படத்தில் மாடல்
இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேவ ஜம்லா
13/10/2018
2:40 pm😁😁😁
— with Lulu Deva Jamla G andதேவ ஜம்லா.இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம்.
உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர்.
அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள் நன்றாக இருந்ததும் தெரிய வந்தது.
ஆனால் பிரா அணியும் வழக்கம் கொண்ட பெண்களுக்கு இதில் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு சீக்கிரமே மார்புகள் தொங்கிப் போகக் கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது என அந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக, உடல் ரீதியாக, மார்பகங்களுக்கு பிரா அவசியமே இல்லை என்று இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பிரான்சின் பெஸன்கான் நகரில் உள்ள பிரான்ச் கோம்டே பல்கலைக்கழக பேராசிரியர் ஜீன் டெனிஸ் ரூயிலன் கூறியுள்ளார். இதைத்தான் அவர்களுக்கு ஆய்வு நிரூபித்துள்ளது.
இந்த பிரா அணியிறதால ஒரே நன்மை என்னென்னா முன்னழகை நல்ல எடுப்பா காட்டி, மத்தவங்களோட குறிப்பா ஆண்களோட கவனத்தை கவரலாம். மத்தப்படி அதால எந்த யூசும் இல்லன்னு தான் சொல்லுவேன். “பிரா போடுறதால மார்பகங்கள் தளர்ந்து போகாம இருக்கும். அது தான் பார்க்க அழகா இருக்கும். தொங்கிப் போன முலைகள் அசிங்கம். அதனால பிரா அணிஞ்சு தான் ஆவணும்.” இப்டி எல்லாம் இருக்கிற சமூக பார்வையும், கட்டாயமும் ஆணாதிக்க சிந்தனையா தான் எனக்கு தோணும்.
என்னோட ஒரு உடல் பாகம் எப்படியிருக்கணும், அது எப்படி மத்தவங்க கண்ணுக்கு தெரியணும்னு தீர்மானிக்க வேண்டியது நான் மட்டுமா தான் இருக்கணும். “எனக்கு புடிச்சா போடுவேன். இல்லன்னா கழட்டி வீசிட்டு திரிவேன” அப்டீங்கிறது தான் சுதந்திரம். மார்பகம் பெரிசா தெரியிறது தான் கவர்ச்சி. அப்டியிருந்தா தான் ஆண்களுக்கு நம்மள புடிக்கும். அப்டியில்லாத பெண்களுக்கு தன்னம்பிக்கை குறைவா இருக்கும் என்கிறதெல்லாம் சமூக பொதுப்புத்தியில் நிதர்சனம் தான்னாலும் என்னைப்பொறுத்த அளவில் பெரும் முட்டாள்தனம்.
இது ஒருவகையில் ஆணாதிக்க அடக்குமுறை. குழந்தைக்கு பால் குடுக்கிறதுக்காக படைக்கப்பட்ட ஒரு உடல் உறுப்பு என்ன சைஸ்ல இருந்தா என்ன? என்னைப்பொறுத்த அளவில், ஆணுடைய கண்களுக்கு அழகாய் தெரிவதற்காய் உருவாக்கப்பட்ட பிரா என்னும் உள்ளாடை ஒரு அட்டர் வேஸ்ட். பெண்களை போகப் பொருளாக கவர்ச்சி பொருளாக மட்டும் காட்ட பயன்படும் ஆடை அது. சினிமாவுக்காக தயாரிக்கப்பட்ட ஆடையை எவ்வளவு எளிதாக அடிப்படை உடையாக மாற்றி விட்டார்கள். அதை நம்பி அணியும் முட்டாள் பெண்ணினம் திருந்தணும். Say No to Bras.
பிரா போடுறதுல உள்ள மெயின் பிரச்சனை என்னன்னா ஃப்ரீயா இருக்க முடியாது. எப்பயுமே யாரோ நெஞ்ச இறுக்கி பிடிச்சிட்டிருக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கும். பிரா அணிந்திருக்கும்போது எனக்கு மூச்சு விடக் கூட சிரமம் இருக்கும். ஆனால் பிரா அணியாத நிலையில் நான் இயல்பாக மூச்சு விடமுடிகிறது. இதனாலேயே இப்போது எனக்கு பிரா மீதான மோகம் அறவே இல்லை என்பேன். உண்மையை சொன்னால் பிரா மீது ஒரு வெறுப்புணர்வே தோன்றிவிட்டது.
