first impression // பொதுவா கடலைல பசங்க என்ன பேசுவாங்க.. என்ன பேசணும்.? நட்புக்கும் காதலுக்கும் இதை சேர்த்து குழப்பிக்க கூடாது.. சும்மா டைம்பாஸ் கடலைக்கு மாத்திரம்.
உங்க கிட்ட எல்லாரும் ரொம்ப சுலபமா பேசி பழகிடுவாங்க இல்லியா? ரொம்ப நாள் பேசிய பழகிய முகம். இத familiar face ன்னு சொல்வாங்க. அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது. — இது உண்மையே கிடையாது, அப்படி யாரையும் பார்த்த உடனே நெடுநாள் பழகிய உணர்வு வரவே வராது, ஆனா இதை கேட்பதற்கு ஒரு பெண்ணுக்கு இருக்கும் விருப்பம் அலாதியானது.. மறைமுகமாக அவளை வர்ணித்தல் போலானது.
நீங்க நல்லா கவனிச்சு பார்த்திங்கன்னா தெரியும் எல்லாருமே உங்க கிட்ட பேசறதுக்கு விருப்பபடுவாங்க.. ஆனா நீங்கதான் பேச மாட்டிங்க — இத எதுக்கு சொல்லணும்ன்னா…? இதுல அவளோட ஒழுக்கம் சார்ந்த ஒரு நல்ல கேரக்டர் டிஃபின் ஆகுது.. எல்லா பசங்க கிட்டயும் பேச மாட்டாள் என்னிடம் மட்டும்தான் பேசுகிறாள் என்று நீங்கள் நம்புவதாக அவள் நினைப்பாள். தன்னைப்பற்றி உண்மையே அல்லாத ஒன்று ஆனால் கேட்க நன்றாக இருப்பதை பெண் எளிதில் ஏற்றுக்கொள்வாள்.
அப்படியான சில மறைமுக புகழ்ச்சிகள்
அப்படியான சில மறைமுக புகழ்ச்சிகள்
செம்ம கெத்து பொண்ணுங்க நீங்க.
உங்க கண்ணை பார்த்து பேசுதல் யாராலும் முடியாத காரியம்.. ரொம்ப கூர்மையா பார்க்கறிங்க. இயல்பாக நான் பேச தடுமாற வேண்டியிருக்கு
லிப்ஸ்டிக் போட்டு இருக்கிங்களா?
..இல்லியே ஏன்?
இல்ல சும்மா தான் கேட்டேன் விடுங்க. — லிப்ஸ்டிக் போடாமலே அவள் உதடு அவ்வளோ பளபளப்பா இருக்குதாம் :)) இது அவளுக்கு புரிஞ்சு இருக்கும் இதை மேற்கொண்டு பேசக்கூடாது அங்கனையே கட் செஞ்சுக்கணும்.
..இல்லியே ஏன்?
இல்ல சும்மா தான் கேட்டேன் விடுங்க. — லிப்ஸ்டிக் போடாமலே அவள் உதடு அவ்வளோ பளபளப்பா இருக்குதாம் :)) இது அவளுக்கு புரிஞ்சு இருக்கும் இதை மேற்கொண்டு பேசக்கூடாது அங்கனையே கட் செஞ்சுக்கணும்.
அரக்கு கலர் சேலை உங்களுக்கு நல்லா பாந்தமா இருந்துச்சி.. நிறைய பசங்க சைட் அடிச்சு இருப்பாங்களே!.. — எக்காரணம் கொண்டும் நீங்க சைட் அடிப்பதாக சொல்லவே கூடாது.. இப்போ ஆமான்னு சொல்ற பொண்ணுக அத்தோட பேச்ச கட் செய்யும்… அப்படிலாம் இல்லன்னு சொன்னுச்சுன்னா. அந்த சேலைல நான் எவ்வளோ அழகாக இருந்தேன் என்பதை நீ சொல் என்று அர்த்தம்.
உங்க டிரஸ்ஸிங் செலக்சன் சென்ஸ் சான்சே இல்ல.. — எவ்வளோ மொக்கையா அவ டிரஸ் எடுத்தாலும் இதைதான் சொல்லணும். அவளின் தேர்வு மீது அவளுக்கு இருக்கும் கர்வம். இதை ரசிக்க வைக்கும்.
400 ரூபாய்க்கு ஒரு சேலை எடுத்து இருப்பாள்… இந்த சேலை எவ்வளோ 1000 ரூபாயான்னு கேட்டா போதும்.. அவ்வளோ சந்தோசப்படுவாள்
400 ரூபாய்க்கு ஒரு சேலை எடுத்து இருப்பாள்… இந்த சேலை எவ்வளோ 1000 ரூபாயான்னு கேட்டா போதும்.. அவ்வளோ சந்தோசப்படுவாள்
இனி காதல் பற்றி
நீங்க ஏன் யாரையுமே லவ் பண்ணல? — யாரை லவ் பண்றிங்கன்னு கேட்க கூடாது அது கடலைக்கு கேடு..
