கொடி உடம்பை ரசிக்கின்றான் என்று ஒரு ஷாட் வைத்து இருந்தாள் யாரும் எதுவும் கேட்டு விட முடியாது... ஆனால் ஒரு கேக் வாங்கி பாதி கடிச்சிட்டு அதை கொடுத்து அவளை தின்ன வைக்க முயற்சிப்பது போல எடுத்த காட்சி கிளாஸ்..
டெர்மினேட்டர்ன்னு நினைக்கறேன்... சிறையில் இருக்கும் நாயகியை செக் பண்ணும் போது காமத்தை வெளிப்படுத்த நாயகி கன்னத்தை அப்படி நக்குவான்.... அவ்வளவுதான்... அது போல ஒரு காட்சி அமைப்பு...
படத்துல ரொம்ப ரசிச்ச விஷயம் சந்திரபாபு இசைக்குழு அப்படியே துருத்திக்கிட்டு இருக்காம இயல்பாக இருந்தது...
வினோத் ஓட்டலுக்கு அழைச்சிக்கிட்டு போய் கொடிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறது... பழைய துணியை அயர்ன் பண்ணி பேக்ல கொடுக்கும் போதும்,. சாப்பிடும் போது அதை எடுத்து செல்போன்ல போட்டு லைக் வாங்கறதை பப்ளிசிட்டி மைன்ட்ல செய்ற அந்த ஷாட்டும் அதுக்கு கொடி வெதும்புற வெதும்பல் இருக்கே.. சான்சே இல்லை...
படத்துல வரும் சந்திரபாபு கேரக்டர் சான்சே இல்லை.... அந்த டுருப்பு.. அஜித்து விஜய், எம்ஜிஆர்... வாழ்ந்து இருக்கின்றார்கள்.. அதை விட எம்ஜிஆர் பிம்பத்துக்கு லைட்டிங் கம்மியான இடத்துல நிக்க வச்சி... அப்படியே முன்னாடி நடந்து வரும் போது புல் லைட்டுக்கு வந்து அதுக்கு ஒரு சின்ன ஆர் ஆர் போட்டு.... அப்படியே செயினை கழட்டி போடுறான் பாரு மனுஷன்... அதுதான் எம்ஜிஆர் நிழலா இருந்தாலும் புத்தி வள்ளல்தன்மைன்னு சொல்லறதும் அதை காட்சி படுத்திய விதமும் அருமை.. ஸ்டேஜ்ல வேஷம் கட்டிக்கிட்டு இருக்கும் போது... மூனு லட்சம் பணம் கேட்டு எம்ஜிஆர் வேஷத்தோடு வந்து செயினை கழட்டி கொடுத்து இருந்தா கூட இவ்வளவு ரசனையா நெகிழ வைக்கறாப்பபோல இருந்து இருக்காது. கிளிஷேவா இருந்து இருக்கும் ... அப்படி கிளிஷேவா எழுதி இருந்தா... இப்படி கொண்டாடி அந்த ஷாட்டை எழுத போறது இல்லை....
டிரெயின்ல கண்ணு தெரியாதவங்க... விக்கற பொருள் எங்க வாங்கறாங்க.... எங்க கடனுக்கு கொடுப்பாங்க... எல்லாத்திலேயும்.. அவ்வளவு டீடெயில்.... மூர்மார்கெட்டின் இன்னோரு பக்கத்தை புட்டு புட்டு வச்சி இருக்காப்புல... முக்கியமா கடை வச்சி இருக்கும் பார்வையற்றவர்... என்ன தொள்ளாயிரம்தான் இருக்கு... நல்லா எண்ணி பாருங்க..1100 கொடுத்து இருக்கேன் என்று கலாய்க்க... ஆயிரம் என்று ஒத்துக்கொள்ளும் காட்சிகள்.. அவருக்கு பிறந்த குழந்தையை கொடி தடவி பார்த்து குழந்தையின் லுல்லு அருகே கை வரும் போது காட்டும் எக்ஸ்பிரஷன் மற்றும் பாடிலாங்வேஜ்.... அருமை.
ரிடிங் கிளாஸ்ல டிச்சர் சொல்லிக்கொடுக்கறது ரம்பமாவும் அவ பேசறது மழை சாரல் போலவும் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்து அழகாக்கும் காட்சிகள்...
தடவிதான் உணர வேண்டும்... அம்மா மொகம் பார்க்கவங்க பாருங்க என்று வெட்டியான் சொல்ல.... அம்மா முகத்தை தடவும் போது நமக்கு கண்ணிர் எட்டிப்பார்க்கின்றது.
செக்யூரிட்டி அண்ணன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது இல்லை என்று சொல்ல.. எங்க அண்ணி வச்ச கருவாட்டு கொழ்ம்பு எனக்கு தெரியாதா என்று சொல்லும் காட்சி நெகிழ்ச்சி. அதே போல அந்த அண்ணி முஞ்சி எங்ககேயோ பார்த்த பழக்கப்பட்ட முகமா இருக்கேன்னு நினைச்சேன்... கடைசியல அது தங்க மீன் டீச்சர்.
