21 22 23 வயதின் யுவதிகள் அணியும் ஆடைகள் எல்லாம் கவர்ச்சியாக உள்ளதா? அல்லது இவர்கள் கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறார்களா? என்று தெரியவில்லையே, இவள்கள் பெற்றோர் எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்கள் போல், முன்பெல்லாம் சுடிதாரின் தோள்பட்டையை மேலேற்றி விடுவது வழக்கமாக இருந்தது ஆனால் இங்கொருத்தி முன்னிழுத்து விட்டு மெலிதான க்ளிவேஜ் தெரியும்படி பார்த்துக்கொள்கிறாள். துப்பட்டாவையும் கழுத்தை ஒட்டி போட்டுகொண்டு ச்சே என்ன இதெல்லாம். சுடியும் முட்டுக்கு மேல் வரைக்கும் தான் இருக்கிறது, கேட்டால் ஷார்ட் என்பாள். வயிறு flat ஆ இருப்பதாலயே அவளுக்கு எல்லா ஆடைகளும் பொருந்துகிறது, மார்பு தூக்கி வைத்தாற்போல் இருக்கிறது கண்டிப்பாக புஷ்அப் ப்ரா போட்டு இருப்பாள். இன்னொருத்தியின் தொப்புளில் சிறியதாக ஒரு கம்மல். எப்படி வெட்கமே இல்லாமல் காது குத்துவது போல காண்பித்துக்கொண்டிருந்திருப்பாள்? ஜீன்ஸ் ஸ்லீவ்லெஸ் டாப்ல ஒருத்தி அனாயசமாக ஒருவனின் பைக் பின்னால் இருபக்கமும் கால் போட்டு அமர்ந்து கட்டிக்கொள்கிறாள், டெய்லியும் அக்குளை சேவ் செய்வாளா இருக்கும். நடக்கும் போது தாளத்திற்கு ஏற்ற வகையில் அசையும் புட்டம், ஹீல்ஸ் போட்டு பழகி இருப்பாள். எங்கோ படித்தேன் ஹீல்ஸ் செருப்பு போட்டால் பிரசவத்தில் சிக்கல் வரும் என்று. சர்வ சாதரணமாக ஒருவனின் தோளில் கைவைத்து தாங்கியபடி ஏதோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டு…. எப்படி முடிகிறது? இந்த இளைய சமுதாயம் ஏன் இப்படி வீணாகிறது? நல்லவேளை நான் அப்படியெல்லாம் இல்லை. இப்படியெல்லாம் உடம்பை வெளிக்காட்டாமலே என்னை பல ஆண்கள் திரும்பிப்பார்ப்பார்கள் அது தானே என் பெருமை. – இதுவெல்லாமே இளைய சமுதாயத்தின் மீதான தன்னுடைய அக்கறை என்றே நம்பினாள் மதுமிதா. அப்படி நம்புவது அவளின் 35 வயதுக்கு ஆசுவாசமாக இருந்தது.
எனக்கு மகள் இருந்தால் அவளும் இப்படிதான் ஆடை அணிவாள் அவளை கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம் தவிர அது அவசியமற்ற ஒன்று. அதெப்படி என் மகளை மட்டும் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டு பார்க்க முடிகிறது என்ற கேள்வி ஒன்று உண்டு. ஆசைகள் எல்லாருக்கும் பொதுதானே என்ற சமாதானமும் உண்டு. என் உதிரம் என்பதால் வரும் சலுகைகள் அவை. மகள் இல்லை என்பதால் அந்த பிரச்சினைக்கு போக வேண்டாம் தற்போதைய பிரச்சினை மகன் தான். நேற்று துணி துவைத்துக்கொண்டிருக்கும் போது அவன் உடுத்திய கைலியில் விந்துப்படிமம். அவனுக்கு தனியறை கொடுத்தது தப்போ? இது இயல்பு தானா? என்ற மனதை அரிக்கும் கேள்விகள் தான்டி, அவன் திடீரென்று குழந்தையில் இருந்து இளைஞன் ஆகிவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதே பதைபதைப்பு தான் பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்த பின்னும் இருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கிறான், டிவியில் முத்தக்காட்சிகள் வந்தால் அவனே சேனலை மாற்றும் அளவுக்கு பக்குவம் இருக்கிறது என்றெல்லாம் பெருமையில் இருந்தேனே… என்ன இப்படி ஆகிவிட்டது. இதை அவனிடம் கேட்க முடியாது.. சரி கணவனிடம் சொன்னால் அந்த மனுஷனுக்கு பிள்ளைய போட்டு அடிக்கத்தான் தெரியும். வேலை அலைச்சலில் வார நாட்களில் வருபவரிடம் இதை ஏன் சொல்லிக்கொண்டு என்றொரு எண்ணம் வேறு. தோழியிடம் சொன்னேன் அவள் கெக்கேபிக்கே என்று சிரித்து உன் மகன் கல்யாணத்துக்கு தயாராகிட்டான் என்று கேலி பேசுகிறாள். ஒழுங்கா படிப்பானா? டாக்டர்ட்ட கவுன்சலிங் கூட்டிட்டு போகலாமா? பேசாம நெட் கனெக்சன கட் பண்ணிட்டா என்ன? கேள்விகள் கேள்விகள் கேள்விகள் கடந்து அவனையும் அவன் வயதையும் புரிந்துகொள்வதற்கு சில மணி நேரங்கள் பிடித்தது. காமத்தை கடந்துவந்தால் காதல் பிறக்கும். அவன் காமத்தை அவன் கடக்கிறான், பெருங்கருணை பிறக்கிறது. பிறந்து பசியிலவன் அழுத போது தோன்றிய அதே கரிசம்.
