பிரா..ஆம்..பிரா!
இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள் ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று.
பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை.
பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன் ஒன்றாக சேர்த்து பிராக்களை காயப்போடுவது கூட அநாகரீகமாம்.அதுவும் வீட்டில் அண்ணன்,தம்பி யாரவது இருந்துவிட்டால்..பார்த்துவிட்டால் போதும் நிலைமை இன்னும் மோசம்,துண்டுக்குள் வைத்துச் சுருட்டிக் கொண்டுதான் குளியல் அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமாம்.."ஷாப்பிங் போறியா அண்ணா.. எனக்கு பிங்க கலர்ல் ஒரு பிரா வாங்கிட்டு வாயேன்" என எங்கேயாவாது பெண்கள் சொல்லிக் கேட்டு இருக்கிறீர்களா? மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின் விளம்பரங்களில்கூட உதிரபோக்கைக் குறிக்க நீல நிற நீரைத்தான் காட்டுகிறார்கள். மாதவிடாய்,நாப்கின்,பிரா எனப் பெண்கள் சார்ந்த விஷயங்களைச் சுற்றி எதற்கு தேவை இல்லாத இத்தனை மர்மங்கள்?அதுவும் "பிரா" என்ற வார்த்தை உச்சரிக்கபடவே கூடாத கெட்ட வார்த்தையா என்ன?
ஆடைகளுக்கு உள்ளே அணியப்பட்டிருக்கும் பிரா ஸ்ட்ராப் அவ்வப்போது வெளியே தெரிவது ஓர் இயல்பான விஷயம்தானே என,ஏன் நம்மால் பார்க்க முடிவதில்லை.அப்படி வெளியே தெரியும் பிரா ஸ்ட்ராப்பை உள்ளே தள்ளமால் விட்டால் போதும், வளர்ப்பு சரியில்லை,பெத்தவங்களைச் சொல்லணும்" என ஒட்டுமொத்த குடும்ப மானத்தையே அந்த சிறிய பிரா ஸ்ட்ராப்பில் பதுக்கி வைக்கவேண்டிய அவசியம்தான் என்ன?
இவ்வாறான அத்தியாவசிய விஷயங்களைக்கூட நாம் யாருக்காக taboo வாக மாற்றி வைக்கிறோம்? திரைப்படங்களில் எத்தனை உள்பாடி ஜோக்குகள் இன்னும் வந்துகொண்டே இருக்கின்றன!
செருப்பு,சாக்ஸ்,சுடிதார்,லெக்கின்ஸ், வாட்சு போல பிராகூட பெண்கள் பயன்படுத்தும் மற்றொரு தேவையே என்பதை இந்த வாட்ஸப் காலத்திலாவது மக்கள் உணர்ந்தால் நல்லது!.
கட்டுரையாளர் கோ.இராகவிஜயா...
2015 _2016 ஆம் ஆண்டுக்கான விகடனின் சிறந்த பயிற்சி பத்திரிக்கையாளர் விருது பெற்றவர்
2015 _2016 ஆம் ஆண்டுக்கான விகடனின் சிறந்த பயிற்சி பத்திரிக்கையாளர் விருது பெற்றவர்
வீட்டுவாடகை தருவதற்காக மேல்மாடியில் வசிக்கும் உரிமையாளர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். உரிமையாளரின் 10 வயது பையன் ஐ திரைப்படத்தை விசிடியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
அண்மையில் இந்தப் 10 வயது யைனின் அம்மாவுக்கும் இவளுக்கும் விவாதம் ஒன்றாகிப் போனது. அவர்களது வீட்டிற்குச் சென்ற பத்ரி படுக்கையறை வரைக்கும் ஓடி விளையாடியிருக்கிறான். உலர்த்திக் குமியலாகக் கிடந்த துணிகளில் சில கட்டிலில் இருந்து வழுவிக் கீழே விழுந்திருக்கிறது. அதில் இந்தப் பெண்ணின் ப்ராவும் விழுந்திருக்கிறது. அவற்றை எடுத்துக் கட்டிலிலேயே போட்டுவிட்டு ”ஆன்டி உங்க ட்ரெஸ் ப்ராவெல்லாம் கீழே விழுந்திச்சி எடுத்து கட்டிலில் வைச்சிருக்கேன்” என்று சொல்லியிருக்கிறான்.
”ச்சீ, என்ன பேசுற நீ வீட்டுக்கு போ” என்று அவனை அனுப்பிவிட்டிருக்கிறார். சாதாரணமாக பத்ரி யார் வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டான். இவளும் அனுப்புவதில்லை. அதற்கான அவகாசம் எங்கள் இருவருக்கும் கிடைப்பதுமில்லை. சொற்பமாகத்தான், ”மேலே போய்ட்டு வரட்டுமா, ஐஞ்சே ஐஞ்சு நிமிஷம்தான்” என்று கேட்பான். அப்படியே குரல் கொடுப்பதற்குள்ளாக வந்துவிடுவான்.
”ச்சீ, என்ன பேசுற நீ வீட்டுக்கு போ” என்று அவனை அனுப்பிவிட்டிருக்கிறார். சாதாரணமாக பத்ரி யார் வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டான். இவளும் அனுப்புவதில்லை. அதற்கான அவகாசம் எங்கள் இருவருக்கும் கிடைப்பதுமில்லை. சொற்பமாகத்தான், ”மேலே போய்ட்டு வரட்டுமா, ஐஞ்சே ஐஞ்சு நிமிஷம்தான்” என்று கேட்பான். அப்படியே குரல் கொடுப்பதற்குள்ளாக வந்துவிடுவான்.
