ஷண்முக ராஜன் :
நான் என் முன்னாள் காதலியை மறக்கணும்... அவள் நினைவே எனக்கு வரக் கூடாது... நான் என்ன பன்னனும்....நான்கு வருசம் நாய் மாதிரி அவள் பின்னாடி சுத்தி கடைசில அவள் வீட்டுல மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதில் என் காதல் புட்டுகிச்சி....
அராத்து :-
நாய் மாதிரி பின்னால சுத்தினாலே அது மரியாதையான காதல் இல்லையே பாஸ். யாருக்காச்சும் நாய் மாதிரி பிஹேவ் பண்றவங்களை கல்யாணம் பண்ணிக்க பிடிக்குமா? இது உங்க பிரச்சனை மட்டும் இல்லை ஷண்முக ராஜன் , பெரும்பாலான இந்திய ஆண்களின் பிரச்சனையாக இருக்கிறது. இப்போதைய காதலில் அன்பு,காதல் ,புனிதம் என்பதையெல்லாம் ஒதுக்கு வைத்து விட்டு கொஞ்சம் ப்ராக்டிக்கலாக அணுகலாம். காதலை மார்க்கெட் , டிமாண்ட் - சப்ளை கான்சப்ட் கான்சப்டில் பார்ப்போம். இப்படித்தான் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.இது உங்களுக்கான பதில் மட்டும் அல்ல ! பெருவாரியான ஆண்களுக்கான பொதுவான பதில்.
ஒரு வீட்டை வாடகைக்கு விடுகிறீர்கள்.5000 ரூபாய் வாடகைக்கு ஒருவர் வருகிறார். இரண்டு வருடங்கள் இருக்கிறார். நியாயமாக இரண்டு வருடம் கழித்து 10 சதவீதம் உயர்த்தி 5500 ரூபாய்தான் வாடகை நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் வீடு இருக்கும் ஏரியா மதிப்பு உயர்ந்து மார்க்கெட் நிலவரப்படி , 20,000 ரூபாய் ஆகி விடுகிறது. அந்த வாடகையை 5000 ரூபாய் கொடுத்துக்கொண்டு இருப்பவரிடம் கேட்க முடியுமா ? கேட்டால்தான் கொடுப்பாரா ? இந்த காரணத்தை சொல்லாமல், நானே குடி வரப்போறேன் ,அல்லது இடிச்சிட்டு கட்டப்போறேன் என ஏதேனும் காரணத்தைச் சொல்லி அவரை காலி செய்து விட்டு வேறு ஒருவருக்கு 20,000 ரூபாய்க்கு விடுவீர்கள்தானே ! அதேதான் காதலிலும் நடக்கிறது.

நான்கு வருடங்கள் நீங்கள் நாய்போல அவள் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்ததால் ,உங்கள் தகுதியை நீங்கள் வளர்த்துக்கொள்ள தவறி இருப்பீர்கள்.அடிமை போல எல்லாத்துக்கும் மண்டையை ஆட்டிக்கொண்டு இருந்ததால் அவளுக்கு உங்கள் மேல் இருந்த கவர்ச்சியும் போய் இருக்கும். நீங்கள் ஏன் அடிமை போல மண்டையை ஆட்டிக்கொண்டும்,நாய் போல பின்னாலும் சுற்றிக்கொண்டு இருந்தீர்கள் என்றால்,உங்கள் அறிவுக்கும், தகுதிக்கும்,பர்ஸ்னாலிட்டிக்கும் , அவள் அழகும் தகுதியும் ரொம்ப அதிகம் என்று உங்களுக்குத் தெரியும். மார்கெட் வேல்யூ படி நம்ம ரேஞ்சிக்கு இவள் கிடைத்தது ரொம்ப அதிகம் என்று நினைத்திருப்பீர்கள். அதனால்தான் பின்னால் அலைந்து கொண்டிருப்பது,அவமானப்படுத்தினாலும் தாங்கிக்கொள்வது ,திட்டினாலும் பொறுத்துக்கொள்வது , செருப்பால் அடித்தாலும் வாங்கிக்கொள்வது என பெரும்பாலான ஆண்கள் கேவலமாக அடிமைகள் போல காதல் என்ற பெயரில் பெண்களின் கால்களை நக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
உடனே பெண்கள் ஏமாற்று பேர்வழிகள் என்று எண்ண வேண்டாம். வஞ்சகக்காரி என பழைய கோஷத்தை எழுப்பக்கூடாது. பெண்களாவது தங்களைவிட அழகிலும் பர்ஸ்னாலிட்டியிலும் , தகுதியிலும் குறைந்த ஆண்களை தேர்ந்தெடுத்து சில காலமாவது காதலிக்கிறார்கள். சில காலம் பின்னும் தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் , உடலை மெருகூட்டாமல் , வசதியை பெருக்கிக்கொள்ளாமல் இருந்தால்தான் கழட்டி விட்டு விட்டு, மார்கெட் நிலவரப் படி அன்றைய தேதிக்கு தனக்கு இணையான ஆணை தேடிக்கொள்கிறார்கள். மொக்கை பசங்களுக்கு ஆரம்பத்தில் ஒரு வாய்ப்பு தருவது பெண்கள்தான்.

