முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டைம் பாஸில்

விகடன் குழுமத்தில் பணிபுரியும் நண்பர் பூகோ சரவணன் ஒரு சிறந்த பத்திரிக்கையாளர். சமூக உணர்வு உள்ளவர்.  என்னை பத்திரிக்கையாளர் டி.என்.கோபாலன் ஆதரிப்பது குறித்து ஆதங்கப்பட்டு இப்படி எழுதியிருக்கிறார்.  பூ.கொ. சரவணன் 2 hours ago பெண்களை கேவலமாக பேசுபவர்களை,அவர்களைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்புவர்களை மரியாதைக்குரியவர்கள் என எண்ணுகிற பலர் தட்டிக்கொடுத்து ஆதரிப்பதை பார்க்கிற பொழுது ஆயாசம் உண்டாகிறது. சித்தாந்தத்தை எழுத்தில் மட்டும் கொண்டால் எப்படி ? வயதானாலும் வக்கிரம் பிடித்தவர்களுடன் கூட்டு தேவையா என யோசிக்க. சமூகத்தின் அழுக்குக்காக இப்படியொரு தட்டிக்கொடுத்தல் எனக்கிளம்பி நீங்கள் அத்தனை அசுத்தமாகியிருக்கிறீர்கள் ஐயா இது டைம் பாஸில் வெளியாகியிருக்கும் இரு சாம்பிள் படங்கள். நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் நியாயமாக இருந்தாலும், ஜட்டி பாடி படத்தை மட்டுமே போட்டு பணம் சம்பாதிக்கும் பாலசுப்ரமணியனின் மகன் சீனிவாசனிடம் போய் முதலில் பேசுங்கள். அய்யா, இப்படி ஜட்டி, பாடியோடு பெண்களின் படத்தை போடுவது, அவர்களை கேவலமாக சித்தரிக்கிறது என்று சொல்லுங்கள். பேச மாட்டீர்கள். ஏனென்றால் சீனிவாசன், உங்...

ரியல் எஸ்ட்டேட் என்னும் கொலைகாரர்கள்..

இக் கொடுமை தொடரும்   முகலிவாக்கம் மீட்புப் பணி கோடைக்காலம் முடிந்து வரும் முதல் மழை எப்போதும் மகிழ்ச்சியினை அளிக்கும். வெயிலின் கொடுமையை இரண்டு மூன்று மாதங்களுக்கு அனுபவித்து வந்தவர்கள், அந்த முதல் மழையில் தாங்களாகவே நனைந்து குதூகலிப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு வந்த முதல் மழை பெருந்துயரை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடத்தில் மஞ்சள் நிற ஹெல்மெட் அணிந்து வட இந்தியர் பலர் பணியாற்றி வருவதை பார்த்திருப்போம். மாலை வேலைகளில் அவர்களின் பேருந்துகளுக்காக அவர்கள் காத்திருப்பதையும் பார்த்திருப்போம். வட மற்றும் கிழக்கு இந்தியாவில் இருக்கும் கடுமையான வறுமை அவர்களை தமிழகம் போன்ற மாநிலங்களை நோக்கித் தள்ளுகிறது. கட்டுமானப் பணிகளுக்கு தமிழகத்தில் போதுமான கூலியாட்கள் கிடைக்காத காரணத்தாலும், மாநிலம் மாறி வந்துள்ளோரை கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போல பயன்படுத்தலாம் என்ற காரணத்தாலும் பெரும்பாலான கட்டிட ஒப்பந்தக்காரர்கள் அவ்வப்பாவி மக்களை இடைத்தரகர்கள் மூலம் பெருமளவில் தருவிக்கின்றனர். அவர்களும் பெட்டி படுக்கையோடு வந்து கட்டுமானம் நடக்கும் இடத்திலேயே தகர...