மரியான் & Raanjhanaa – 2013 மரியான் மற்றும் ராஞ்ஜனா ஆகிய இரண்டுக்கும் ஒருசில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆகையால், தனியே இவற்றைப்பற்றி எழுதி, படிப்பவர்களின் பொறுமையை சோதிப்பதற்குப் பதில் இரண்டு படங்களையும் ஒரே போஸ்ட்டில் போட்டுவிடலாம் என்று தோன்றியது. முதலில், ஒரு கடற்கரை கிராமத்துக்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த கிராமத்தில் நமது அனுபவம் எப்படியெல்லாம் இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அவசியம் நமது மனதில் இருக்கும். உள்ளே நுழைந்ததும் அந்த கிராமத்தில் மெக்டொனால்ட்ஸ் கிளை ஒன்று இருக்கிறது. பக்கத்திலேயே KFCயின் பிரம்மாண்டமான கிளை. அந்த கிராமத்தில் இருக்கும் மக்களில் ஒரே ஒரு பெண் மட்டும் அந்த பிராந்தியத்துக்கே சம்மந்தமில்லாமல், எந்த வேலையை செய்தாலும், எப்படிப் பார்த்தாலும் மிகவும் அழகாக, க்யூட்டாக இருக்கிறாள். அப்படியே மேலே நடக்கும்போது அங்கே எதுவுமே இல்லை என்பது தெரிகிறது. ‘இதுவும் மற்றொரு கிராமம்தான் போலும்’ என்று சோர்ந்துபோய் வெளியே வருகிறோம். இதுதான் மரியான். மரியானின் கதாநாயகி பனிமலரின் கதாபாத்திரம் மிகவும் செயற்கையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உடையிலிருந்து...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்