பாலாவின் படங்களை சிலரால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை அதற்கான காரணம் என்னவென்று யோசியுங்கள், அவர் காட்டும் வாழ்வியல் கொடூரங்கள் பற்றி நமக்கு எதுவுமே தெரியாத ஒரு சாந்தமான வாழ்வை வாழ்கிறோம், அதனாலேயே அந்த காட்சிகளோடு நம்மால் ஒன்ற முடியவில்லை, நான் கடவுள் பிச்சைக்காரர்கள் காட்சி பலவை எல்லாமே வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் போன்று தோன்றும் அதற்கான காரணம் அப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறதென நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நமக்கு தெரியாத உலகத்தில் உள்ளவைகளை கண்முன்னே கொண்டுவருகிறார் அதோடு ஒன்ற முடியாமல் தவித்து கடைசியாக இப்படியெல்லாம் காட்சிப்படுத்திய பாலா ஒரு சைக்கோ என்று முடிவு செய்துவிடுகிறோம். பாலாவை சைக்கோ என்று சொல்லுங்கள் அவர் விளிம்புநிலை மக்களின் அவலம் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களின் வாழ்வையும் ஒப்பிடவைத்து, இப்படியான வாழ்க்கையின் கோரமுகம் தெரியாத நீங்கள்தான் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்! என்பதையும் உணர்த்துகிறார். தாரைதப்பட்டை ........................... ஒரு கலைஞனுக்கு தன் கலையின் மீதான கர்வம் அது தரும் திமிர் என ஆரம்பமே ராஜாவின் ராஜாங்கத்தோடு கலக்கல் உளவியல், காசுக்காக தன...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்