முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லீனா மணிமேகலையின் லெஸ்பியன் கவிதைகள்

அதற்குப் பிறகு 1. இந்த செம்போந்து பறவை ஏன் என் கூண்டில் வந்து முட்டை வைத்தது பால் சுரப்பியான எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை அக்குளிலும், தொப்புளிலும் மாற்றி மாற்றி வைத்து அடை காத்தேன். குஞ்சு பொரிந்து வௌவால் பிறந்தது அதற்குப் பிறகு தலைகீழாக நடக்கத் தொடங்கினேன் இரவில் மட்டுமே கண்கள் ஒளிர்ந்தன தின்று துப்பிய அத்திப்பழ கொட்டைகளையும், நாவற்பழ விதைகளையும் என் காதலர்கள் பொறுக்கத் தொடங்கினார்கள் காடு நிறைத்தது தவளைகளின் இசை 2. தனிமை நிர்வாணித்திருந்த என் கையின் பங்குனி மலரைத் திருடிச் சென்றது நெல்சிட்டு அது பறந்த வயல்களில் பயிர்கள் மஞ்சள் நிறத்தில் விளைந்தன மகரந்த சோறுண்டு பிறந்த உயிர்களுக்கு எல்லாம் மூன்று கைகள் எதிர்வுகளுக்குப் பழகிய குறுக்கு கோடுகள் உறைந்துப் போயின கணக்குகள் பொய்த்தன துரோகிகள் என பார்த்த இடத்தில் நெல் சிட்டுகளைச் சுட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன அதற்குப் பிறகு செடிகள் பூக்கவே இல்லை 3. நான் இடலை மரம் என் பசிய இலைகள் காற்றசைவிற்கே பற்றிக் கொள்ளும். எரியும்போதெல்லாம் வாகையின் செந்நிறப் பூக்களெனப் பறிக்கப் போய் சுட்டுக் கொள்கிறாய் உன் தீப் புண்களை அறுவாடென நினைத்து...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...