முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இட ஒதுக்கீடு Reservation

இட ஒதுக்கீடு பற்றிய விவாதம் வரும்போதெல்லாம் 80 வருடமா இருக்கே..இன்னும் எதுக்கு.. இன்னும் எத்தனை வருடங்களுக்கு பழைய கதையைச் சொல்லியே இட ஒதுக்கீடு கேட்பீர்கள்-னு கும்பலாச் சேர்ந்து குரல் எழுப்புவாங்க. இட ஒதுக்கீடு என்றதும் அம்பேத்கார் கொண்டு வந்தார் என்ற புரிதலும், அட்டவணை & பழங்குடியினத்தவர்க்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற புரிதலுமே பெரும்பான்மையோரிடம் உள்ளது ! இரண்டு புரிதலுமே தவறு ! இட ஒதுக்கீடு வறுமை அழிப்புத் திட்டமும் இல்லை ;வேலை வாய்ப்பை உண்டாக்கித் தருகிறத் திட்டமும் இல்லை ; என்ற புரிதல் முதலில் வேண்டும். இந்தியாவிலுள்ள இட ஒதுக்கீட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியதிலும், நடைமுறை ப்படுத்தியதிலும் தமிழகமே முன்னோடி. ஒவ்வொருக் கட்டத்திலும் கடுங் சோதனைகளைச் சந்தித்துள்ளது. இன்று இடைச் சாதியாராய் இருந்து கொண்டு இட ஒதுக்கீட்டின் பலனை நன்கு அனுபவித்துக் கொண்டே, அட்டவணை/பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடைக் குறை சொல்பவர்களுக்கு இட ஒதுக்கீட்டை ஒரு வரலாற்றுப் பார்வையில் காட்டி,  பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டே மிகுதியான சிக்...

கடலைகள்.

first impression // பொதுவா கடலைல பசங்க என்ன பேசுவாங்க.. என்ன பேசணும்.? நட்புக்கும் காதலுக்கும் இதை சேர்த்து குழப்பிக்க கூடாது.. சும்மா டைம்பாஸ் கடலைக்கு மாத்திரம். உங்க கிட்ட எல்லாரும் ரொம்ப சுலபமா பேசி பழகிடுவாங்க இல்லியா? ரொம்ப நாள் பேசிய பழகிய முகம். இத familiar face ன்னு சொல்வாங்க. அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. — இது உண்மையே கிடையாது, அப்படி யாரையும் பார்த்த உடனே நெடுநாள் பழகிய உணர்வு வரவே வராது, ஆனா இதை கேட்பதற்கு ஒரு பெண்ணுக்கு இருக்கும் விருப்பம் அலாதியானது.. மறைமுகமாக அவளை வர்ணித்தல் போலானது. நீங்க நல்லா கவனிச்சு பார்த்திங்கன்னா தெரியும் எல்லாருமே உங்க கிட்ட பேசறதுக்கு விருப்பபடுவாங்க.. ஆனா நீங்கதான் பேச மாட்டிங்க — இத எதுக்கு சொல்லணும்ன்னா…? இதுல அவளோட ஒழுக்கம் சார்ந்த ஒரு நல்ல கேரக்டர் டிஃபின் ஆகுது.. எல்லா பசங்க கிட்டயும் பேச மாட்டாள் என்னிடம் மட்டும்தான் பேசுகிறாள் என்று நீங்கள் நம்புவதாக அவள் நினைப்பாள். தன்னைப்பற்றி உண்மையே அல்லாத ஒன்று ஆனால் கேட்க நன்றாக இருப்பதை பெண் எளிதில் ஏற்றுக்கொள்வாள். அப்படியான சில மறைமுக புகழ்ச்சிகள் செம்ம கெத்து பொண்ணுங்க நீங்...

காட்சி அனுபவங்களின் கவிதை முகம்

நெடுநாட்களுக்குப் பிந்தைய சந்திப்பில் தோள்தொட்டுப் பேசும் பள்ளிக் கால நண்பனின் சிநேகம், மழை விட்ட பிறகும் மரத்தடியில் சொட்டிக்கொண்டிருக்கும் தூறல், குழந்தைகள் ஊருக்குப் போன நாளில் வீடெங்கும் சிதறிக் கிடக்கும் பொம்மைகளின் ஏக்கம் சுமந்த மவுனம் என வாழ்க்கையின் ஏதோவொரு கணத்தை ஒவ்வொரு வரியிலும் பொதிந்து வைத்து நம் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றன நா. முத்துக்குமாரின் கவிதைகள். 1997-ல் ஆரம்பித்து இதுவரை வெளியான முத்துக்குமாரின் நான்கு தொகுப்புகளின் கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது ‘நா.முத்துக்குமார் கவிதைகள்’. பொதுவாகவே, நா.முத்துக்குமாரின் கவிதைகள் காட்சிவயமானவை. ‘என் திரைப்பாடல்களிலும் ஹைக்கூவின் காட்சித்தன்மையையும், அனுபவ அடர்த்தியையும் சரிவிகிதக் கலவையாய் இணைத்து என்னுடைய பாணியாக நான் பயன்படுத்துகிறேன்…’ என்று அவரே சொல்லியிருப்பது அவரது கவிதைகளுக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஊடாடும் காட்சிகள் நம் பார்வையில் இதுவரை கவனம் பெறாத ஏதோவொரு காட்சியையும் கதையையும் நமக்குச் சொல்லிப் போகின்றன. முத்துக்குமாரின் கவிதைகளில் இடம்பெறும் சிரிக்காத அப்பாக்க...

