முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

No bra day

Sasikala 17 October 2017  ·  Jigani  ·  No bra day பற்றிய பதிவொன்று கண்ணில் பட்டது. பெண்களுக்கு ப்ரா அவசியமில்லை தேவையுமில்லை போன்ற பதிவு அது. ஆண்களின் பார்வைக்கு நாம் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகத ்தான் பெண்கள் ப்ரா அணிகிறார்கள்......... போன்ற பிணாத்தல்கள் வேறு. ப்ரா அணியாமல் டீ-ஷர்ட் அல்லது டாப்ஸ் அணிகிறோம் என்று வைத்துக் கொள்வோம், நிப்பிள் துறுத்திக் கொண்டல்லவா தெரியும்.. சாதாரண காட்டன் ப்ரா அணிந்தாலே டீ-ஷர்ட் மேல் நிப்பிள் துறுத்திக் கொண்டு தெரியும். அதனால்தான் இப்போது டீ-ஷர்ட் ப்ரா என்ற ஒன்று இதற்கென்றே ப்ரத்யேகமாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதை அணிந்த பிறகு எவ்வளவு டைட்டான டாப்ஸ் அல்லது டீ-ஷர்ட் அணிந்தாலும் உங்க நிப்பிள் சேஃப் !! மேலும், ப்ராவின் ஸ்ட்ராப் தெரிந்தாலே காமப் பார்வை பார்க்கும் சமூகம், No Braவை எப்படி எடுத்துக் கொள்ளும்  :-) நான் நிப்பிள் தெரியற மாதிரிதான் உடை உடுத்துவேன், இது என் சுதந்திரம், ஆனால் ஆண்கள் பார்க்கக் கூடாது என்று கூறுவது அரை வேக்காட்டுத்தனம். அதுமட்டுமல்லாமல் பெண்கள் தங்களின் அழகை பராமரித்து...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

தினகரன் யார் பக்கம்?

ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிரி, பிரதமர் மோடியின் தீவிர எதிர்ப்பாளர், பாஜகவைக் கொள்கைரீதியாக எதிர்ப்பவர் என்பதெல்லாம் டிடிவி தினகரன் மீது வைக்கப்படும் அல்லது திணிக்கப்படும் பார்வைகள். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கி சமீபத்திய நக்கீரன் கோபால் கைது வரை தினகரன் எடுத்த நிலைப்பாடுகளும் முன்வைத்த கருத்துகளும் எடுத்துவைத்த வாதங்களும் மேற்கண்ட பார்வைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட திசையில்தான் பயணித்துவருகின்றன. முதலில் குடியரசுத் தலைவர் தேர்தலை எடுத்துக்கொள்ளலாம். ஓபிஎஸ்ஸின் மெரினா தியானத்துக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தினர் மீதான டெல்லியின் பார்வை முற்றிலும் எதிர்மறையாகவே இருந்தது. அதன் நீட்சியாகவே இரட்டை இலை முடக்கம், அதிமுக அணிகள் உருவாக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்பதெல்லாம் நடந்தேறின. அதன் உச்சம்தான், தினகரன் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டது. ஜாமீனில் வெளியே வந்த தினகரன், பாஜகவையும் மத்திய அரசையும் மிகத் தீவிரமாக எதிர்த்தார். அந்த எதிர்ப்பின் வீரியத்தைப் பார்த்து அடுத்து வரவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தினகரன் ஆதரவ...

வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்

மலர்மன்னன் – எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்’ என்கிற ஆய்வு நூலின் வாயிலாகக் கண்ணைக் கூசும்படியான வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன் இருவரும் இணைந்து ஆய்ந்து பதிவு செய்திருக்கிற காத்திரமான ஆவணமாக இந்த நூல் தமிழ்ச் சமூக ஆய்வுத் தளத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. தோள் சீலைக் கலகத்தை முன்வைத்து இந்த நூல் தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளபோதிலும், தமிழ் நாட்டின் குறிப்பிடத்தக்க ஒரு வகுப்பின் சமூக அந்தஸ்து, படிந...

முக்குளி வாத்துகளின் கதை (சிறுகதை ‍) ‍மாரி செல்வராஜ் "பரியேறும் பெருமாள்" இயக்குநர்

சிறுகதை: மாரி செல்வராஜ், ஓவியங்கள்: ஸ்யாம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சி ன்ன முட்டிகளின் மீது நெற்றியை வைத்துக்கொண்டு ஒரு நத்தை ஊர்வதைப் போல மெள்ள நகர்ந்துகொண்டிருக்கும் இந்தத் தினங்களின்மீது, குட்டி முயல் பார்வைகொண்ட தேவதையாகக் காத்திருக்கும் என் பரிபூரணமான ஸ்ரீ குட்டியே... நீ என் வேர்களுக்கு இடையேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நம் மண் எத்தனை செழிப்பானது என்பதற்கு, நம் முற்றத்தில் திடீரென முளைத்திருக்கும் இந்த மாமரமே சாட்சி. நீ கொஞ்சம் அப்படியே இரு. அதோ மெள்ள ஊர்ந்துபோகும் அந்த நத்தையைப் பார்த்துக்கொண்டே இரு. அது தன் கூடு அடைவதற்குள், நான் உனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். பதற்றப்படாதே... கதை என்றதும் நான் உனக்கு அடிக்கடி சொல்லும் கரப்பான்பூச்சிகளின் கதைகளை நினைத்துச் சோர்ந்துவிடாதே. இந்தக் கதை இதுவரை நீ கேட்காத முக்குளி வாத்துகளின் கதை. வேண்டுமானால் என் மடியில் உன் தலையைச் சாய்த்துக்கொள். என் உடலை வளைத்து, உன் நீள நதிக் கூந்தலுக்குள் முகம்புதைத்து, குளிர்ந்தபடிகூட இந்தக் கதையை என்னால் சொல்ல முடியும். அப்படித்தான் இந்தக் கதையை நான் உனக்குச் சொல்ல வேண்டு...