டிஸ்கி – யாரையும் குறிப்பிடுவன அல்ல.
குற்றாலத்தில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் குழந்தைகள் விளையாடுவதற்கே என்றே தனி இடம் அமைத்திருந்தார்கள், ஊஞ்சல் சருக் இன்ன பிற விளையாட்டு சாதனங்கள் கொண்டு.. அந்த காரணத்திற்காகவே அங்கு சென்று சாப்பிட வேண்டுமென மகள் அடம்புடிப்பாள், இன்றும் அதேபோல் தான் அடம், வேறு வழியில்லாமல் அங்கு செல்லவேண்டியதாகிவிட்டது பிரம்மாண்ட குரங்கின் உருவத்தோடு நுழைவாயில் வரவேற்றது, சாப்பிட மனமில்லாததால் பார்சல் சொல்லிவிட்டு மகளுடன் விளையாண்டு கொண்டிருந்தேன், ஏதோ மனதில் சலனம், என்னவென்று கவனித்ததில் ஒரு பழைய குரல் காதில் விழுந்தது ஆனால் மிக மிக பழகிய குரல், வந்த திசை நோக்கி திரும்பினேன்
அழுது கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தையை ஒருவன் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான், அவனாக இருக்கக் கூடாதென்றுதான் மனதிற்குள் வேண்டினேன், விதி யாரை விட்டது அது அவனேதான். ‘
அவன் மகிழன் அவன் பெயரே அதுதான் அவனை சந்தித்தது 2008 ல்,
+2 முடித்து எம்ப்ளாய்மென்ட்ல பதியறதுக்கு வரிசையில் நின்றபோது excuse me பென் தர முடியுமா? என்றான் ஒருவன் , உள்ளூர எரிச்சல் அவனின் தோற்றமே எனக்கு பிடிக்கவில்லை ”மிக ஒல்லியாக இருந்தான், அவன் பேசும்போது தொண்டையில் கோலிக்கா மாதிரி ஒன்னு ஏறி இறங்கியது, கைல காசிக்கயிறு கட்டியிருந்தான், நீளமான முடி முகத்தில் வந்து விழவும் அதை ஸ்டைல் என்று அவனே நினைத்துக்கொண்டு ஒரு கையால் ஒதுக்கிவிட்டான்” பேனா இல்லாம இவன் என்னாத்துக்கு இங்க வர்றான்னு நினைத்துக்கொண்டே கடுப்புடன் மூடியை கழட்டிவிட்டு கொடுத்தேன். பேனாவை திரும்ப கொடுக்கும் போது ‘thanks ”நான் மகிழன் first group நீங்க?…… எத்தன மார்க்?…. எந்த கேள்விக்கும் செவி சாய்க்காமல் சிரித்துமட்டும் வைத்தேன் – அங்கு வேலை முடிந்த பின்னும் இவன் என்னை பின்தொடர்வதாகவே தோன்றியது , என்னுடைய ஊருக்கு அங்கிருந்து மூன்று பஸ் மாற வேண்டும் இவனும் நான் போகும் பஸ்ஸிலேயே வரவும் எனக்கு லேசாய் பயம் .. சொந்த ஊரில் இறங்கிய உடன் தைரியம் வந்தவளாய் …
…..எதுக்கு என் பின்னாடியே வர்ரிங்க?
பின்னாடி திரும்பி பார்த்துவிட்டு – யார சொல்றிங்க?
….உங்களைதான்.