ஆண்கள் மொக்கை ஃபிகர் என நினைக்கும் ஒரு பெண்ணையாவது காதலித்து பார்த்து இருக்கிறோமா ? மொக்கை ஃபிகருக்கு ஒரு வாய்ப்பாவது தந்திருக்கிறார்களா ஆண்கள்.
சமூகத்தில் தன்னை விட தாழ்ந்த ஜாதி என கருதப்படும் ஆண்களை தயக்கமே இல்லாமல் காதலிப்பது பெண்கள்தான். எந்த ஆணாவது கீழ் ஜாதி எனக் கருதப்படும் பெண்ணை காதலித்தது உண்டா ? சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
உதாரணத்திற்கு தலித் ஆண்களை பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் காதலித்து மணந்து இருக்கிறார்கள். எத்தனை தலித் பெண்களை மற்ற ஜாதி ஆண்கள் காதலித்து மணந்து இருக்கிறார்கள்.
ஆண்களுக்கு எப்போதும் , வசதி , அழகு ,கௌரவம் , ஜாதி என அனைத்திலும் தன் தகுதியை விட அதிகமான பெண் வேண்டும் . அவளிடம் அடிமையாக கூட கிடக்க ரெடி. அவள் மார்க்கெட் வேல்யூ பார்த்து கழட்டி விட்டு போனால் கதற வேண்டியது.இந்த கதறலில் இருக்கும் இன்னொரு காரணம் என்ன என்றால் , இனி எனக்கு எந்த ஃபிகரும் கிடைக்காதே என்ற பயமும் ,தன்னிரக்கமும்தான்.
காதலி கழட்டி விட்டுப்போன அடுத்த நாள் அவளை விட அழகான, அந்தஸ்தான காதலி கிடைத்தால் ,இப்படி கதறுவீர்களா என்று ஓப்பனாக யோசித்து பாருங்கள். பழைய காதலி முன் புது காதலியுடன் சென்று காட்டி ஜம்பம் அடிப்பீர்கள் இல்லையா ?
காதலில் ஏமாற்றுவது என்று ஒன்றுமே இல்லை என்று உணருங்கள். இருவருக்கும் பிடிக்கும் வரை ஒன்றாக இருக்கலாம். அவ்வளவுதான். ஒருவருக்கு பிடிக்கவில்லையெனில் விலகி விட வேண்டும். மிக மிக நாகரீகமாக அந்த விலகல் இருக்க வேண்டும். விலகினாலும் ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை தொடர வேண்டும். 

காதலை விடுங்கள். திருமணத்திலேயே என் நிலை இதுதான். ஒருவருக்கு ஒருவர் சரிவரவில்லையெனில் விலகி விடுங்கள். சேர்தல் எப்படி இயல்பாக நடந்ததோ அதே போல விலகலும் நடக்க வேண்டும் .ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு ,பழி போட்டுக்கொண்டு ….இதுதான் இவ்வளவு நாள் காதலின் லட்சணமா? இத்தனை வருடங்களில் கொஞ்சமேனும் காதலித்தீர்களா ? அல்லது சும்மா நோண்டிக்கொண்டு இருந்தீர்களா? உண்மையான காதலில் எப்போதும் மரியாதை இருக்கும். அந்த மரியாதை தன் காதலியை / காதலனை குற்றம் சாட்டாது , ஏமாற்றி விட்டார்கள் என்று பழி போடாது.
