முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

Nimmy’s bellwethering snub to Dharma Yudham hero.

BY  SAVUKKU   ·  JULY 25, 2018 On 15 th  May 2018, even before the complete results of Karnataka assembly poll results were fully known, Deputy Chief Minister O Panneerselvam displayed undue excitement by sending letters to BJP president Amit Shah and Prime Minister Narendra Modi to extend his felicitations for the victory and thereby ‘bellwethering a grand entry to South India.’  Such was O.Panneerselvam’s enthusiasm to please both Modi and Amit Shah. Panneerselvam used to be the trump card of BJP, with the Prime Minister himself granting him audience 5 times in a month.   Last year, before the merger of two factions, OPS used to be the blue-eyed boy of Modi, and naturally all other senior leaders of BJP used to treat OPS with respect. It was Modi who personally engineered the merger between the two ADMK factions.  Subsequently, the then Governor Vidhya Sagar Rao, did the honours by joining hands of EPS ...

அழியாக் கோலம் [சிறுகதை]

“பார்த்தவுடனே டெலீட் பண்ணிடனும்.” “பண்ணிடறேன்டி. ப்ராமிஸ்.” மௌனம். அந்த டிஎம்மின் மௌனம் உடைவதற்குள் அவர்களின் பயோவைப்பார்த்து வரலாம். அவள் அப்ஸரா. நிஜப் பெயர் அதுவல்ல; எம். ப்ரியதர்ஷினி. அவள் தலைமுறையில் எல்லா வகுப்புகளிலும், எல்லா அலுவலகங்களிலும், எல்லா வீடுகளிலும் அப்பெயரில் ஒரு பெண் இருப்பாள் என்பதால் ட்விட்டரில் கணக்கு துவக்கியபோது அப்ஸரா என்று பெயர் வைத்துக்கொண்டாள். தவிர, அவள் அப்படித்தான் கருதிக்கொள்கிறாள். உதடுகள் கோணல் என்பதைத் தவிர்த்துப்பார்த்தால் அது ஓரளவு உண்மையும்தான். ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு இன்னும் உருப்படியாய் ஜாவாவில் பேலிண்ட்ரோம் நிரல் எழுதத் தெரியாது; எழுதத்தெரியாது என்பதும் தெரியாது. ஆனால் இன்றைய தேதிக்கு ட்விட்டரில் அவளை இருபதாயிரத்துச் சொச்சம் பேர் தொடர்கிறார்கள். அவள் ட்வீட் நூறு ரீட்வீட் ஆவது சர்வசாதாரணம். அதாவது ப்ரியாவை இருநூறு பேருக்கும், அப்சராவை இருபதாயிரம் பேருக்கும் தெரியும். அதனால் அவளுக்குமே ப்ரியாவை விட அப்ஸராவைப் பிடிக்கும். நிஜத்தைவிட பிம்பங்கள் கொண்டாட்டத்துக்குரியவை!  ட...

’’ஒரே கருஞ்சட்டியில் ஊறிய நார்த்தங்காய்கள்..!’’ -

இப்போது ரெய்டு என்று நடந்து கொண்டிருப்பதெல்லாம், ஏதோ பங்காளித் தகராறு என்று கருதி வேறு வேலையைப் பார்க்கப் போவதுதான் புத்திசாலித்தனம். இந்த வெள்ளாமை ஒருபோதும் வீடு வந்து சேராது..! 150 கோடி ரூபாய் சொளையான பணம், 200 கிலோ ஒளிர்கிற சொக்கத் தங்கக் கட்டிகள், கத்தை கத்தையான ஆவணங்கள் என தொடர்ந்து சில நாட்களாகச் செய்திகள் கூவிக் கொண்டிருக்கின்றன. ஆவணங்களில் என்ன இருக்கப் போகிறது? அசையாத நிலபுலன்கள் குவிந்து கிடக்கப் போகின்றன. இது ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே நடப்பது போல ஒரு தோற்றமும் இயல்பாகவே விதைக்கப்படுகிறது. உண்மை நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாயெல்லாம் பல்லாகப் போட்டு உடைத்த காட்சியையும் செய்தியில் பார்க்க முடிந்தது. அவரது வாய்கொள்ள முடியாத இளிப்பு, அனைத்தையும் சொல்லாமல் சொல்லி விட்டது. அவரே கைதேர்ந்த ஒரு குத்தகைதாரர்தானே..? இப்போது குறிவைக்கப்பட்டிருக்கிற முதல்தர அரசு ஒப்பந்தக்காரரான செய்யாத்துரைக்கு திமுக ஆட்சிக் காலத்திலும் பல கோடிகள் மதிப்பிலான எட்டு குத்தகைகள் ஒதுக்கப்பட்டதாக போகிற போக்கில் அவர் சொன்னார். அவர் சொன்ன எல்லா விஷயங்களிலும் உண்மை இருந்தது. நீண்ட நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....