முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருத்தப்பட்ட தீர்ப்பு


தங்களுடைய விலைப்புள்ளிதான் குறைவானது என்று சீன நிறுவனம் எடுத்து வைக்கும் வாதத்தை,  நிதித்துறை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளக்கூடும்.  ஆனால் அவ்வாறு நிபுணர்கள் செய்யும் ஆய்வை நீதிமன்றம் செய்ய இயலாது.   இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் சட்டரீதியான விவகாரங்கள் குறித்து ஆராய வேண்டுமே ஒழிய, நிதி தொடர்பான விவகாரங்களில் நுழையக்கூடாது.    மின் வாரியம் கூறியபடி பார்த்தால், இந்த விவகாரத்தில் மறைமுக கட்டணம் இருக்கும் என்று தெரிகிறது.    ஆக மின் வாரியம், இந்த விவகாரத்தில் ஒரு கணக்கு போட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு, நீதிமன்றம் ஒரு நிபுணரின் பணியை எடுத்து, எது குறைந்த விலைப்புள்ளி என்று கணக்கிட இயலாது.    ஆகையால் இந்த வாதத்தையும் நிராகரிக்கிறேன்.
சீன நிறுவனம், மற்றும் பெல் நிறுவனம் இரண்டையும் ஒப்பிடுவதற்கான பொதுவான அளவுகோல்கள் இல்லை.   சீன நிறுவனம் பழமையான நிறுவனம் என்றால், பெல் நிறுவனம் அனுபவம் வாய்ந்த நிறுவனம்.    இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு திட்டங்களை கையாண்ட அனுபவம் மிக்க பெல் நிறுவனம் ஒரு பெரும் நிறுவனமாகவும், சீன நிறுவனம், ஒரு சாதாரண பொடியனாகவும் தமிழக மின் வாரியத்துக்கு தோன்றியிருக்கக் கூடும்.    ஒரு பொதுத்துறை நிறுவனம் என்ற வகையில், டேவிட்டுக்கும் கோலியாத்துக்கும் இடையே நடக்கும் போட்டியில் டேவிட்டை விட கோலியாத்தை தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்று மின் வாரியம் கருதுமேயானால் அதை குறை சொல்ல முடியாது. அடுத்ததாக, தெரியாத தேவதையை விட, தெரிந்த சாத்தானே மேல் என்று மின் வாரியம் பெல் நிறுவனத்தை தேர்ந்தெடுத்துள்ளது
05_Electricity2_0
எண்ணூர்  அனல் மின் நிலைய திட்டத்தில், சீன நிறுவனத்தின் டெண்டரை நிராகரித்து, பெல் நிறுவனத்துக்கு தமிழக மின் வாரியம் அடாவடியாக டெண்டர் வழங்கியது குறித்து நடத்தப்பட்ட வழக்கில் நீதிபதி ராமசுப்ரமணியம் வழங்கிய தீர்ப்புதான் நீங்கள் மேலே படித்தது.    இந்தத் தீர்ப்பு எப்படி பிழையான ஒரு தீர்ப்பு என்பதை ஒரு விரிவான கட்டுரை மூலம் விளக்கப் பட்டிருந்தது.  இணைப்பு     இந்தத் தீர்ப்பை ரத்து செய்து, கடந்த வாரம், நீதிபதி சுதாகர் மற்றும் நீதிபதி வாசுகி அடங்கிய அமர்வு, ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளது.      இத்தீர்ப்பின் விபரங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
பெல் நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம்.     சீன நிறுவனம், சீன அரசின் பொதுத்துறை நிறுவனம்.  அந்நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த சிலரோடு கூட்டு ஒப்பந்தம் போட்டு, அதன் மூலம் இந்த டெண்டரில் பங்கெடுத்தது.   பெல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனம்தானே ….  அந்நிறுவனத்தால் எப்படி லஞ்சத் தொகை கொடுக்க முடியும் என்ற கேள்வி எழும்.   பெல் நிறுவனத்துக்கு வழங்கப்படும் அத்தனை டெண்டர்களையும், பெல் நிறுவனமே செய்து முடிப்பதில்லை.  மாறாக, தனியார் நிறுவனங்களுக்கு சப் காண்ட்ராக்ட் விடுவது காலங்காலமாக இருக்கும் வழக்கம்.    இது போன்றதொரு சப் காண்ட்ராக்ட் நிறுவனத்திடம் பெரிய தொகையை வாங்கிய காரணமாகவே,
நீதிபதி ராமசுப்ரணியத்தின் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கை தொடுத்தது சீன நிறுவனம்.  அந்நிறுவனம், தங்கள் மனுவில், பெல் நிறுவனத்துக்கு எண்ணூர் டெண்டரை வழங்கியது எவ்வளவு பிழையானது என்பதை விரிவாக எடுத்துரைத்திருந்தது.       ஆனால், தீர்ப்பளித்த ராமசுப்ரமணியமோ, பெல் நிறுவனம் இந்திய நிறுவனம் என்ற ஒரே காரணத்தின் காரணமாக அந்நிறுவனம் தவறிழைத்தால் கூட பரவாயில்லை என்று தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி ராமசுப்ரமணியம்.   ஆனால் அவர் கூறிய ஒரு காரணத்தைக் கூட சுதாகர் அமர்வு ஏற்கவில்லை.   அந்த தீர்ப்பின் சாரம் உங்களுக்காக.
பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் காரணமாக, நீதிமன்றத்தில் யாருமே சமரப்பிக்காத ஒரு ஆய்வறிக்கையை கோடிட்டுக் காட்டி, பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருக்கையிலேயே பெல் நிறுவனத்தோடு மின் வாரியம் டெண்டர் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது என்பதை குறிப்பிடும் நீதிபதி சுதாகர், இந்த ஒரே காரணத்துக்காகவே நீதிமன்றம் இந்த டெண்டரில் தலையிட முடியும் என்று கூறுகிறார். மேலும் இந்த டெண்டரில் சட்டவிரோதமாகவும் பாரபட்சமாகவும் பல விவகாரங்கள் நடந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார் நீதிபதி.    டெண்டர் தொடர்பான மதிப்பீடுகள் ஜுலை மற்றும் ஆகஸ்ட் 2014 வரை நடைபெறவில்லை என்பது, இந்த வழக்கு விசாரணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இவ்வழக்கில் வாதிடும் அரசு தலைமை வழக்கறிஞரோ, 2 ஜுன் 2014 அன்றே, பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவது என்ற முடிவெடுத்துள்ளார்.  இதில் ஏதாவது ஒன்று மட்டுமே உண்மையாக இருக்க முடியும். 
அரசு வழக்கறிஞர் பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக 2 ஜுன் 2014 முடிவெடுக்கப்பட்டது என்று கூறுகிறார்.  ஆனால் தனி நீதிபதியோ (ராமசுப்ரமணியம்)  ஆலோசனை நிறுவனம் அறிக்கை அளித்த 30 மே 2014 அன்று முடிவெடுக்கப்பட்டதாக கூறுகிறார்.   ஒரு நீதிமன்றத்துக்கு கடிகாரத்தை பின்னோக்கித் திருப்பி வைக்க எப்படி முடிந்தது என்பது புரியவில்லை. 
தனி நீதிபதி 19 ஆகஸ்ட் 2014 அன்று தீர்ப்பு வழங்கும் வரை, டெண்டர் முடிவு செய்யப்பட்டதா இல்லையா என்ற தெளிவான முடிவுக்கு மின் வாரியம் வரவில்லை.    அப்படி முடிவு செய்யாமல், நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்ப, தேதிகளை முடிவு செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே மின் வாரியம் இருந்ததாக தெரிகிறது. இது பாரபட்சமான முடிவு இல்லையென்றால் வேறு எது பாரபட்சமான முடிவு என்று எங்களுக்குத் தெரியவில்லை. 26 செப்டம்பர் 2014 அன்று நடைபெற்ற மின் வாரியத்தின் 55வது கூட்டத்தில் டெண்டரை பெல் நிறுவனத்துக்கு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டதே  ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரையின்படி என்று நீதிபதி ராமசுப்ரமணியம் கூறுகிறார்.  ஆனால் ஆவணங்களை பரிசீலித்துப் பார்த்ததில்  26 செப்டம்பர் அன்று நடந்த மின் வாரிய கூட்டத்தில்தான், பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  ஒரு டெண்டரை, ஒன்று மின்வாரிய குழு முடிவு செய்ய வேண்டும்.  அல்லது, ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரையின் படி முடிவு செய்ய வேண்டும்.  ஒரே டெண்டரை, ஆலோசனை நிறுவனமும், மின் வாரியமும், தனித்தனியாக ஆராய்ந்து பரிசீலனை செய்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.    இது வெளிப்படையான டெண்டர்கள் சட்டத்துக்கு எதிரானது.  வெளிப்படையான டெண்டர்கள் சட்டத்தில்,  டெண்டரை பரிசீலித்து முடிவெடுப்பது, மின் வாரியத்தின் பொறுப்பு, ஆலோசனை நிறுவனத்தைக் காரணம் காட்டி, மின் வாரியம் தப்பிக்க முடியாது என்பது தெளிவாக உள்ளது. ஆலோசனை நிறுவனத்தின் பரிந்துரையை மின் வாரியம் பெரிதும் சார்ந்திருப்பது, பொறுப்பை தட்டிக் கழிப்பதேயன்றி வேறில்லை. சீன நிறுவனத்துக்கு டெண்டர் ஏன் வழங்கப்படவில்லை என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டியதில்லை என்று மின் வாரியம் கூறுகிறது.  ஆனால் இது பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானதாகும்.