ஹல்லோ நான் ஒன்னும் பின்னாடி வரல நீங்கதான் முன்னாடி போறிங்க
என்ன நக்கலா! ஒழுங்கா போய்டுங்க இந்த ஊர் பூராம் எங்க சொந்தக்காரங்கதான்
…..ஹஹஹாஹ் என்று அவன் சிரித்துக்கொண்டிருக்கும் போது ஒரு பெரியவர் வந்து அவனிடம்
”இவ்வளோ நேரம் ஆகிருச்சாடே”
….ஆமாப்பா
சேரி பார்த்து வீட்டுக்கு போ நான் வயக்காட்டுக்கு போயிட்டு பொறவு வாறேன்
அவன் போகும் போது திரும்பி பார்த்துட்டு ரொம்ப நக்கலா சிரிச்சுட்டு போனான், உண்மையில் அவனை ஊரில் பார்த்ததே கிடையாது இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறேன், விசாரித்ததில் ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்தான் அவ்வப்போது லீவுக்கு வந்துட்டு போய்டுவான் என்ற தகவல் கிடைத்தது, அவன்கிட்ட போயி பல்பு வாங்கிட்டோமேன்னு பயங்கர வருத்தம்… எதிலாவது அவனை அவமானபடுத்தவேண்டும் என்பதே என் தற்போதைய லட்சியம்
காலம் அவனை பொறுப்பான தகப்பனாக மாற்றியிருந்தது ஆள் பார்க்க முன்பை விட இப்போது நன்றாக இருந்தான் ஒரு பக்கா ஃபேமிலி மேன் லுக். அவன் என்னை பார்க்கவும் பட்டென்று முகத்தை திருப்பி மகளுடன் விளையாட ஆரம்பித்தேன், நிழல் சொல்லியது அவன் அருகில் வருவதை
மீனம்மா….. என்றது மீனுக்குட்டி என்று செல்லமாய் கொஞ்சிய குரல்
…………..
திரும்பும் முன் ஹேன்ட் பேக்கில் இருந்து ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டிக்கொண்டேன், நெற்றியின் உச்சியில் குங்குமம் தேடினால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் திரும்பினேன் – ஒரே ஒரு ஆறுதல் இந்த கலாச்சாரம் வெள்ளை புடவையில் இருந்து கலர் புடவைக்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
நிம்மதியை வழங்குதலே முறை பறிப்பது முறையல்லவே!
……………தொடரும் 01
ஹே! மகிழ்… சர்பிரைஸ்… எப்படா ஊருக்கு வந்த?
…ஹஹஹாஹ இன்னும் அந்த நடிப்பு உன்ன விட்டு போகல.. என்னைய பார்த்த உடனே முகத்த திருப்பிக்கிட்ட இருந்தாலும் வெட்கமே இல்லாம நானே பேசலாம்னுதான் வந்தேன்.. இப்ப சர்பிரைஸ்ன்னு சொல்ற… எதுக்கு இதெல்லாம்? –
ஆல்வேஸ்! :)) என்று சொல்லியபடியே அவன் கையில் இருந்த குழந்தையை வாங்கிக்கொண்டேன்..
வாங்க வாங்க வாங்க யார் அடிச்சாலாம், எதுக்கு அழறிங்க செல்லம், அப்பா அடிச்சுட்டாங்களா நாம அப்பாவ அடிச்சுடலாம் என்ன! என்ன வேணும் உங்களுக்கு? …ஐரீம் – வாங்கித்தாரேன் என்று சொன்னதும் அரிசிப்பற்களைக் காட்டிக்கொண்டு சிரித்தது
உங்க பேரென்னப்பா...
….கேட்கராங்கள்ள சொல்லுடா
”கைல்”
கேள்வியாய் அவனைப் பார்க்கையில் கயல் என்று மழலையை மொழி பெயர்த்தான்.
கயல் அம்மாவ எங்க?
உள்ள சாப்பிட்டுட்டு இருக்காங்க
இப்ப உன் வைஃப் வந்தாங்கன்னா என்னைய என்னன்னு இன்ட்ரோ கொடுப்ப?