மகன் வளர்ந்துவிட்டான் எனத்தெரிந்ததும் எனக்கு இன்னும் வயதாகிவிட்டது போல உணர்கிறேன். ஒன்றிரண்டு நரைமுடிகள், பிரசவச்சுருக்க வயிறு. கொஞ்சம் குண்டடித்திருகிறேன், அவ்வளவுதான் மற்றபடிக்கு நான் அழகாகதான் இருக்கிறேன். அதனால் தான் இந்த சரவணன் என் பின்னாலயே சுற்றுகிறான். அவனுக்கும் என் வயது தான் ஆகிறது. ஆள் பார்க்கவும் ஓரளவுக்கு ஜெய் மாதிரி இருப்பான். இவனை சமாளிப்பது பெரும் பிரயத்தனம். ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு முகத்தை திருப்பிக்கொள்வதும் சாத்தியமில்லாத ஒன்று.ஒன்றாக காப்பி குடிப்பது ஒன்றாக சாப்பிடுவது என்று பரிணமித்திருந்தது அவனோடான பழக்கம், அவனின் கேள்விகளுக்கு சிரிக்காமல் பதில் சொல்ல முடியவில்லை. இதுவெல்லாம் புதியதாக இருக்கிறது யாரும் என்னிடம் இப்படியெல்லாம் பேசியதே இல்லை. பெண்ணின் ஆடைக்குறைப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து, தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் விர்ஜின் இல்லை என்றுவந்து முடிப்பான். புணர்வு தொடர்பானது என்று அறிந்ததுமே சட்டென்று உள்ளங்கை வியர்க்க துவங்குகிறது. உடனே அந்நேரத்தில் நான் பேச்சை மாற்றுவதற்கு முன் அவனே மாற்றிவிடுகிறான்/.. தொடர்பே இல்லாமல் – உங்களுக்கு எப்போதுதான் வயதாகும்? இப்படி அவன் கேட்க வரும் சந்தோசம் அவன் பேச்சை கேட்கத்தூண்டியது.
ப்ளவுஸ் எல்லாம் எங்க ஸ்டிச் பண்றிங்க நல்லா fit ஆ இருக்கு, என் மனைவிக்கு தான் நல்ல டெய்லர் அமையவே இல்ல. என அவன் பார்க்கின்ற இடங்களை வெளிப்படையாக சொல்லிக்காட்டும் உத்தியை வியக்கிறேன். மனம் மூளைக்கு கட்டளை இட்டுக்கொண்டே இருக்கிறது. ”பதில் சொல்லாத மதுமிதா”
கண்ணு சோர்வா இருக்கு நைட் நேரங்கழிச்சு தூங்கினிர்களா? மனம் பலவித இரட்டை அர்த்தங்களை சொல்கிறது, ”பதில் சொல்லாமல் சிரித்துவை மதுமிதா”
இந்த கவிதை எப்படி இருக்கிறது பாருங்கள்
”தேவதைகள் நீலச்சேலையில் வரலாம்
நிரம்பியிருக்கும்
மது(மிதா)க்கோப்பை போல” / ‘புரியவில்லை என்று திருப்பிக்கொடுத்துவிடு மதுமிதா’
சிவப்பு, நீலம், இளமஞ்சள், ரோஸ், ஆரஞ் – என்ன இதெல்லாம்?
