Uncanny Valley – when human features look and move almost, but not exactly, like natural human beings, it causes a response of revulsion among some human observers. 1. ’அன்கேன்னி வேலி’ என்று இங்லீஷில் ஒரு உளவியல் பதம் உள்ளது. என்னவென்றால், மனிதர்களைப் போலவே சில உருவங்களை உருவாக்கி நடமாடவிடுகிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். அவைகள் மனிதர்கள் போலவே கைகால்களை ஆட்டுகின்றன. பேசுகின்றன. நடக்கின்றன. அவைகளைப் பார்த்த மாத்திரத்தில் நிஜமான மனிதர்களுக்கு முதலில் மனதில் தோன்றும் உணர்ச்சி வெறுப்புதான் என்று இந்தத் தியரி சொல்கிறது. 2. ஹாலிவுட்டின் சரித்திரத்தில் முழுவதும் Performance Capture தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் – Polar Express. இந்தப் படத்தைப் பார்த்த பலரும், அதன் அனிமேஷன் மிகவும் கொடுமையாக இருந்ததாகச் சொல்லியிருக்கின்றனர். சிலருக்கு அந்த அனிமேஷனைப் பார்த்ததும் பய உணர்ச்சியும் வந்திருக்கிறது. இது ஏனெனில், நாம் மேலே பார்த்த உளவியல் விஷயம்தான். Uncanny Valley. எதுவுமே முதன்முதலாக இப்படிச் செய்யப்படும்போது அதனை அடிமனம் வெறுக்கத்தான் செய்யும் என்பதே இதன் சாராம்...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்