..தங்கச்சின்னு
த்து
ஹஹாஹ ஒக்கே ஒக்கே கூடப்படிச்சவ
…… :)))
பரஸ்பர நலம் விசாரிப்புகளில் அவன் மனைவி வங்கியில் வேலை செய்வது இவன் பில்லர் இஞ்சினியரிங்ல் காண்ட்ராக்ட் எடுப்பது, பூர்விக வீட்டை விற்க வந்திருக்கிறான் என்பது வரை எல்லாமும் பகிர்ந்துகொண்டான், அவனிடம் முட்டாள்தனமாக சில பொய்களை சொல்ல வேண்டியதாகிவிட்டது, அதுவே தவறாகவும் போய்விட்டது ”கணவன் துபாயில் இருக்கிறான், குழந்தை ஸ்கூலுக்கு சென்றிருக்கிறாள், அவள் பெயர் மகிழினி.”
என்னைய பார்த்தா உனக்கு முட்டாக்கூ மாதிரி தெரியுதா?
..அசிங்கமா பேசாத
நீ பேசறதுதான் அசிங்கம் நான் பேசறது இல்ல, நீ ரொம்ப புத்திசாலிதான் ஒத்துக்கிடுதேன் ஆனா அந்த புத்திசாலித்தனம் தான் உன்னைய முட்டாள்தனமா சிந்திக்க வைக்குது. ஏன் ஊருக்கு வந்த நான் உன்னைப் பற்றி விசாரித்து இருக்க மாட்டேனா? என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? – பொண்ணுங்களும் சுடுகாடு வரைக்கும் வரலாம்ன்ற அனுமதி இருந்தா.. கையறு நிலையில் அழத்திராணியில்லாம நின்னுட்டுருந்த என்னை நீ பார்த்திருக்கலாம். அன்றும் சரி இன்றும் சரி என்கிட்டே ஏன்டி நடிக்கற நான் என்ன பாவம் செஞ்சேன் உனக்கு?
எத்தனை முயற்சித்தும் விசும்பலைத் தவிர்க்க முடியவில்லை தொண்டை கவ்விய வார்த்தைகளை சிரமப்பட்டுக் கூறினேன்
…இந்தக் கண்ணீரை நீ பார்க்ககூடாது என்றுதான்.
மகிழினி எங்க?
…அவள் மகளென்னும் கனவு!
_________________________________________
இரண்டொரு முறை பேருந்து நிறுத்ததிலும் கோவிலிலும் அவனை மீண்டும் சந்தித்தேன், தோழிகளிடம் எல்லாம் அவனைப் பற்றிய ஒரு தவறான பிம்பத்தை முன்வைப்பதே அவனை பழிவாங்க எனக்கு போதுமானதாக இருந்தது..
அவன் சரியான பொறுக்கிடி கண்ட இடத்தில பார்க்கறான் பார்வையே சரி இல்ல,
தோழிகளின் தோழிகளின் தோழிகளில் அவனின் தங்கையும் இருப்பதால் அவன் காதுக்கும் சென்றுவிட்டது, நான் எதிர்பார்த்ததும் அதுதான் அவன் கஷ்டப்படுவான், ஒரு ஆண் தன்னைத்தானே பொறுக்கி கேட்டவன் என்று சொல்லிக்கொள்வானே தவிர வேறு யாரும் சொன்னால் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது, ஈகோவை சுரண்டிப்பார்ப்பது போல் இது.
அவன் என்னிடம் சண்டைக்கு வருவான் அவன் கோபத்தை ரசிக்கலாம் என்றுதான் மிதப்பில் இருந்தேன்,
ரொம்ப நார்மலா பேசினான் அதுவே எனக்கு வருத்தமாக இருந்தது
எதுக்கு என்னை பற்றி இப்படி சொல்லிட்டு திரியுத
..நான் ஒன்னும் சொல்லலையே!
அன்னிக்கு நான் உன் பின்னாடியே வந்தேன்னு உனக்கு கோவம் அதானே!
…………..
அத்தனை பொண்ணுங்க நின்னாங்க, அவ்வளோ ஏன் என் பக்கத்தில கூட நாலு பேர். எல்லாரையும் விட்டுட்டு உன் கிட்ட பேனா வாங்கினேன் அது ஏன்?ன்னு நீ கேட்கல,
…………..
