கல்விக்கூடங்களில், அலுவலகங்களில், அங்கிங்கெனாதபடி எங்கும், வந்தே மாதரம் பாடப்படவேண்டும் என மாண்புமிகு நீதியரசர் முரளிதரனய்யா உத்திரவிட்டுவிட்டார். பெரிய மனது வைத்து, நீதியரசர் நியாயமான காரணங்களுக்காக பாடாமலும் இருக்கலாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் எது நியாயமான காரணம் என்பதை இன்னொரு வழக்கு தொடுத்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். ஏற்கெனவே அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வந்தேமாதரம் பாடப்படவேண்டும் எனக் கோரும் மனு ஒன்று உச்சநீதி மன்றத்தில் தாக்கலாகி, , மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. யோகியார் உ.பி முதல்வரான பின் அங்கே தேசபக்தி பீறிட்டெழுகிறதா, மீரட் மேயர், வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லீம் உறுப்பினர்கள் சிலருக்கு மாநகராட்சி மன்ற நடவடிக்கைகளில் பங்கு பெற அனுமதி மறுக்க, முதல்வர் ஆதித்யநாத், ஆஹா, இதென்ன கொடுமை என அங்கலாய்த்திருக்கிறார். பாட மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குப் போகலாம் எனச் சொல்லவில்லை நல்லவேளையாக. ஆனால் உத்தராகண்ட் கல்வி அமைச்சர் ஏறத்தாழ அப்படித்தான் சொல்லியிருக்கிறார். இந்த...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்