-
ஜொலிக்கிற துறையொன்றில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் குறித்துச் சொல்வதற்கு முன்னால் சில வார்த்தைகள். ஏனெனில் இது வெறுமனே கட்டுரையாக மட்டும் இல்லை. வண்ணமயமான உலகமொன்றினுள் நுழைவதற்கான முஸ்தீபுகள். சுபிட்ச முருகன் என்று சொல்லிக் கொண்டு சீக்குப் பிடித்த தாடியை வறக் வறம் என சொறிந்தபடி, வானத்தைப் பார்த்து அமர்ந்து பார்த்தாயிற்று.
எப்போதுமே ஆனந்தத்தை அடைய வழி ஒன்றுமட்டுமே என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை. பழனி மலைப் படிக்கட்டு போல, ஏராளமான படிக்கட்டுக்கள் ஆனந்தத்தை அடைவதற்கு வழிகாட்டுகின்றன.
இடைப்பட்ட சில நாட்களாக எங்கேயாவது ஓடிப் போனால்தான் தப்பிப்பேன் என்கிற மனநிலையில் உழன்று கொண்டிருந்தேன்.
இடைப்பட்ட சில நாட்களாக எங்கேயாவது ஓடிப் போனால்தான் தப்பிப்பேன் என்கிற மனநிலையில் உழன்று கொண்டிருந்தேன்.
எப்போதும் போல அடிவாரத்தில் போய் அமர்ந்தேன். சுபிட்ச முருகன் மெதுவாக தன் சட்டையை உறித்து மலைப் படிக்கட்டுகள் வழியாக ஏறிப் போனார். அந்தக் கணத்தில் சூதாடியாகவே மாறிப் போயிருந்தேன். சோர்ந்திருந்த தோள்களை நிமிர்த்தி அமர்ந்தேன். ஆனந்தி சுந்தரவதனன் என்கிற பெயரைக் கொண்ட ஒருத்தி, கையில் ஜாக் டானியல் மதுக்குவளையோடு படியிறங்கி வந்து கொண்டிருந்தாள்.
எல்லோரையும் ஒருநாள் ஒய்யாரமாய்க் கொண்டையில் முடியப் போகிறாள் பாருங்களேன். வண்ணமயமான உலகொன்று என் கண் முன்னால் விரிந்தது.எனக்கு நன்றாகத் தெரிந்த உலகது. ஊதாவும் சிவப்பும் ஆரஞ்சையும் கலந்து நட்சத்திரங்களை விளக்கொளி போல் தூவி விட்ட உலகு. லாட்டரிச் சீட்டு பார்த்திருக்கிறீர்களா? உலகில் உள்ள அத்தனை நிறங்களும் உண்டு அங்கே. அதைப் போலத்தான் சூதாடியின் உலகில் அத்தனை நிறங்களும் பின்னிப் பிசைகின்றன. அவள் அதில் செங்காந்தள் மலரின் நிறம்.
அந்த நிற உலகம் நம் தோளிற்குப் பக்கத்தில்தான் நகர்கிறது. அந்த வண்ணமயமான உலகத்தின் வாசலில் நின்று, மெதுவாய்த் திரும்பிப் பார்க்கிறவனின் கதையே அது.
அப்படியான உலகமொன்றில் நடக்கும் அதிவேகப் பாய்ச்சல்களைப் பற்றித்தான் இப்போது சொல்லப் போகிறேன். நாவலுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சூதாடிகள் சூழ் உலகு என்பதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.\
அப்படியான உலகமொன்றில் நடக்கும் அதிவேகப் பாய்ச்சல்களைப் பற்றித்தான் இப்போது சொல்லப் போகிறேன். நாவலுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சூதாடிகள் சூழ் உலகு என்பதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.\
பொதுவாகவே வெள்ளித் திரையில் தும்மினால்கூட எல்லோருக்கும் சத்தம் கேட்டு விடுகிறது. சின்னத்திரை ஆட்களெல்லாம் கொஞ்சம் பாவம்தான். சின்னச் சின்னப் பெட்டிச் செய்திகளாகக் கொண்டாடி விட்டுக் கடந்து விடுவார்கள். அந்த உலகத்தில் இருந்து ஏக்கத்தோடு உயரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன் என்கிற முறையில் கொஞ்சம் இப்போது தன்னம்பிக்கையோடு பேச ஆரம்பிக்கிறேன்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆனந்த விகடன் இதழில்தான் அப்படி எழுதியிருந்தார்கள். ஜீ தமிழ் டப்பிங் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என கிண்டலடித்து எழுதியிருந்தார்கள். இது நடந்து ஒரு ஏழு வருடங்கள் இருக்கலாம். எனக்கு உயரதிகாரிகளாக இருந்த, கண்ணன் மற்றும் பிரேம் மேனன் இருவரும், “பொறுமையா இருங்க. நமக்குன்னு ஒரு காலம் வரும்” என்று கொந்தளித்துப் போய் அறைக்குள் நுழைகிற என்னிடம் சொல்வார்கள். ஐம்பது ஐம்பது செங்கற்கற்கள் கொண்டு கட்டப்பட்ட அக்கட்டிடம் இப்போது வளர்ந்து நிற்கிற உயரத்தைப் பார்த்தேன்.