தசாவாதாரம் படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டு நம்ம ஊர் பொண்ணு தனியா போகுதேன்னு படம் பார்க்காமலே உன் பின்னாடி வந்தேன் பார்த்தியா! அது என் தப்புதான். மன்னிச்சுக்கோ.
…………..
அப்பறம் கண்ட கண்ட இடத்திலலாம் பார்க்கிறான்னு சொல்லிட்டு திரியுதல்ல அது கூட இன்னொன்னையும் சேர்த்து சொல்லு இனிமே.. ”அவன் என்னைய மட்டும்தான் கண்ட கண்ட இடத்தில் பார்க்கறான்னு”
இவ்ளோ அழகா இருக்கற உன் கண்ண பார்த்து பேச நான் என்ன லூசா!? என்று சொன்னபோது அவன் கண் என் கண்ணைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது. அவன் மட்டும் அன்று மார்பையும், இடையையும், பார்த்திருந்தால் – இரவில் அவனை நினைக்காமலயே தூங்கியிருப்பேன். அவன் அசிங்கமா இருக்கானா !இல்ல அழகா இருக்கானா ! என்ற குழப்பம் வாராமல் போயிருக்கும்.
……தொடரும்02
அவள் மகளென்னும் கனவு!
…வாட் ?
சிலநொடி மவுனம்.., கணவன் தவறியதும்., அவளுக்கிருந்த ஒரே ஆறுதல், வாழ்வின் மீதான நம்பிக்கை, வாழ்வதற்கு ஒரு பிடிப்பு எல்லாமே அவளின் வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்தது. இந்த வாழ்வு எத்தனை விசித்திரமாக இருக்கிறது, எல்லா நம்பிக்கைகளையும் பொய்த்துப்போக செய்து வாழ் என்று நிர்பந்திக்கிறது.. குழந்தை பிறந்ததும் மூச்சு எடுப்பதற்கு பதிலாக விட்டுவிட்டது, இதனினும் ஒரு சோகம் இனி வாய்க்குமா என தெரியாது அழுதுவிடுவது ஆறுதல்தான். அழுதுவிட்டால் பிறந்த உடன் குழந்தை செய்த பாவமாக போய்விடுமோவென கண்ணீரைக் கெட்டிப்படுத்தி வைத்திருந்தாள், கண்டிப்பாய் அவள் மகள் சொர்க்கம் சேர்ந்திருப்பாள்… இதையெல்லாம் இவனிடம் எதற்கு சொல்ல வேண்டுமென யோசித்துக்கொண்டிருந்த போது மார்பில் கட்டிய பாலின் வலி ஞாபகம் கண்களில் ஓரத்தில் துளிர்த்தது.., ஆறுதலே இல்லாமல் இவ்வளவு நாள் இருந்தததில் எந்த பிரச்சினையும் இல்லை இவன் ஆறுதல் சொல்லிவிடுவானோ என்று இன்னும் அதிகமாய் கண்ணீர் முட்டியது.
….ஏய் என்னாச்சு? கேட்டுட்டே இருக்கேன் ஒன்னும் சொல்ல மாட்டேங்கற? கொஞ்சம் கடுமையான குரலில்.
சரி நான் கிளம்பறேன்.. என்றவாறே கையில் வைத்திருந்த கயலை மகிழனிடம் கொடுத்துவிட்டு புறப்பட எத்தனித்தவளை, மேல் கைப்பிடித்து நிறுத்தினான்.,
…சொல்லிட்டு போ
என்னைய விடு ப்ளீஸ் நான் போறேன்
…சொல்லிட்டு போ மீனா.
நான் போறேன் மகிழ், கைய விடு. உன் வைஃப் வந்தா ஏதாது நினைச்சுப்பாங்க
….அவ என்னமும் நினைச்சுட்டு போறா எனக்கு நீதான்டி முக்கியம் சொல்லுடி.,
……………………………
….மீனு!