இதெல்லாம் போன வாரம் நீங்க கட்டுன சேலை நிறங்கள். – ஓ! வெகுவாக கவனிக்கிறான் ”கவனம் மதுமிதா”
நாளைக்கு என்ன கலர் சேலை உடுத்துவிங்க சொல்லுங்க ”’தெரியாதென்று சொல் மதுமிதா இல்லையென்றால் இவனுக்காகவே சொன்ன வண்ண சேலையை உடுத்த வேண்டி வரும்”
புதன் கிழமை ஒரு மல்ட்டி கலர் சேலை இருக்கு அதைதான் உடுத்தணும்,நாளைக்கு தெரியல.

புதனன்று மல்ட்டிகலர் சேலையை தொட்டதும் வந்தது அவன் நினைவுதான், புதன் வியாழன் இரண்டு நாட்களாக அவன் வேலைக்கு வரவில்லை அவனை தேடுகிறேன். வேலைகளை முடித்துவிட்டு படுக்க வந்த போது அலைபேசி ஒளிர்ந்தது. அவன் செய்தி தான்
kiss you madhumitha.
என்ன இது என்று ஆத்திரம் கோபம் கிளர்ச்சியில் பதில் அனுப்பும் முன் அடுத்த செய்தி
sorry, ,miss you madhumitha
hello
hello
hello
enna aachu?
அவன் பார்வைகளை உள்ளூர ரசிக்கிறேன். ரசிப்பது வெளித்தெரியாமல் இருக்க மனமுதிர்வு ஏற்பட்டதாக நடிக்கிறேன். பதின்மத்தில் பெண்கள் பின்னால் ஆண்கள் சுற்ற ஆரம்பிக்கும் ஒரு பருவம் வரும் அல்லவா?! அப்போதே எனக்கு திருமணம் செய்து வைத்து அந்த ஆசையை நீர்த்துப்போகவைத்துவிட்டார்கள். இப்போது இவன் பேச்சுக்களும் பார்வைகளும் அதை மீட்டுக்கொடுப்பதாக தோன்றுகிறது. இளைஞர்கள் காதலில் இருந்தால் எந்த வேலையும் ஒழுங்கா செய்ய முடியாம மந்திரித்து விட்டது போல திரிவார்களே அப்படியான ஒரு நிலை. இது தவறா சரியா என்ற தர்க்க ரீதி நியாயங்கள் எப்பொதும் ஒரு முடிவிற்கு வரப்போவதே இல்லை. என்னை ரசிக்கிறாய் ரசித்துவிட்டு போ என்பதில் உள்ள ஆபத்து அவன் ரசிப்பதை ரசிக்கத்தொடங்கிவிடுதல்தான்.

மறுநாள் வேலைக்கு வந்தான்
என்னங்க மெசேஜ்க்கு ரிப்ளை செய்யவே இல்ல?
என்னங்க மெசேஜ்க்கு ரிப்ளை செய்யவே இல்ல?
…எதுக்கு மெசேஜ் பண்ணுனிங்க?
சும்மாதான் உங்களை தேடுச்சி
….ஏன்?
ஏனோ!
சரி சொல்லுங்க ஏன் ரிப்ளை பண்ணல மொபைல்ல பேலன்ஸ் இல்லியா? ச்சே தெரிஞ்சா ரீசார்ஜ் செஞ்சு விட்டுருப்பேனே.
….பேலன்ஸ்லாம் இருக்கு.. ரிப்ளை அனுப்பனும்ன்னு தோணல
கோபமா இருக்கிங்களா?
….இல்லியே
sorry ங்க அது நான் உங்களுக்கு வேணும்ன்னு அனுப்பல வேற ஒருத்தங்களுக்கு அனுப்ப வேண்டியது உங்களுக்கு மிஸ்பிளேஸ் ஆகிட்டு.
….எது kiss you வா?
இல்லங்க அதுக்கு அடுத்து அனுப்பியவை.
….இல்லியே எனக்கு அதுக்கு அடுத்து ஒன்னும் மெசெஜ் வரலியே
வரலியா..? இதெல்லாம் என்று sent message காண்பித்தான்.
ummmaaa
enna dress?
ippa naan anka varavaa?
i love you di
enna dress?
ippa naan anka varavaa?
i love you di
லேசாக தலை சுற்றியது. அவன் மெசேஜ் காரணம் அல்ல. அது என் மொபைலில் காணாமல் போனதின் காரணம் தேடி.
அவன் நம்பரும் டெலிட் செய்யப்பட்டு இருந்தது.
குழப்பத்தில் தெளிந்து வீட்டுக்கு திரும்பும்போது க்ளீவேஜ் தொப்புள் யுவதிகள் புனிதைகளாக தெரிந்தார்கள். நான்தான் அசிங்கமாக போய்விட்டேன்..
பரவாயில்லை
என்னைப் புனிதப்படுத்தும் பெருங்கருணையை என் மகன் வழங்குவான்.

கருத்துகள்
கருத்துரையிடுக