இது இப்படி இருக்க ,முன்னாள் காதலியை மறக்க ஒரே வழி ,அவளை விட அழகான, செக்ஸியான, கிக்கான ,கும்காவாக இன்னொரு காதலியை கண்டடைவதுதான். அதற்கு முதலில் பின்னால் நாய் போல அலைந்ததை மறந்து விட்டு ,உடலை உறுதியாக்குங்கள். தொப்பையை குறைத்து உடற்பயிற்சியை தொடருங்கள்.ப்ரொஃபஷனல் வாழ்வில் தகுதியை உயர்த்திக்கொள்ளுங்கள். க்ராஷ் கோர்ஸ் , சர்டிஃபிகேட் எக்ஸாம் எழுதி உயரலாம். பணம் அதிகம் சம்பாதிக்க முயலுங்கள். கார் ,பைக் என வசதிகளை பெருக்க முயலுங்கள்.இதிலெல்லாம் கவனம் செலுத்தி வெர்ஷன் 2.0 ஆனால் , புது காதலி தன்னால் கிடைப்பாள்.
அதுவரை அவளை மறக்க….
1)அவளுடைய மெசேஜ் ,போட்டோ , மெயில் , விடியோ என அனைத்தையும் அழித்து விட்டு, அதுவரை பயன்படுத்திய மொபைலையும் தூக்கி போட்டு விட்டு, புது மொபைல் வாங்கவும்.
2) கொஞ்ச நாட்களுக்கு எவ கூடவும் பேசாதீர்கள். சாட் , இன்பாக்ஸ், கமெண்ட் ,லைக் என எல்லா எழவையும் தவிர்த்து விட்டு உங்கள் வாழ்வில் கவனம் செலுத்துங்கள்.
3)முன்னாள் காதலி நினைவு வரும்போதெல்லாம், அவ ஒரு ஈவில், பேய் , ராட்சசி என 10 தடவையாவது சொல்லிப்பழகுங்கள்.
4)அவள் செய்த டார்ச்சரையெல்லாம் நினைத்துப் பார்த்து ,அப்போது நீங்கள் அமைதியாக இருந்ததையும் எண்ணிப்பார்த்து உங்களை நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள்.
5)அவளுடைய மோசமான முகம், எந்த ஆங்கிளில் பார்த்தால் கோரமாக தெரிவாளோ , அதை நினைத்து உவ்வேக் என வாயில் கை விட்டு வாந்தி எடுங்கள்.
6)அவளைப் பற்றி நண்பர்கள் உட்பட யாரிடமும் பேசாதீர்கள்.

7) பெண்மணி சொல்லிக்கொடுக்கும் ஏதேனும் ஒரு வகுப்பில் சேருங்கள். நடனம்,இசை …இப்படி ஏதாவது ,ஆனால் அவசரப்பட்டு அந்த அம்மணியை காதலித்து விடக்கூடாது.
8) ஒரு அட்வென்சரஸ் டிரிப் செல்லுங்கள்.
9)பொதுவெளியில் உங்களின் திறமையை வெளிப்படுத்த முயலுங்கள்.
10) குட்டி குழந்தைகளுடன் நிறைய நேரம் பழகவும்
11)யோகா அல்லது வேறு ஏதேனும் விளையாட்டு விளையாடலாம்.
12)காதல் தோல்வியின் போது அறவே குடிக்கக்கூடாது. மெண்டல் ஆக்கி விடும்.
13)ஒரு நல்ல பாடி டூ பாடி மசாஜ் போய்விட்டு வாருங்கள். வாழ்வில் எல்லாமே ஹேப்பி எண்டிங் தான் !
கருத்துகள்
கருத்துரையிடுக