காதல் பற்றிய அபிப்ராயம் இருவருக்கும் வேறு வேறாக இருக்கும் அதை பற்றி விவாதிக்கும்போது கடைசியாக இன்றைய காதல் என்பது காமம்ன்னு கொண்டு வந்து முடிச்சிடனும். இதுலயும் ஒரு மறைமுக செய்தி இருக்கு… இன்றைய காதல் என்றால் காமம் அதனால் தான் அவள் யாரையும் காதலிக்கவில்லை.
உங்க கிட்ட இருக்கற ஒரே பிரச்சினையே நீங்க மற்ற பொண்ணுக மாதிரி கிடையாது.. கொஞ்சம் வித்தியாசம், நிறைய நல்ல குணம். இனிமேல் உங்களை மாதிரி ஒரு பொண்ண சந்திக்கவே முடியாதுன்னு தான் நினைக்கிறன்.
எவ்வளவு வியாக்கியானம் பேசினாலும்,புகழ்ச்சியை விரும்பாத பெண்களே உலகில் கிடையாது.. இது பெண்ணோட மீப்பெரும் பலவீனம்தான்.
எப்பயுமே அவளுக்கான ஒரு புனித பிம்பத்தை கட்டமைத்துக்கொண்டே இருக்கவேண்டும். அவளுக்கென்று ஒரு கேரக்டர் இருக்கும் அதை அவளை வெளிக்காட்டவே விடக்கூடாது.. ”நான் ரொம்ப கோபக்காரி” ன்னு சொன்னாக்க… இல்ல நீங்க அவ்வளோ கோபக்காரி எல்லாம் கிடையாது. கோபப்படும் போது கோபம் உங்களோட கட்டுப்பாட்டில் தான் இருக்கும். — இதை உண்மைன்னே நம்பிடுவாள். // உண்மை என்னன்னா கோபத்தை கட்டுப்படுத்துவது எல்லாம் முடியாத காரியம் வெளிக்காட்டாமல் வேண்டுமானால் பார்த்துக்கொள்ளலாம்.
இப்படி சொல்லி சொல்லி சொல்லி ஒரு கட்டத்தில்.. உங்களிடம் எந்த மாதிரியான கேரக்டர வெளிப்படுத்தணும் என்பதில் தெளிவாகி இருப்பாள்.. உண்மையில் அது நீங்கள் உருவாக்கிய பிம்பம். அதற்கு அவள் இசைய துவங்கி இருப்பாள்.
இது வரைக்கும் உங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சும்மா பேசுவோம் என்பதற்காகதான் பேசி வந்திருப்பாள்.. ஏன்னா நீங்க அவளைப்பற்றி சொன்னது எதுவுமே உண்மை இல்லைன்னு அவளுக்கு தெரியும். ஆனா கேட்க நல்லா இருந்துச்சி. இது ஒரு போதை மாதிரி தொடர்ந்து…, நீங்க இன்னும் பேச கேட்க வேண்டும் என்ற ஆவல் வந்து உங்களுக்கான ஒரு முக்கியத்துவம் அவளை அறியாமலே அவள் மனதில் வந்திருக்கும். இப்ப அவளை trap பண்றது ரொம்பவே ஈசி.
இவ்வளோ தூரம் கடலை போட்டது என்ன வெறும் பேச்சுக்கு மட்டுமா என்ன?
வேற மாதிரி பேச்சுக்கும் தானே!
அதற்கு தகுந்த நேரம் நைட் 11 மணிக்கு மேல. .அந்த டைம்ல இந்த பொண்ணுக மென்டாலிட்டி stable ஆ இல்லாம அலை பாஞ்சிட்டே இருக்கும்… எப்படி ஸ்டார்ட் செய்யணும்ன்னா.. /// இல்ல இதுக்கு மேல என்னால சொல்ல முடியாதுப்பா ஏன்னா என்னோட பயோ தடுக்குது,.
வேற மாதிரி பேச்சுக்கும் தானே!
அதற்கு தகுந்த நேரம் நைட் 11 மணிக்கு மேல. .அந்த டைம்ல இந்த பொண்ணுக மென்டாலிட்டி stable ஆ இல்லாம அலை பாஞ்சிட்டே இருக்கும்… எப்படி ஸ்டார்ட் செய்யணும்ன்னா.. /// இல்ல இதுக்கு மேல என்னால சொல்ல முடியாதுப்பா ஏன்னா என்னோட பயோ தடுக்குது,.
all girls உஷாரா இருந்துக்கங்க பிள்ளைகளா .// எப்படி ஸ்டார்ட் செய்யணும்ன்னு சொல்லாம விட்டது உங்க நல்லதுக்கு தான்
ஏன்னா இந்த மேட்டர்ல இந்த பயலுவளுக்கு அவ்வளோ அறிவு கிடையாது சொந்தமா பேசினா சொதப்பிடுவானுவ. :)))))))
ஏன்னா இந்த மேட்டர்ல இந்த பயலுவளுக்கு அவ்வளோ அறிவு கிடையாது சொந்தமா பேசினா சொதப்பிடுவானுவ. :)))))))
கருத்துகள்
கருத்துரையிடுக