மீனு என்றதும் அவன் இன்னொருத்தி கணவன் என்ற எண்ணம் எல்லாம் மறந்து விட்டது தன் எதிரில் நிற்பவன் தான் காதலித்த மகிழன் என்னும் எண்ணம் மட்டுமே மனதில் தோன்றி தோன்றி மறைந்தது
அப்படி கூப்டாத.
….நீ என் மீனுதான்டி எப்பவுமே. என்ன ஆச்சு சொல்லுடி….
__________________________________
ச்சே என்ன இவன் இப்படி பேசிட்டான், நாமதான் தப்பா நினைச்சுட்டோமோ? அதுக்காக இப்படி பேசுவானா? புரண்டு புரண்டு படுத்து யோசித்துக்கொண்டிருந்தவளை அப்பாவின் குரல் உசுப்பியது
ஏல என்ன படிக்க போறதா உத்தேசம்.
…டீச்சர் ட்ரைனிங்ப்பா
அது எதுக்குலா
…இல்லப்பா future ல ஹெல்ப் பண்ணும் வேற எது படிச்சாலும் நிறைய காசு ஆகும் அதான். எனக்கு மெரிட்ல கிடைக்கும். நான் அதுவே படிக்கறேனே
சரி நீ சொன்னா கேக்கவா போற.. படி. ஆனா இந்த மேலத்தெரு முத்தையா மவன் என்னமோ இஞ்சினியரிங் படிக்க போறானாம் அதெல்லாம் நல்லது இல்லியோ?
…யாருப்பா
அம்மாவை பார்த்து கேட்டார்.. ஏட்டி அந்த பய பேரென்ன மயிலனோ முயிலனோ வாய்க்குள்ளாரவே நொழைய மாட்டேங்குது… மகிழன் என்றாள் அம்மா..
….சட்டென்று பாதத்தில் குறுகுறுத்தது.. அதெல்லாம் ஆம்பள பசங்க படிப்புப்பா நான் படிச்சு ஒன்னும் ஆகப்போறதுல்ல, ரொம்ப கஷ்டம் வேற. என்று அந்த இடத்தை விட்டு உடனடியாக நகன்றாள்.
பின்னொருநாள் தோழிகளோடு கோவில் சென்று வருகையில் மகிழன் எதிர்பட்டான், தோழிகள் யாவரும் ஓய் உன்னோட பொருக்கி வர்றான் என்றதும். இவள் சட்டென கோபப்பட்டு
எதுக்கு அவனை பொறுக்கின்னு சொல்ற?
….பார்ரா நீதானம்மா சொன்ன அவன் பார்வையே சரி இல்லன்னு,
எங்கே மாட்டிக்கொண்டுவிட்டோமோ என அஞ்சி உடனடியாக சொன்னாள்.. ஆமா இப்பவும் அவன் பொறுக்கிதான் எதுக்கு என்னோட பொறுக்கின்னு சொன்ன அதுக்கு தான் கோபப்பட்டேன் என சமாளிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது
அவனை எதிர்கொள்ளவே முடியவில்லை, எதிரில் வந்தால் தோள்களை வைத்து உரசிசெல்வான், உதடுகளை அசைத்து பொறுக்கி என்பாள், அவனை கடந்தபின் சிரித்துக்கொள்வாள், அவனுக்கு எல்லாமும் தெரிந்திருந்தது.. இவள் தண்ணிக்கு போகும் நேரம், கோவிலுக்கு போகும் நேரம், என எல்லாமும் அறிந்து இவள் எப்போது வீட்டை விட்டு வெளியே வந்தாலும் அவனை சந்திக்காமல் வீடு திரும்பியதே இல்லை,
வாசல் தெளித்து கோலமிடுகையில் இரண்டுமுறை அவ்வழியாய் சென்றான்.. அன்றிலிருந்து புதிது புதிதாக கோலங்கள், இவனுக்காக இதெல்லாம் எதற்கு செய்யவேணும் என்ற எண்ணம் வந்தாலும் அதனால் என்ன இதுதான் காதல் இல்லியே சும்மா சீண்டிப் பார்த்தல் தான்.