இந்த டெண்டர் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்திலும், பெல் நிறுவனமும், சீன நிறுவனமும் பங்கேற்றுள்ளன.   ஆலோசனை நிறுவனமும் பங்கேற்றுள்ளது.   இக்காரணத்தால், டெண்டர் தொடர்பாக என்ன நடக்கிறது என்பது அனைத்தும் சீன நிறுவனத்துக்கு தெரிந்தே உள்ளது.  ஆகையால், ரகசியமாக மின் வாரியத்திலிருந்து தகவல்களை சீன நிறுவனம் பெற்றது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.    7.2 சதவிகிதத்திலிருந்து 6.2 சதவிகிதமாக வட்டியை சீன நிறுவனம் குறைத்துள்ளது.  இதன் மூலமாக மின் வாரியத்துக்கு சேமிப்பு மட்டும் 1300 கோடி.  இப்படிப்பட்ட ஒரு அற்புதமான வாய்ப்பை மின் வாரியம் ஏன் நிராகரித்தது என்பது புரியாத புதிராக உள்ளது.   27 ஜுன் 2014 அன்று நடந்த மின் வாரியம் மற்றும் சீன நிறுவனம் மற்றும் பெல் நிறுவனத்தோடு ஆலோசனைக் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் முறையே 7.2லிருந்து 6.2 மற்றும் 12.25லிருந்து 12.15 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது.  ஆனால், இந்த வட்டி விகிதக் குறைப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற காரணத்துக்காகவே, 2.6.2014 அன்று பெல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மின் வாரியமும், 30.05.2014 அன்று பெல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக, நீதிபதி ராமசுப்ரமணியமும் ஒரு நிலைபாடு எடுத்துள்ளனர்.    இது எந்த அடிப்படையில் என்பது புரியவில்லை.
1300 கோடி என்பது சிறிய தொகை அல்ல.  இந்தத் தொகையை தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தியிருக்க முடியும்.   ஆனால், இவ்வளவு பெரிய தொகையை சேமிக்க வாய்ப்பு இருந்தும் தமிழக அரசு ஏன் அதை புறந்தள்ளியது என்பது புரியவில்லை.  இந்த வட்டி குறைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், மின்சாரம் தயாரிக்கும் செலவு குறைந்து, இதனால் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்திருப்பர்.
பெல் நிறுவனம் தேசியமயமாக்கப்பட்ட நிறுவனம் என்பதால், பெல் நிறுவனத்தின் செயல்பாடுகளை சந்தேகப்பட அவசியம் இல்லை என்றும், தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளை சந்தேகத்தோடுதான் அணுக வேண்டும் என்ற நீதிபதி ராமசுப்ரமணியத்தின் கருத்து, தேவையற்றது. இது ஒரு சர்வதேச டெண்டர்.  இதில் பங்குகொள்ளும் நிறுவனங்கள் அனைத்தும், ஒரே அளவீட்டில்தான் அணுகப்பட வேண்டும்.
ஆலோசனை நிறுவனத்தின் அறிக்கைப்படி, பெல் நிறுவனம், சீன நிறுவனம் ஆகிய இரண்டுமே தொழில்நுட்ப வகையில் சிறந்தவை.  இத்திட்டத்தை செயல்படுத்தும் திறன் கொண்டவை. ஆனால், கடந்த காலத்தில் இந்நிறுவனங்கள் எப்படி செயல்பட்டுள்ளன என்று ஆராய்வது அவசியம்.
நம் நாடு, சோம்பேறித்தனம், தாமதம், அலட்சயி மனப்பான்மை போன்றவற்றால் உரிய பொருளாதார வளர்ச்சி அடையாமல் தேங்கியுள்ளது.   இந்தியாவில் மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஏராளமான மக்கள் இருந்தும், அது சரியான திசையில் செல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.   மின் திட்டம் போன்ற முக்கிய திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை நீதிமன்றம் கண்டுகொள்ளாமல் விடவேண்டுமா என்றால் இல்லை என்பதே அதற்கு விடை.  பல நேர்வுகளில் தாமதத்தின் காரணமாக தண்டக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இரண்டு தீர்ப்புகளுக்கும் எவ்வளவு வேறுபாடு பார்த்தீர்களா ?   நீதிபதி ராமசுப்ரமணியம், பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு அறியாமலோ, தவறுதலாகவே அளிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல.    நீதிபதி ராமசுப்ரமணியம், ஒரு கற்றறிந்த நீதிபதி.   அவர் தெரியாமல் தவறிழைக்கும் நீதிபதி அல்ல.     பெல் நிறுவனத்தை விட சீன நிறுவனம் குறைவாக டெண்டர் அளித்துள்ளது, வட்டி விகிதம் குறைவு, மின் வாரியத்துக்கு 1300 கோடி சேமிப்பு வரும் என்ற விபரங்களையெல்லாம் அறிந்தே அப்படியொரு தீர்ப்பை வழங்கினார்.    அந்தத் தீர்ப்புக்காக அவர் தெரிவித்திருந்த காரணங்கள் மிகவும் அபத்தமாக இருந்தன.   பெல் நிறுவனம் இந்திய நிறுவனம் என்ற ஒரே காரணத்துக்காக இது போன்றதொரு தீர்ப்பை வழங்கினார்.   சரியாக செயல்படாத, தாமதத்துக்கு பெயர்போன நிறுவனம் இந்திய நிறுவனம் என்பதால் அதற்கு எல்லா டெண்டர்களையும் கொடுத்து விட முடியுமா ?  தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா ?
