தூத்துக்குடியின் சுவை,உப்பு அல்ல ...மக்ரூன்
சோனியா காந்தி உட்பட மக்ரூனின் வாடிக்கையாளர்கள் அதிகம்.இப்போது கடல் கடந்து கனடா,அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆக
ஆரம்பித்து இருக்கிறது மக்ரூன்
மக்ரூன் தயாரிப்பில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம்
கொண்டவர் "சாந்தி பேக்கரி"
ஸ்ரீதர்.இவர் கடையில் மக்ரூன் வாங்க எந்நேரமும் கூட்டம் கும்மியடிக்கும்.
முதலில் சீனி மிட்டாய்தான் வித்துக்கிட்டு இருந்தோம்,அதே கரக்டான முந்தி பருப்பை சேர்க்கும்போது மக்ரூன் கிடைத்தது ஒரு கிலோ 600 ரூபாய் வரை விற்கிறோம்.தென் மாவட்டங்களில்
நிறைய பேர் மக்ரூன் செய்து பார்க்க ஆரம்பித்தார்கள் ஆனால் சுவை அமையல.அதனால் தூத்துக்குடி
மாஸ்டர்களை நிறைய சம்பளம் கொடுத்து வேலைக்கு கூட்டிட்டு போறாங்க.ஆனாலும் தூத்துக்குடி
சுவையை அவங்களால் கொண்டுவர முடியல.தரமான பொருட்களே மெக்ரூன் ரகசியம் ,கொஞ்சம் அசந்தாலும் டேக்ஷ்ஸ்ட்
கெட்டுவிடும்.அதனால் ஒவ்வொரு ஸ்டேஜிலும் கவனமாக தயாரிப்போம். மக்ரூன் தயாரிக்க முட்டை,சர்க்கரை,முந்திரி மூன்றும் தேவை.முந்திரி
பருப்பை உடைத்து எடுக்கும்போது சில சமயம் காயில் உள்ள பால் பருப்பின் மீது படும்,அந்த முந்திரியை பயன்படுத்தினால்
மக்ரூனின் சுவை கெட்டுவிடும்.அதனால் தரம் பார்த்த முந்திரியை மட்டும் பயன்படுத்துவோம்.
பார்த்து பார்த்து சரியான பதத்தில் உருவாக்கப்பட்ட மக்ரூன் உடனே கெட்டுப்போகாது.காற்று
புகாத பெட்டியில் வைத்து 20 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.தூத்துக்குடியில்
இருந்து சிங்கப்பூர்,மலேசியா ,அமெரிக்கா ,துபாய்னு பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகுது மக்ரூன்.அதே மாதிரி உள்ளூரு அரசியல்வாதிகள் சென்னை போகும்போது தங்களுடைய தலைவர்களுக்கு மறக்காம
வாங்கிட்டு போவாங்க.இந்த பழக்கம் டெல்லி வரை சோனியாகாந்தி,பிரமதர் மோடி.மன்மோகன்சிங் என்று நிறைய பேர் மக்ரூன் டேஸ்ட் ரசிகர்கள்..சென்னையிலும்
ஒரு கடை இருக்கு என்கிறார்
கருத்துகள்
கருத்துரையிடுக