அவனுக்கு பட்டியாலா சுடிதார் பிடிக்கும். இவளிடம் பட்டியாலாக்கள் எண்ணிக்கை தற்போது அதிகமானது., அவனை சீண்டுகிறோம் என்று நினைத்து நினைத்து அவனுக்கு பிடித்தமானவைகளை செய்துகொண்டிருந்தாள், ஒவ்வொரு நாளும் யதேச்சையாய் ஏற்பட்டது போல திட்டமிட்டு கடக்கும் போது ஏதேனும் சொல்வான்.. பொட்டு நல்லால்ல கொஞ்சம் பெரியதாக வை என்பான், உன் வேலைய பார்த்துட்டு போ என்று பதில் சொன்னாலும் மறுநாள் கொஞ்சம் பெரிய பொட்டில் அவன் பார்க்க வேண்டுமென காத்திருப்பாள்.,
தலை குனிந்து நடக்காத. கொஞ்சம் நிமிர்ந்து நட
…..உன் வேலைய பார்த்துட்டு போ
உனக்கு ஜிமிக்கிதான் நல்லாருக்கும்
…..உன் வேலைய பார்த்துட்டு போ
லிப்ஸ்டிக் போடாத நல்லால்ல, கண்ணுக்கு கண்மை போடு
…..உன் வேலைய பார்த்துட்டு போ
தலைய இழுத்து வச்சு பின்னாத குதிரை வால் போடு
…..உன் வேலைய பார்த்துட்டு போ
சுடிதாருக்கு ப்ரா மட்டும் போடாத ஜிம்மிஸ்ம் சேர்த்து போடு அப்பத்தான் தடம் தெரியாது,
……….உன் வேலைய… ராஸ்கல் எவ்வளோ திமிர் இவனுக்கு.. இனி இவன்ட்ட பேசவே கூடாது
ஐம்பொன் கொலுசு உன் காலுக்கு நல்லாருக்கும்
………………………………………..
தீபாவளிக்கு கத்திரிப்பூ கலர் சேலை எடு
………………………………………….
என்ன ஆச்சு ஏன் பேச மாட்டேங்கற ?
………………………………………..
என்ன ஆச்சு ஏன் பேச மாட்டேங்கற ?
………………………………………..
பொறுமை இழந்தவனாய் யாருமற்ற ஒரு மத்தியானத்தில், பேசாமல் போனவளை மேல் கைப்பிடித்து நிறுத்தினான்.,
…சொல்லிட்டு போ
என்னைய விடு பொறுக்கி நான் போறேன் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சுதுன்னா அவ்வளோதான் நீ?
….பராவால்ல சொல்லு
என்ன சொல்லணும் கைய விடு நீ
…எதுக்கு என்ட்ட பேச மாட்டேங்கற ?
நான் எப்ப உன்ட்ட பேசுனேன். கைய விடு யாராது பார்த்திடுவாங்க
….sorry என்று சொல்லி திரும்பினான்
நீ மட்டும் அப்படி சொல்லலாமா ?
….????
அதான் இன்னர் பத்தி, ஜிம்மிஸ் அது இதுன்னு உளர்னியே
….ஹ்ம்ம்ம் அதனால் தான்னு நானும் யோசிச்சேன்.. என்று சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த கடிதத்தை அவள் கையில் திணித்து விட்டு எந்த பதிலுக்கும் காத்திராமல் சென்றான்.