மக்ரூன் ரகசியம்

தூத்துக்குடியின் சுவை , உப்பு அல்ல ...மக்ரூன் சோனியா காந்தி உட்பட மக்ரூனின் வாடிக்கையாளர்கள் அதிகம்.இப்போது கடல் கடந்து கனடா , அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆக ஆரம்பித்து இருக்கிறது மக்ரூன் மக்ரூன் தயாரிப்பில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர் "சாந்தி பேக்கரி"   ஸ்ரீ தர்.இவர் கடையில் மக்ரூன் வாங்க எந்நேரமும் கூட்டம் கும்மியடிக்கும். முதலில் சீனி மிட்டாய்தான் வித்துக்கிட்டு இருந்தோம் , அதே கரக்டான முந்தி பருப்பை சேர்க்கும்போது மக்ரூன் கிடைத்தது ஒரு கிலோ 600 ரூபாய் வரை விற்கிறோம்.தென் மாவட்டங்களில் நிறைய பேர் மக்ரூன் செய்து பார்க்க ஆரம்பித்தார்கள் ஆனால் சுவை அமையல.அதனால் தூத்துக்குடி மாஸ்டர்களை நிறைய சம்பளம் கொடுத்து வேலைக்கு கூட்டிட்டு போறாங்க.ஆனாலும் தூத்துக்குடி சுவையை அவங்களால் கொண்டுவர முடியல.தரமான பொருட்களே மெக்ரூன் ரகசியம் , கொஞ்சம் அசந்தாலும் டேக்ஷ்ஸ்ட் கெட்டுவிடும்.அதனால் ஒவ்வொரு ஸ்டேஜிலும் கவனமாக தயாரிப்போம். மக்ரூன் தயாரிக்க முட்டை , சர்க்கரை , முந்திரி மூன்றும் தேவை.முந்திரி பருப்பை உடைத்து எடுக்கும்போது சில சமயம் காயில் உள்ள பால் பருப்பின் ...

ஆனந்த விகடன் – என் பார்வையில்

 அதாவது விகடன் ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்று வைத்துக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் விகடன் வாங்கியவர்கள் பலர் வீட்டிலும் இந்தக் கதை சொல்லப் பட்டுக் கேட்டிருப்பீர்கள், அதாவது விகடன் வந்தவுடன் யார் அதை முதலில் படிப்பது என்று சகோதர சகோதரிகள் இடையே போட்டி நடக்கும் என்பது தான் அது. எங்கள் தாத்தா வீட்டில் விகடன் வரும் நாளன்று என் மாமா புகை வண்டி நிலையத்துக்கே போய் புத்தகக் கட்டு பிளாட்பாரத்தில் போடப்படும் போதே வாங்கிக் கொண்டு வந்து, வரும் வழியிலேயே ஒரு பாலத்தின் சுவர் மீது உட்கார்ந்து முக்கியமான பகுதிகளைப் படித்து விட்டு அதன் பின் தான் வீட்டுக்கு இதழைக் கொண்டு வருவாராம். வீட்டில்  அம்மா தான் கடைக் குட்டி. அதனால் அவருக்குப் படிக்கக் கடைசியில் தான் கிடைக்குமாம். இப்படி விகடனுக்கு அந்தக் காலத்தில் இருந்தே ஒரு சுவாரசியமான, ஜனரஞ்சகமான, குடும்பத்தில் அனைவரும் எவர் முன்னும் பிரித்து வைத்துப் படிக்கக் கூடிய ஒரு பத்திரிக்கை என்னும் மதிப்பு இருந்து வந்திருக்கிறது. எழுத்துத் துறையில் பல ஜாம்பவான்களை உருவாக்கியப் பத்திரிகை, பல புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்தப்...

அபாரமான யோசனை இருந்தால் முதலீடு தேடி வரும்!-’கவின்கேர்’ சி.கே. ரங்கநாதன்

கடலூர் மாவட்டத்தில் ஒரு சிறிய நடுத்தர குடும்பத்தில் பிறந்து கடும் உழைப்பு, நேர்மை  இவற்றால் முன்னேறி இன்று ரூ. 1000 கோடி நிறுவனமாக தனது கவின்கேர்  நிறுவனத்தை வளர்த்தெடுத்திருப்பவர், சி.கே.ரங்கநாதன். இந்திய தொழில்வர்த்தகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தமிழகத் தலைவராகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றியவர். நிறுவனத்தின் லாபத்தில் கணிசமான பகுதியை சமூகப் பொறுப்பு சார்ந்த விஷயங்களுக்காகச் செலவிடுபவர். பறவைகளிடம் பாசம் கொண்டவர். தொழில் தொடங்கும் இளைஞர்களின் முன்மாதிரி என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். அத்தகைய சி.கே.ரங்கநாதன் அவர்களுடன்  மேற்கொண்ட நேர்காணல் இது… உங்களின் குடும்பப் பின்னணி பற்றிச் செல்லுங்கள்! எனது தந்தையார் கணித ஆசிரியர். தாயார் ஒரு சிறிய பள்ளியை நடத்தி வந்தார். இண்டு சகோதரிகள்.நான்கு சகோதரர்கள் என்று பெரிய குடும்பம் எங்களுடையது. எங்களுக்கு விவசாய நிலமும் சிறிதளவு இருந்தது. தொழில் வாசனை இல்லாத குடும்பம் எப்படி தொழில் முனைவோரை உற்பத்தி செய்தது? எனது தந்தையார் ஒரு கட்டத்தில் தனது ஆசிரியர் வேலையை விட்டுவிட்டார். எங்களையெல்லாம்...