மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே. சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும் மோதல் ஏன் ஏற்பட்டது என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . சாதி அடிப்படையிலும் , மத அடிப்படையிலும் , மதம் சார்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலும் , இருவரும் ஒத்திசைந்த கருத்துடையவர்கள் ..... பிறகு ஏன் மோதல் ? இதற்கு ஒரு சுவையான பின்னணி இருக்கிறது . 1989 ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு 195 சீட்டுகளை வெல்கிறது . ஆனால் , வி . பி . சிங் தலைமையிலான ஜனதா தள் கூட்டடணி , வெறும் 140 சீட்டுகள் மட்டுமே பெற்றது . ஆனால் , ராஜீவ் ஏனோ , ஆட்சியில் அமருவதை தவிர்த்து எதிர்க்கட்சியாக அமர்ந்தார் . இடது சாரிகள் மற்றும் பிஜேபியின் 52 எம் . பிக்களின் ஆதரவோடு , விபி சிங் பிரதமரானார் . ரதயாத்திரையை தடுத்த காரணத்தால் ...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்