திணேஷ் கூட வரும் அந்த பார்வையற்ற இளைஞர் இளங்கோ... மார்க் போடும் நண்பர் முகம் நிமிர்ந்து பார்க்காம ஆஸ்திரேலியா சட்ட ஒழுங்கை பற்றி கவலை படும் அம்பி என்று அநியாயத்துக்கு போகின்ற போக்கில் தட்டி விட்டு அசத்துகின்றார் முருகன்.
அரசியல் நையாண்டிகள் அருமை
ஜெனிவா மாநாடு என்று சொல்லும் போது அரசியல் பேசாதே என்று மறுக்கும் சந்திரபாபு...
முக்கியமாக எனக்கு ஓம் நமச்சிவாயம் கேரக்டர் ரொம்ப புடிச்சி இருந்துச்சி... அது சட்டுன்னு டேய் அண்ணணுக்கு எல்லாம் வேல்யூ இல்லை... தம்பிக்குதான் வேல்யூ அப்டேட்டா இருங்கடான்னு போகிற போக்கில் கலாய்த்து வாருகின்றார்.
இரட்டை அர்த்தங்களை பளிசின்னு சொல்லாம... ஹலோ.. என்ன பிங்க்... ஸ்டாபெர்ரி வாசனையெல்லாமா வருது...?
செக்யூரிட்டி அண்ணன் நானும் குடும்பத்துக்கு உழைக்கின்றேன் என்று சொல்ல அண்ணிக்காரி வயிற்றை தடவும் காட்சிகள் கவிதை.
கேமரா கோணத்துக்கு வேணா எலக்ட்ரிக் டிரெயின்ல புட் அடித்து காதலை பில் பண்ணுவது போல ஷாட்டு எடுத்து இருக்காங்க... ஆனா எதாவது எலக்ட்ரிக்கல் போஸ்ட்டுல அடிச்சி திகேஷ் பிராணனை விட்டுடப்பபோறான்னு மனசு அடிச்சிக்குது பாருங்க.. அது தான் அந்த கேரக்டர்கள் நம்ம மனசுல நல்லா உட்காந்துடுச்சின்னு சொல்லும் காட்சிகள்.
பாட்டு சான்சே இல்லை... நிலவே.... சோறுட்டுதேன்னு சொல்லும் போது வயிறு குழச்சிடுச்சி. எல்லாம் சாங்கும் அருமை... ஒளிப்பதிவில் டாப் ஆங்கிள் ஷாட்.. என்ஜின் டிரைவர் கேபின் ஷாட்.. முக்கியமா மழை பேயும் போது காலியா இருக்கும் பிளாட்பாரம்.. என்று நிறைய கவிதையான காட்சிகள்.
இளையாராஜா பாட்டு கேட்கும் போது எல்லாம் நெகிழ வைக்குது..25 வருஷம் அந்த ஆளு இசை மட்டும் கேட்டு வளர்ந்த மனசு.. அதான் காரணம்.
படத்தின் குறை அதுவும் ராஜூ முருகன்தான்..
ராஜு படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் போது அருமை.. ஆனால் இடைவேளையில் தினேஷை கூட்டம் மொத்தி எடுக்கும் போது ஆட்டோகிராப் சேரன் போல நிற்பதும்... சதர்ன் ரயில்வே லோக்கல் டிரெயின் டிக்கெட் கட்டிடத்துக்கு மேல தினேஷ் இடம் கதை கேட்கும் காட்சிகளில் கஞ்சி போட்ட சட்டை போல விறைப்பாய் உட்கார்ந்த கொண்டு கேட்பது.... லிங்குசாமி சாங் சிக்வென்ஸ் எடுத்துக்கொண்டு இருக்கும் போது.. போன் வர விகடன் வாசகர் அந்த பொண்ணை பார்த்தேன் என்று சொல்லும் போது என்னமாதிரி எக்ஸ்பிரஷன் கொடுத்து இருக்க வேண்டும்? ம்ஹூம்.... கொஞ்சம் நடிக்க பாஸ் என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.. சில லாஜிக் மீறல்கள்... இது சினிமா தானே.. அப்புறம் லாஜிக் மீறல் இல்லைன்னே???
சான்சே இல்லை... படம் ஒன்டர்.... அனைவரும் குடும்பதோடு தியேட்டரில் போய் அவசியம் பாருங்கள்...
==========
படத்தின் டிரைலர்..
============
படக்குழுவினர் விபரம்
Directed by Raju Murugan
Starring Dinesh
Malavika
Music by Santhosh Narayanan
Cinematography P. K. Varma
Editing by Shanmugam Velusamy
Studio Fox Star Studios
The Next Big Film Productions
Release dates
March 21, 2014[1]
Country India
Language Tamil
கருத்துகள்
கருத்துரையிடுக