கடந்த தீபாவளி தினத்தன்று ரஜினியின் பேட்டியை ஒளிபரப்பினார்கள். ஆனாளப்பட்ட சன் தொலைக் காட்சியிலேயே அப்பேட்டி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஷயம் அதில்லை. வரவிருக்கும் 2.0 படத்தை அக்குழுமம்தான் வாங்கியிருக்கிறது என்று காரணத்தைச் சொல்லலாம். ஒரு உண்மையைச் சொல்லவா? கதிர்வேலுவின் காதல் படத்தை அந்நிறுவனம்தான் அதிக தொகைக்கு விலைக்கு வாங்கியிருந்தது. ஆனால் இங்கே வந்து பேட்டி தருவதற்காகப் பதிலாக நயன்தாரா, விஜய் தொலைக்காட்சியில் போய் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். கொதித்துப் போய் விட்டேன். இப்போது ரஜினியையே வரவைத்தார்கள் இல்லையா?
நாடோடி என்று ஒரு படம். அந்த நிறுவனம்தான் அதன் உரிமையை வைத்திருந்தது. ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் சன் தொலைக்காட்சி அந்தப் படத்தை தன்னுடைய அலைவரிசையில் ஒளிபரப்பியது. துடித்துப் போனார்கள் எல்லோரும். ஒன்றுமே செய்ய முடியாது என்பது எல்லோருக்குமே தெரியும்தானே? இன்றைக்கு ஜீ தமிழின் சின்னத் திரை தொடர் ஒன்று சன் டீவியை விட முந்திக் கொண்டு போய் நிற்கிறது. அந்தத் துறை சார்ந்த புள்ளி விபரங்களை எல்லாம் எடுத்துப் பாருங்கள். முட்டி மோதி தட்டிப் பறிக்கிற வெற்றிகள் குவிந்திருக்கின்றன அங்கே. ஆரோக்கியமான துறை சார்ந்த போட்டியும் அது.
“என்னது இஸட் தமிழா” என்று கேட்டவர்களுக்கு மத்தியில் அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டு விட்டது. இரண்டாமிடப் போட்டியில் அந்த நிறுவனம் தற்சமயப் புள்ளி விபரங்களின் படி வெற்றியும் பெற்றிருக்கிறது. வாரா வாரம் ஒவ்வொருத்தரின் தலைவிதியை நிர்ணயிக்கும் சூதாட்டமும் இங்கே நடக்கத்தான் செய்கிறது. சொல்லி முட்டி மோதுகிற யாருமே சூதாடிதான். சுற்றிச் சுழல்கிற சூதுச் சக்கரத்தில் எண்களை தன்னுடைய பிளேசர் பாக்கெட்டுகளில் கவ்விக் கொண்டு வருகிறவனே ராஜா இங்கே. அப்படியான சூதாடி ஒருத்தனின் கதையே அது. அவன் வெற்றி பெறுகிற ஒவ்வொரு சூதிலும் ஜாக் டேனியலின் வாசம் மிச்சமிருக்கும். ஆனந்தத்தை அடைகிற பாதையில் இருக்கிற படிக்கட்டுகளில் ஒன்றுமது. வெட்கம், துக்கம் தேவையில்லை அங்கே!\
சரவணன் சந்திரன்
கருத்துகள்
கருத்துரையிடுக