பிரித்து படித்தாள்
..எனக்கு தெரியும் உன் நிராகரிப்பின் காரணம், உனக்கு தெரியவில்லை யாவரும் உன்னை எப்படி பார்க்க வேண்டுமென நான் விரும்புவதை..,கூடவே நான் உன்னை விரும்புவதையும்., ஏன் உன்னை காதலிக்கிறேன் என சத்தியமாக எனக்கு தெரியவில்லை.., நிற்க இன்னும் நான் ப்ரொபோஸ் செய்யவில்லை தானே.. i love you ஆம் இது காதல் கடிதம் தான். உன்னை வேறு யாரும் ரசிக்கக்கூடாதென்னும் அளவுக்கு மண்டைக்குள் ஏறி நிற்கிறாய் நீ. ப்ரா ஜிம்மிஸ் என்ற சொற்களுக்கே என் மேல் வெறுப்பு வருகிறதா உனக்கு ? சரி இதையும் கேள் என்னை மொத்தமாய் வெறுத்து ஒதுக்கு
படிக்க படிக்க தீராத புதினம்,
என்றென்றும் தீராப் புனிதம்.
பின்னாலிருந்து கட்டி அணைக்கையில் உள்ளங்கையில் பதியும் மார்பு கோடி பூக்களின் சங்கமம்,
வழுவும் இடையில் இமயமலையின் நெளிவு
இடையின் பின்னழகில் தலைவைத்து கதை சொல்ல ஏதுவான பஞ்சு தலையணை.
இருதொடை ஆயிரங்கால் மண்டபத்தின் மாதிரி வடிவம்
தொடை நடுவே மண்ணுலகின் சொர்க்கம்
இத்தனை அழகையும் தாங்கி நிற்கிறது உன் பாதமென்னும் தாமரை.
தாமரை மேல் நீ மகாலட்சுமி
தாமரை மேல் நீ சரஸ்வதி
என்றென்றும் தீராப் புனிதம்.
பின்னாலிருந்து கட்டி அணைக்கையில் உள்ளங்கையில் பதியும் மார்பு கோடி பூக்களின் சங்கமம்,
வழுவும் இடையில் இமயமலையின் நெளிவு
இடையின் பின்னழகில் தலைவைத்து கதை சொல்ல ஏதுவான பஞ்சு தலையணை.
இருதொடை ஆயிரங்கால் மண்டபத்தின் மாதிரி வடிவம்
தொடை நடுவே மண்ணுலகின் சொர்க்கம்
இத்தனை அழகையும் தாங்கி நிற்கிறது உன் பாதமென்னும் தாமரை.
தாமரை மேல் நீ மகாலட்சுமி
தாமரை மேல் நீ சரஸ்வதி
நீ என் தேவதை நீ என் தெய்வம்.. நீ என் காதலி. எந்த முடிவென்றாலும் சொல், நிராகரிப்பென்றாலும் சொல்லிய பின் பிரிந்து போ, குறிப்பால் உணர்த்தினால் எனக்கு புரியாது.
இப்படிக்கு – மகிழன்.
….பரபரவென கடிதத்தை கிழித்து போட்டாள்.. பின்னே இதை வீட்டில் வைத்து பாதுகாக்கவா முடியும்.. ச்சை என்ன மாதிரி எழுதிருக்கான் அசிங்க அசிங்கமா. என யோசித்துக்கொண்டே சென்றவள்.. இப்படி எல்லாம் ஒருவனால் சிந்திக்க முடியுமா? இவன்தான் எழுதி இருப்பானா? இவன் எங்க எழுதி இருப்பான் எங்காச்சு இருந்து சுட்டுருப்பான் என்னைய ஏமாத்தறான்.. இருந்தாலும் என்னிடம் தயக்கம் இன்றி சொல்ல தோன்றியதே.. உண்மைலேயே அவனுக்கு தைரியம் ஜாஸ்திதான்..
சில நாட்களாக இருவருமே தலைகுனிந்து தான் ஒருவரை ஒருவர் கடந்தனர்.
………
……..
……..
………
தீபாவளி. :-
கத்திரிப்பூ கலர் சேலை, காலில் ஐம்பொன் கொலுசு, நெற்றியில் பெரிய பொட்டு, காதில் ஜிமிக்கி, சகிதம் மையிட்ட கண்கள் மகிழனை தேடியது, நினைத்த மாத்திரத்தில் எதிர்வரசெய்யும் சக்தி காதலுக்கு இருக்கிறதோ என்னவோ.. எதிரில் மகிழன்.