அதுமட்டுமில்ல, பிரா கொக்கியை கையை பின்னோக்கி வளைத்து மாட்டுறது எல்லாம் எம்புட்டு பெரிய இம்சை தெரியுமா? இங்க பெரும்பான்மையான பிராக்கள்ள 3 ஹூக் வச்சிருக்கானுக. இதுல ராத்திரி 2 மணி வரைக்கும் பேஸ்புக்ல கடலையை போட்டுட்டு, காலங்காத்தால 6.30 மணிக்கு அலாரம் அடிச்சது கூட தெரியாம அசந்து தூங்கிட்டு அப்புறம் ஏதோ ஒரு உள்ளுணர்வில 7.30க்கு அலறியடிச்சு எந்திரிச்சி, 8 மணிக்கு ட்யூட்டி ஸ்டார்ட் பண்ணணுமேன்னு அவசர அவசரமா பிராவ போடுறப்ப கீழ் கொக்கிய மேலயும் மேல் கொக்கிய கீழயும் மாத்தி மாட்டிகிட்டு, மிடில் கொக்கிய மாட்ட முடியாம நாம படுற அவஸ்தையிருக்கே, வார்த்தைல விவரிக்க முடியாது.
சில சமயம் இப்டியொரு யோகா போஸ்ல பிரா கொக்கி மாட்டுறப்ப முதுகு வேற பிடிச்சிகிட்டு வலி பின்னிரும். அப்புறம் “ஏப்பா ஏப்பா முதுக கொஞ்சம் தடவி வுடுவியளா?” அப்டீன்னு கெஞ்சி கூத்தாடிகிட்டு வேற திரியணும். வீக் எண்ட்ல பிரியாணி செஞ்சு தந்தா தான் தடவி உடுவேன்னு பிகு பண்ணுறவர தாஜா பண்ணி கொண்டு வரதுக்குள்ள நமக்கு தாவு தீந்திரும்.
இந்த பிரச்சனையால டெய்லி ஆபீஸுக்கு லேட்டா போயி மேனேஜர்கிட்ட திட்டு வாங்குறோம். அது மட்டுமில்லாம சரியான நேரத்துல பணிகள் முடிக்கப்படாததால் பொருளாதார இழப்பும் ஏற்படுது. இதுக்கு வேலைக்கு போறப்ப பிராவே போட வேணாம்னு சொல்லிட்டா எம்புட்டு ஈசியா இருக்கும். இதெல்லாம் uniform policy and procedures எழுதுற இந்த ஆம்பள இலிமினாட்டிகளுக்கு எங்க புரிய போவுது. அவனுவளுக்கு என்ன மூளை(முலை)யா இருக்கு நம்ம கஷ்டம் புரியிறதுக்கு.
அதுக்காக நீ பிரா போடுறதே இல்லியான்னெல்லாம் வந்து கேட்டுகிட்டு நிக்காத. எனக்கு தோணுறமாதிரி நடப்பேன். அம்புட்டு தான். இன்னிக்கு ஆஃபீஸுக்கு பிரா அணிய தேவையில்லைன்னு சொல்லிட்டதால நிறையபேர் ஃப்ரீயா திரிஞ்சாங்க.
ஆங் நானா? சொல்லமாட்டேன். ஏன்னா எங்கூட்டுகாரரு மானம் போயிரிச்சின்னு குய்யா முய்யான்னு கத்துவாரு. அப்பறம் டேக் பண்ணி பதிவு போட்டு திட்டுவாரு. அதெல்லாம் எனக்கு தேவையா? நான் புத்திசாலி! 💪💪💪
லுலு தேவ ஜம்லா
13/10/2017
6:45 pm
மீள் பதிவு
பிகு:- இது போன வருஷம் இதே நாள்ள என்னோட பழைய ஐடியில எழுதின பதிவு... இன்னிக்கு எழுதியிருந்தா இது இன்னும் உக்கிரமா இருந்திருக்கும், அதாவது நீ இந்த படத்துல பிரா போடலியான்னு யாராச்சும் கேட்டா “இல்ல போடல, இப்ப என்னான்னுற?” அப்டீன்னு டைரக்ட் பதிலா இருந்திருக்கும்னு சொல்ல வரேன்
அன்பில்

கருத்துகள்
கருத்துரையிடுக