No bra day பற்றிய பதிவொன்று கண்ணில் பட்டது. பெண்களுக்கு ப்ரா அவசியமில்லை தேவையுமில்லை போன்ற பதிவு அது. ஆண்களின் பார்வைக்கு நாம் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் பெண்கள் ப்ரா அணிகிறார்கள்......... போன்ற பிணாத்தல்கள் வேறு. ப்ரா அணியாமல் டீ-ஷர்ட் அல்லது டாப்ஸ் அணிகிறோம் என்று வைத்துக் கொள்வோம், நிப்பிள் துறுத்திக் கொண்டல்லவா தெரியும்.. சாதாரண காட்டன் ப்ரா அணிந்தாலே டீ-ஷர்ட் மேல் நிப்பிள் துறுத்திக் கொண்டு தெரியும். அதனால்தான் இப்போது டீ-ஷர்ட் ப்ரா என்ற ஒன்று இதற்கென்றே ப்ரத்யேகமாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதை அணிந்த பிறகு எவ்வளவு டைட்டான டாப்ஸ் அல்லது டீ-ஷர்ட் அணிந்தாலும் உங்க நிப்பிள் சேஃப் !! மேலும், ப்ராவின் ஸ்ட்ராப் தெரிந்தாலே காமப் பார்வை பார்க்கும் சமூகம், No Braவை எப்படி எடுத்துக் கொள்ளும் 

நான் நிப்பிள் தெரியற மாதிரிதான் உடை உடுத்துவேன், இது என் சுதந்திரம், ஆனால் ஆண்கள் பார்க்கக் கூடாது என்று கூறுவது அரை வேக்காட்டுத்தனம்.
அதுமட்டுமல்லாமல் பெண்கள் தங்களின் அழகை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றக் காரணம் ஆண்கள் மட்டுமல்ல என்பதையும் உணருங்கள். விட்டால் பெண்களை கவர்வதற்காகத்தான் ஆண்கள் ஜிம்மிற்குப் போய் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்கள் என்று கூட சொல்வார்கள் போல. பெண்கள் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி அவர்களின் ஆடை அலங்காரங்களும் உடலை பேணி ஃபிட்டாக வைத்துக் கொள்வதும் அவர்களுக்குள் செல்ஃப் காண்ஃபிடண்ட் அதிகரிக்க உதவுமே தவிர எதிர் பாலினத்தவரை கவர்வதற்காக அல்ல 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ப்ராவே அணிய மாட்டார்கள். அவர்களின் மார்பு ச்சீக்கிரமே தளர்ந்தும் விடுகிறது. குழந்தை ஈன்ற என் பெண் நண்பர்களிடமும் உறவின பெண்களிடமும் கட்டாயம் ப்ரா அணிந்தே இருங்கள் என்று நான் வலியுறுத்துவதுண்டு. தாய்ப்பால் கொடுக்கும் சமயங்களில் ரெகுலர் சைஸை விட ஒன்று அல்லது இரண்டு இன்ச் பெரிதாக அணிந்து கொள்ளுங்கள் என்பேன். இதுபோல் அணிந்தால் மார்புப் பகுதி எளிதில் தளராது. ஆனால் இதை நம் பெண்கள் செய்ய மாட்டார்கள். காரணம்.. சோம்பேறித்தனம் 

கருத்துகள்
கருத்துரையிடுக