சிபி கே. சாலமனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு). ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்தபுத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிறந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது. அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்

கருத்துகள்
கருத்துரையிடுக