டிஸ்கி – யாரையும் குறிப்பிடுவன அல்ல. குற்றாலத்தில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் குழந்தைகள் விளையாடுவதற்கே என்றே தனி இடம் அமைத்திருந்தார்கள், ஊஞ்சல் சருக் இன்ன பிற விளையாட்டு சாதனங்கள் கொண்டு.. அந்த காரணத்திற்காகவே அங்கு சென்று சாப்பிட வேண்டுமென மகள் அடம்புடிப்பாள், இன்றும் அதேபோல் தான் அடம், வேறு வழியில்லாமல் அங்கு செல்லவேண்டியதாகிவிட்டது பிரம்மாண்ட குரங்கின் உருவத்தோடு நுழைவாயில் வரவேற்றது, சாப்பிட மனமில்லாததால் பார்சல் சொல்லிவிட்டு மகளுடன் விளையாண்டு கொண்டிருந்தேன், ஏதோ மனதில் சலனம், என்னவென்று கவனித்ததில் ஒரு பழைய குரல் காதில் விழுந்தது ஆனால் மிக மிக பழகிய குரல், வந்த திசை நோக்கி திரும்பினேன் அழுது கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தையை ஒருவன் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான், அவனாக இருக்கக் கூடாதென்றுதான் மனதிற்குள் வேண்டினேன், விதி யாரை விட்டது அது அவனேதான். ‘ அவன் மகிழன் அவன் பெயரே அதுதான் அவனை சந்தித்தது 2008 ல், +2 முடித்து எம்ப்ளாய்மென்ட்ல பதியறதுக்கு வரிசையில் நின்றபோது excuse me பென் தர முடியுமா? என்றான் ஒருவன் , உள்ளூர எரிச்சல் அவனின் தோற்றமே எ...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்