மேல் வீட்டு ஆன்டி முகத்தைச் சுழித்துக் கொண்டு வீட்டுக்குத் திருப்பியனுப்பியது குறித்து பத்ரி எதுவும் சொல்லவில்லை. அன்று மாலை அந்தப் பெண் ஏதோ ரகசியமாகப் பேசுகிறவர் போல இவளிடம் வந்தார். ”என்ன பத்ரியம்மா, பிள்ளையை இப்படி வளர்த்திருக்கீங்க” என்றபோது நெஞ்சுக்குள் பகீரென்றது.
சிங்கிள் மதராக பிள்ளையை வளர்ப்பதென்பது சாதாரண தாயின் பொறுப்புக்களை விடவும் இரு மடங்கு அதிகமானது. எங்களுரில் ஒரு சொலவடை உண்டு. ”கண் பொஞ்சாதி வளர்த்த கழிசடை போல” என்று. ஆண் துணையில்லாத பெண் வளர்த்த பிள்ளை கழிசடையாகிப் போவான் என்கிற சொலவடை இது.
”பிள்ளையை இப்படி வளர்த்திருக்கீங்களே” என்றபோது கொஞ்சம் கலக்கமாகத்தான் இருந்தது. ப்ராவை அவன் தெரிந்திருப்பதுதான் பிரச்சினை என்று தெரிந்து கொண்டபோது ஆசுவாசமாக அவர் சொல்வதைக் கேட்டேன். பத்து வயசுப் பையனுக்கு அது ப்ரா என்றுகூடத் தெரியாதாம். அதை அவன் கண்ணில் படும்படியாக அணிந்ததோ துவைத்ததோ காயப்போட்டதோ கிடையாதாம். பத்ரி 6 வயசுப் பையன் , இது தப்பில்லையா என்றார்.
”இதில என்ன தப்பு இருக்கு. புடவை, பாவாடை, சல்வார் கமீ்ஸ் மாதிரிதானே ப்ராவும். அவன் ஜட்டி போட்டிக்கிறான். நான் பேன்டி போட்டுக்கறேன். அவன் பெனியன் போட்டுக்கிறான். நான் ப்ரா போட்டுக்கறேன். இதில என்ன தப்பு இருக்கு” என்றேன்.
”நீங்க தப்பா புரிஞ்சிருக்கீங்க.... செய்தியெல்லாம் பார்க்கவே மாட்டீங்களா? அது சரி உங்களுக்கு எங்க அதுக்கெல்லாம் நேரமிருக்கு, காலையில வீட்டைப் பூட்டிட்டுப் போனீங்கன்னா, நைட்டு வர்றீங்க... உலக நடப்பு எங்க தெரியப்போவுது.... பிள்ளைகளை அவதானத்தோட வளர்க்கணும்” என்றபடியாக அவர் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
”இல்லை, நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க. எப்பவுமே அறியாத ஒன்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதுதான் மனித இயல்பு. எப்போதும் அறிந்து பழகிப்போன ஒன்றுக்காக நாம் யாரும் ஓடுவதில்லை. நீங்க ரொம்ப மூடி மூடி வளர்க்காதிங்க.” என்ற இவளது நியாயம் ஒன்றையும் அந்தப் பெண் உள்வாங்கத் தயாராக இருக்கவில்லை.
உரையாடல் முற்றிப் போகிற நிலையை அடைந்தபோது வேண்டாமே என்று முடித்துக் கொண்டோம்.
அதன் பிறகு சில நாட்களாக மனது இறுக்கமாக இருந்தது. பத்ரிக்கும் இவளுக்குமான உறவு நிலை, பழக்க வழக்கங்கள் குறித்து அசைபோட்டபடியே எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டியதாக இருந்தது.சூப்பர் மார்க்கெட் போனால் ”மம்மீ இது வாங்கலயா” என்று விஸ்பர் அல்ரா நப்கீன் பாக்கெற்றைக் காண்பித்துக் கேட்கிறளவு உறவு அவனது.
அண்மையில் உம்மா வந்திருந்தபோதுகூட ”ஆம்பிளைப் பிள்ளையை வளர்க்கிறாய்.... அப்படிப் பண்ணாத இப்படிப் பண்ணாத” என்று ஏகப்பட்ட பண்ணாதே சொல்லிருந்தாங்க. அதுவும் மனதை நெருடிக் கொண்டேயிருந்தது.
இந்தப் பெண் பேசிய சொற்களும் விலகிச் செல்வதாக இல்லை!
இவை நடந்து சில வாரங்கள் இருக்கும்.
இன்று -
அம்மாவின் ப்ரா எப்படியிருக்கும் அல்லது அம்மா ப்ரா அணிகிறாரா இல்லையா என்று தெரியாத 10 வயதுப் பையன் ”ஐ” திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். எமி ஜாக்சனின் ப்ராவை பார்க்கிறான். டூ பீஸ் உடையில் எமியைப் பார்த்து விக்ரம் சரிந்து விழுவதை ”உங்க கூகிளை மூடுங்க” என்று அவர் மார்புகளைப் பார்த்து சந்தானம் சொல்வதை, ”இதை எனக்குக் கொடுத்திடுடா இட்லித்தட்டா யூஸ் பண்ணிக்கிறேன்” என்று பிராவைத் தூக்கிப் பிடித்தபடி விக்ரமிடம் அம்மா சொல்வதையெல்லாம் குலுங்கிச் சிரித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான்.
கருத்துகள்
கருத்துரையிடுக