பாலாவின் படங்களை சிலரால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை அதற்கான காரணம் என்னவென்று யோசியுங்கள், அவர் காட்டும் வாழ்வியல் கொடூரங்கள் பற்றி நமக்கு எதுவுமே தெரியாத ஒரு சாந்தமான வாழ்வை வாழ்கிறோம், அதனாலேயே அந்த காட்சிகளோடு நம்மால் ஒன்ற முடியவில்லை, நான் கடவுள் பிச்சைக்காரர்கள் காட்சி பலவை எல்லாமே வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் போன்று தோன்றும் அதற்கான காரணம் அப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறதென நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நமக்கு தெரியாத உலகத்தில் உள்ளவைகளை கண்முன்னே கொண்டுவருகிறார் அதோடு ஒன்ற முடியாமல் தவித்து கடைசியாக இப்படியெல்லாம் காட்சிப்படுத்திய பாலா ஒரு சைக்கோ என்று முடிவு செய்துவிடுகிறோம். பாலாவை சைக்கோ என்று சொல்லுங்கள் அவர் விளிம்புநிலை மக்களின் அவலம் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களின் வாழ்வையும் ஒப்பிடவைத்து, இப்படியான வாழ்க்கையின் கோரமுகம் தெரியாத நீங்கள்தான் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்! என்பதையும் உணர்த்துகிறார்.
தாரைதப்பட்டை
...........................
ஒரு கலைஞனுக்கு தன் கலையின் மீதான கர்வம் அது தரும் திமிர் என ஆரம்பமே ராஜாவின் ராஜாங்கத்தோடு கலக்கல் உளவியல், காசுக்காக தன் கலையை சிதைக்க விரும்பாத கலைஞர்களை வணங்கியே தீரவேண்டும் அப்படியான ஒரு கதாபாத்திரமே 'சாமி புலவன்' / தன் கலைக்கு மரியாதை இல்லை என்று தெரிந்து தானாகவே ஒதுங்கி வாழும் சுத்தகலைஞன், / இடரினும் பாடல் முடிந்ததும் தன் வித்தைக்கு மதிப்பிருப்பதை எண்ணி புளகாங்கிதம் அடைவதாக இருக்கட்டும், தமிழே தெரியாமல் என் பாடலை நீ புரிஞ்சுகிட்டே அதனால் உனக்கு இந்த சன்மானம் என்று சன்மானமாய் கிடைத்த மாலையை கழட்டி அவன் கழுத்தில் போடுவதாக இருக்கட்டும் அது ஒரு கலைஞ திமிர்., தன்னை நிரூபித்த உவகையில் செத்துப்போவது வரம். (எனக்கு இந்த பாடலின் போது மோகமுள் படத்தில் வரும் 'நெஞ்சே குருநாதனின்' பாடல் அதன் சூழல் நினைவில் வந்தது )
ஊர் திருவிழாக்களில் கரகாட்டம் நேரில் பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும் எந்த அளவுக்கு கரகாட்டத்தின் உண்மை தன்மையோடு படம் பொருந்தி போயிருக்கிறதென, வரலட்சுமி அப்படியே டிபிகல் கரகாட்டக்காரிதான், இடுப்பை வெட்டிக்கொண்டே ஒருகாலை தூக்கி ஆடுவது எனக்கு வெகு பரிச்சயம். ஆடும்போது கரகாட்டக்காரியின் இரண்டு கால்களும் ஒருசேர தரையிலேயே நிற்கவே நிற்காது நின்ற இடத்தில் இல்லாமலே எல்லாமே அடியெடுத்து வைத்த ஆட்டம்தான் பம்பரமாக சுழன்று கொண்டே இருப்பார்கள். வரலட்சுமி ப்பா கொன்னு எரிஞ்சுருக்கா, படத்துல ஆச்சர்யாம் என்றால் அது அமுதவானன்தான் செமையா நடிச்சிருக்கான், அமுதவானனுக்கும் ஆனந்திக்கும் இடையேயான கரகாட்ட நையாண்டி பாடல் போல தான் இன்னும் எங்க ஊரில் கரகாட்டம் நடக்கிறது, . இது போதாதென காயத்ரிரகுராம் வேறு வந்து கலக்கிட்டு போவும்/
உச்சபட்ச வெறித்தனம் என்றால் அந்தமானில் காலில் காயத்தோடு ஆடிவிட்டு வரலட்சுமி மயங்கி விழுவதுதான். த்தா மிரண்ட்டேன். ''என் மாமனுக்கு பசின்னு வந்தா நான் அம்மணமா கூட ஆடுவேன்'' / காதலை உணர்ந்தால் கண்ணீர்தான் வரும், இந்த இடத்தில் பொசுக்கென்று கண்களில் நீர் கோர்க்கிறதா? வரலட்சுமி சசிகுமாரின் மீது கொண்ட காதலை உங்களால் உணர முடிகிறது என்றர்த்தம். / இதுதான் பாலா, இந்த அழகிய உளவியலை கச்சிதமாக கையாள முடிந்த ஒருவனால் உங்களை கொடூரமான மனநிலைக்கும் கொண்டுபோக முடியும், வில்லனின் கழுத்தை அறுக்கும் போது உங்கள் கையில் ரத்தப்பிசுபிசுப்பை உணர வைக்க முடியும், பாலா சைக்கோ அல்ல உங்களை சைக்கோவாக மாற்றிவிடுவார் ஜாக்கிரதை, ஆனால் அது முழுக்க முழுக்க ராஜாவின் துணை இல்லாமல் நிகழவே நிகழாது. நினைத்தது போலவே தாரைதப்பட்டை தீம் மியூசிக்கை வில்லனை கொல்லும் போது போட்டு கிறுக்கு பிடிக்க வச்சிட்டார்
நான்கடவுளில் பிச்சைக்கார கூடம் அதே போல இதில் விபச்சார வாழ்க்கை என்று சாதரணமாக சொல்லிவிடலாம்தான்., நன்றாக கவனியுங்கள் படத்தில் விபச்சராத்தின் பின்னணியில் என்னென்ன நடக்கிறதென்று டீட்டைலாக சொல்லப்பட்டிருக்கும். வாடகைத்தாய், பாக்கெட் money க்காக விபசாரத்திற்கு வரும் கல்லூரி மாணவி., என்று போகிற போக்கில் அதிர்ச்சி தகவல்கள்.
இப்படி ஒரு கதைக்களத்தை பாலாவை தவிர வேறு யாராலும் கற்பனை கூட செய்யமுடியாது. !!!!!!!!!!! .

கருத்துகள்
கருத்துரையிடுக