பெல் நிறுவனத்துக்குத்தான் டெண்டரை வழங்க வேண்டும் என்றால் உலகளாவிய டெண்டர் எதற்கு ?   நேரடியாக பெல் நிறுவனத்துக்கு வழங்கி விடலாமே ?
நல்ல நீதிபதி என்று பெயரெடுத்த நீதிபதி ராமசுப்ரமணியம் பெல் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது சரி என்று தீர்ப்பளித்திருக்கிறாரே என்பதுதான் வேதனையான விஷயம்.    தன் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், ஆவணங்கள் என்ன ?  எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் என்ன என்பதை வைத்து தீர்ப்பளிப்பதற்கு பதிலாக அரசுத் தரப்பு ரகசியமாக அளித்த ஆவணங்களின் படி தீர்ப்பளித்துள்ளார்.    நீதிபதி சுதாகர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல பல இடங்களில் தேதிகள் மற்றும் சில அறிக்கைகள் குறித்து முரண்பாடான வாதங்களை பதிவு செய்துள்ளார்.   தன் முன் எடுத்து வைத்துள்ள வாதங்கள் என்ன என்பதை அப்படியே பதிவு செய்திருந்தால், நீதிபதி ராமசுப்ரமணியத்தால் பெல் நிறுவனத்துக்கு ஆதரவாக இப்படியொரு தீர்ப்பை வழங்கியிருக்க முடியாது.
நீதிபதி ராமசுப்ரமணியம்
நீதிபதி ராமசுப்ரமணியம்
இந்த வழக்கில் கவனிக்கத்தக்க மற்றொரு முக்கிய அம்சம், நீதிமன்றத்தில் மின் வாரியம் கூசாமல் உரைத்த பல்வேறு பொய்கள்.  இந்த வழக்கில் எப்படியாவது வென்றாக வேண்டும் என்பதற்காக, நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பாகவும், டிவிஷன் பென்ச் முன்பாகவும், பல்வேறு பொய்களை அரசுத் தரப்பு உரைத்தது.   அந்தப் பொய்களை நம்ப விரும்பிய நீதிபதி ராமசுப்ரமணியம், அந்தப் பொய்களுக்கு சான்றளிக்கும் வகையில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறினார்.  ஆனால் இது எதுவும், நீதிபதி சுதாகர் முன்பாக எடுபடவில்லை.
பெல் நிறுவனத்துக்கு ஒரு டெண்டர் வழங்குவதற்காக, தமிழக மின் வாரியம் எதற்காக இவ்வளவு பொய்களை உரைக்க வேண்டும் என்பது புதிராக உள்ளது அல்லவா ? அங்கேதான் மின்வாரியத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய தலைமைச் செயலாளருமான ஞானதேசிகன் வருகிறார்.    ஏற்கனவே, பெல் நிறுவனத்தின் துணை காண்ட்ராக்டர்களிடம் பெற்ற பணத்துக்கு விசுவாசமாகவே, நீதிமன்றத்தின் முன் இத்தனை பொய்கள்.
நீதிபதி சுதாகர்
நீதிபதி சுதாகர்
இந்த அற்புதமான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் சுதாகர் மற்றும் வாசுகியை பாராட்டியே ஆக வேண்டும்.    நீதிபதி ராமசுப்ரமணியத்துக்கு வந்த அழுத்தங்கள் போலவே, நீதிபதி சுதாகருக்கும், அரசுத் தரப்பிலிருந்து பல்வேறு அழுத்தங்கள் வந்திருக்கக் கூடும்.  ஆனால் எந்த அழுத்தத்துக்கும் அசைந்து தராமல், இப்படியொரு அற்புதமான தீர்ப்பை வழங்கிய இந்த நீதிபதி சுதாகர்தான், குமாரசாமிகளைப் பார்த்து நம்பிக்கை இழந்த சமூகத்துக்கு நம்பிக்கையூட்டுகிறார்.
இந்தத் தீர்ப்பு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, இந்தியாவிலேயே முதலீட்டாளர்களை வரவேற்று, பட்டுக் கம்பளம் விரிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்று அடித்துக் கொண்டிருந்த டம்பத்தை, இந்தத் தீர்ப்பு கிழித்தெறிந்திருக்கிறது.  17 ஆயிரம் கோடி அந்நிய முதலீட்டை தவறான முடிவின் மூலம் நிராகரித்து விட்டு, முதலீட்டாளர்களின் ஆதரவாளர் போல நாடகமாடுகிறார் ஜெயலலிதா.
அந்த வகையில இந்தத் தீர்ப்பு, பல முகமூடிகளை கிழித்துள்ளது.   கடைசியாக வந்த தகவலின்படி, மின் வாரியம் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்வதாக தகவல் வந்துள்ளது.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

