எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையைப் பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின் பெயர் டாக்டர் நஞ்சுண்ட ராவ். மெளனமாக உயிரை வாங்கிய தெய்வம் அவர் அப்பா டாக்டர் கருணாகர ராவ். என் மூக்கு இன்றுகடைந்த மோரையும் நேற்று கடைந்த மோரையும் அடையாளம் காணும். முளைக்கீரைக் கூட்டையும் அரைக்கீரைக் கூட்டையும் பிரித்தறியும். ஆனால் பறவை எச்சம் என் மூக்குக்கு எட்டாது. சுசீந்திரம் வலது மண்டபத்தில் டன் கணக்கான வவ்வால் எச்சம் மத்தியில் நின்று என் மாமா மூக்கைப்பொத்திய போது ‘ நாத்தமா ?அனுமாருக்கு சாத்தற வெண்ணை மக்கிப்போச்சு போல ‘ என்று சொல்லி பித்துக்குளிப் பட்டம் வாங்கியவன். நான் வேலைபார்க்கும் இடம் அப்படி . வந்தவை, செல்பவை, வாழ்பவை என எப்படியும் ஒரு ஐம்பதாயிரம் பறவைகள் உள்ள இடம் அது. கருணாகர ராவ் தொழில்முறை டாக்டர். பாதியில் விட்டுவிட்டு பறவை ஆய்வாளரானார். அவரது அப்பா திருவிதாங்கூர் திவானாக இருந்தபோது ஏலமலைப் பகுதியில் கடலோரமாகக் கிடைத்த அறுநூறு...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்