ரொம்ப அழகா இருக்க…
…..உன் வேலைய பார்த்துட்டு போ….. சிரித்துக்கொண்டே அவனைக் கடந்து ஓடினாள்,
_________________________
வார்த்தைகள் குளறி, அடக்கி வைத்திருந்த அத்தனை கண்ணீரையும் அவனிடம் கொட்டி கைகள் நடுங்க பைத்தியக்காரியாய் புலம்பி அழுதாள்…. என் பொண்ணும் செத்துட்டாடா, பிறந்த உடனே செத்துட்டா.., என் கைல கொண்டுவந்து கொடுக்கும் போது… ஐயோ… அவ்வளோ அழகா இருந்தாடா, மகிழினின்னு பேர் வச்சிருந்தேன்டா.. அவன் சட்டையை பிடித்து உன்னாலதான்டா… நீ ஏன்டா என்னைய விட்டுட்டு போன என்று சரிந்து அவன் காலடியில் அமர்ந்து யாரும் பார்த்திராவண்ணம் முட்டுப்போட்டு தலைகவிழ்ந்து குழுங்கினாள்
…மீனு என தோள் தொட்டான்.. பதறி எழுந்து பின்வாங்கினாள்
இல்ல நீ என்னைய தொடாத மகிழ்
…இல்லடி i am sorry டி.. எனக்கெப்படிடி தெரியும்? இப்படிலாம்
நீ எதுவும் சொல்லாத.. உன் ஆறுதல் எனக்கு தேவை இல்ல..,
…சொன்னா கேளுடி – இவன் குரலும் உடைந்து போனது, அப்பாவின் குரல் மாறியதில் கயலும் அழத்தொடங்கிவிட்டாள், மீனுவின் கன்னம் அருகே கைக்கொண்டு போகவும்/
கிட்ட வராதடா.. நீ தொட்ட நான் செத்திருவேன்.., அழுதுகொண்டே சொன்னாள், தொட்டுக்கொண்டே இருக்க விரும்பிய கை, பற்றுதலில் விதம் விதமாய் அர்த்தங்கள் சொல்லிய கையை நிராகரித்தலின் வலி நெஞ்சுக்கூட்டில் வெப்பம் பரப்பியது.., விறுவிறுவென்று சென்றவள் திரும்பி வந்து தான் கொண்டு வந்திருந்த ஜோடி செருப்புகளை எடுத்துக்கொண்டு திரும்பினாள்,.. ஆம் அது ஒரு பெண் குழந்தையின் செருப்பு, ஏதோ யோசித்தவளாய் திரும்பி கயலின் கால்களில் இருந்த செருப்பை கழட்டி எடுத்துக்கொண்டு இதை அணிவித்து, மகிழன் முகம் பாராமல் மீண்டும் விறுவிறு நடை,
என் உயிரானவன் தற்போது வேறொருத்திக்கு உயிரானவன், அவனருகில் இருந்தால் எனக்கு அவன் மடிசாய்ந்து அழ தோன்றுகிறது.., இவனை பார்க்கவேண்டுமென தானே தவமிருந்தேன் இத்தனை நாளாய், இனியும் எதற்கு வாழனும், அவன் சந்தோசமாக இருக்கிறான், அது போதும், இந்த கற்பனை மகளும் கற்பனை வாழ்வும் போதும், இவன் எப்படியும் வீட்டை வித்துவிட்டு போவதற்கு ஒரு வாரம் ஆகும் அது வரை இந்த வாழ்வை வாழ்வோம்., இல்லையெனில் அவன் எனக்காக வருந்துவான். அவன் என்னுயிர் அவன் எக்காரணம் கொண்டும் வருந்தக்கூடாது. இறகு மனதோடு தெளிவாக சிந்தித்துக்கொண்டிருந்தாள்
…………………… தொடரும்
கருத்துகள்
கருத்துரையிடுக