TAMIL MAGAZINES

JAGADEESH N.V. TAMIL MAGS Thousand Lights In The Pocket Small in format, but brimming over with articles and photos on everything under the sun, explaining politics, films, gobar gas VAASANTHI   I am sure that to the outside world, Tamil Nadu appears queer: those conservative, retrograde, idli-dosa-eating, film-crazy, ves­hti-clad Madrasis! But to me, an insider, the most enduring image of my state is that of rickshaw-pullers reading Tamil newspapers and magazines during their free time, unmindful of the scorching sun. Tucked under the passenger seat of every rickshaw, there would always be some reading mate­rial, some daily or periodical. And the roadside petti-­kadais (small shops that sell cigarettes, paan, bananas, cold drinks and even tea) have one major attraction—rows of Tamil periodicals, many of them pocket-sized, bestriding the string by the middle-page, or columns held in place by clips. You’ll never find last week’s iss­ue of  Vikatan, Kumudam, K...

Politics is a dangerous game: Rajinikanth

In an in-depth interview at his home in Poes Garden, Rajinikanth spoke candidly to India Today not only about his life and films but also his political vision for Tamil Nadu, and a range of burning public issues. Raj Chengappa  Amarnath K. Menon  New Delhi  November 30, 2018 ISSUE DATE: December 10, 2018 UPDATED: December 1, 2018 10:26 IST Photographs by Bandeep Singh Will he, won't he? Southern superstar Rajinikanth has exhibited Hamletian indecision about pursuing a political career ever since he announced he was joining the fray in December 2017. So far, he has not even announced the name of his political party, choosing instead to deploy his massive fan following under the umbrella of his Rajini Makkal Mandrams and using them to build a cadre of party workers across Tamil Nadu. Meanwhile, the ageing star (he is 67) continues to do what he knows best-make iconic films. His latest-2.0, releasin...

இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:

இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தினார்.இதனை...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

சொன்னதும் செய்ததும்.

தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டு வருகிறது.  முடங்கிப் போன நிர்வாகம், பெருகிய ஊழல், செயல்படாத அரசு, தலைகாட்டாத முதல்வர் என்று அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார் ஜெயலலிதா.    கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசுகையில், “அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான். எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தன...