“ தங்களுடைய விலைப்புள்ளிதான் குறைவானது என்று சீன நிறுவனம் எடுத்து வைக்கும் வாதத்தை, நிதித்துறை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளக்கூடும். ஆனால் அவ்வாறு நிபுணர்கள் செய்யும் ஆய்வை நீதிமன்றம் செய்ய இயலாது. இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் சட்டரீதியான விவகாரங்கள் குறித்து ஆராய வேண்டுமே ஒழிய, நிதி தொடர்பான விவகாரங்களில் நுழையக்கூடாது. மின் வாரியம் கூறியபடி பார்த்தால், இந்த விவகாரத்தில் மறைமுக கட்டணம் இருக்கும் என்று தெரிகிறது. ஆக மின் வாரியம், இந்த விவகாரத்தில் ஒரு கணக்கு போட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு, நீதிமன்றம் ஒரு நிபுணரின் பணியை எடுத்து, எது குறைந்த விலைப்புள்ளி என்று கணக்கிட இயலாது. ஆகையால் இந்த வாதத்தையும் நிராகரிக்கிறேன். சீன நிறுவனம், மற்றும் பெல் நிறுவனம் இரண்டையும் ஒப்பிடுவதற்கான பொதுவான அளவுகோல்கள் இல்லை. சீன நிறுவனம் பழமையான நிறுவனம் என்றால், பெல் நிறுவனம் அனுபவம் வாய்ந்த நிறுவனம். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு திட்டங்களை கையாண்ட அனுபவம் மிக்க பெல் நிறுவன...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்