முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காபி தோட்டமும் காமன்மேனும்!


-சரவணன் சந்திரன்


காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன.
இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான பாடங்கள் கற்பதற்காகக் காத்துக் கிடக்கின்றன.
எங்கிருந்து எதைக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதில்தான் எங்கே இருக்கப் போகிறோம் என்பது உறுதியாகிறது. கர்நாடகா செல்லும் போதெல்லாம் உடனடியாகவே இரண்டு பேர் நினைவிற்கு வருவார்கள். கேப்டன் கோபிநாத்தும் சித்தார்த்தாவுமே அவர்கள். “FISHIN" துவங்குவதற்கு முன்னால், அது மாதிரியான கடைகள் பெங்களூரில் ஏற்கனவே இருப்பதாகக் கேள்விப்பட்டு அதைப் பார்க்கப் போயிருந்தோம். கடையின் முகப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு, “இதோ அதை மாதிரி” என நண்பன் ராஜ்மோகனிடம் காட்டியது, காபி டே கடையின் முகப்பைத்தான். கத்தரிப்பூ நிறத்தினுள் வெள்ளை வெளிச்சம். அதை மாதிரியாக வைத்தே ஊதா நிறத்தில் வெள்ளை எழுத்துக்களைப் பொறித்தோம். அந்த வகையில் சித்தார்த்தாவிற்கு எங்களது குட்டி நிறுவனம் நன்றிக்கடனோடு அஞ்சலியும் செலுத்துகிறது.
காபி தோட்டத்து உரிமையாளர் வீட்டுப் பையனான சித்தார்த்தா இயல்பாகவே கோப்பைக்குள் காபியை அடைத்து விற்கிற கனவை வந்தடைந்தார். சித்தார்த்தாவுக்கும் இராணுவத்தில் சேர விருப்பம் இருந்திருக்கிறது. ஒருவேளை சேர்ந்து விட்டு மறுபடி தொழில் துவங்கியிருந்தால் இந்த முடிவிற்கு வந்து சேர்ந்திருக்கவும் மாட்டார். அதற்கு முன்னர் அவருக்கு எல்லா விதங்களிலும் நல்ல கல்வியும் நற்சூழலும் கிடைத்திருக்கிறது. எவருக்கும் கிடைக்காத அரும்பாக்கியமது என்றே வர்ணிப்பேன் அதை. எதுவுமே இல்லாதவர்களுக்கே அதன் அருமை புரியும். காபி தோட்டத்தினுள் சுற்றும் குளுகுளுவென்ற வாழ்க்கையே அது. என்னுடைய கல்லூரியில் அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த காபி தோட்டத்து உரிமையாளர்களது பையன்கள் பலரைப் பார்த்திருக்கிறேன் என்கிற வகையிலேயே இதைக்கூடச் சொல்கிறேன். சித்தார்த்தா பற்றிய மேற்படி தகவல்களையெல்லாம் இணையத்தில் தேடினால் அதிகமாகவே கிடைக்கக்கூடும்.
ஆனால் இங்கே வேறொரு விஷயத்தைப் பேசப் பிரியப்படுகிறேன். அதே கர்நாடகத்தில் இருக்கிற குக்கிராமம் ஒன்றில் இருந்து கிளம்பிய வேறோருத்தரின் கதையும் நம்முன்னே ஏற்கனவே கடைபரப்பப் பட்டிருக்கிறது. எட்டுப் பிள்ளைகள் கொண்ட வீட்டில் இரண்டாவதாகப் பிறந்தவர் அவர். ஆசிரியரான தந்தையிடம் வீட்டில் இருந்தே கல்வி கற்றார். ராணுவத்தில் சேர்ந்தார். அதற்குப் பிறகு கேப்டன் கோபிநாத் இவரென உலகம் அடையாளம் காணத் துவங்கியது அவரை. இந்தியாவின் முதல் உள்ளூர் குறைந்த கட்டண விமான சேவையைத் துவக்கியவர் அவரே. 2003 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் தன்னுடைய சேவையைத் துவக்குவதற்கு முன்பு வரை அப்படியொன்று நடக்கும் என எவருமே நம்பவில்லை. விமானப் பயணம் என்றாலே, இன்னொரு தட்டினருக்கானது என்றே இருந்த புரிதலை அடித்து நொறுக்கியவர் அவர்.

பூனைநடை நடந்தெல்லாம் அந்த இடத்தை வந்து சேரவில்லை அவர். “Simply Fly” என அவர் எழுதிய புத்தகத்தில் கடந்து வந்த பாதையை சமரசமில்லாமல் விரித்து வைத்திருப்பார். அந்தப் புத்தகம் தமிழில்கூடக் கிடைக்கிறது. தொழில் தொடங்க நினைப்பவர்கள் தவறவே விடக்கூடாத புத்தகம் அதுவென்பேன். ஆரம்பத்தில் ஹெலிஹாப்டர் சேவையாகத் துவங்கிய பயணம் எப்படிப் படிப்படியாக விமானச் சேவையாக வளர்ந்தது என்பதை வர்ணித்திருப்பார் அதில். அவர் பட்ட துயரங்களையெல்லாம் வேறு யாராவது சந்தித்திருந்தால், ஆரம்பத்திலேயே விலகி ஓடியிருப்பார்கள். நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்றார் கேப்டன் கோபிநாத்.

இப்போது தோற்றுப் போன தொழிலதிபர் என்கிற அடைமொழியோடு இன்னொரு நாட்டில் தஞ்சமடைந்து கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் விஜய் மல்லையா ஏர் டெக்கானின் பெரும்பாலான பங்குகளை விலை கொடுத்து வாங்கி விட்டு, கேப்டன் கோபிநாத்தை என்ன பாடு படுத்தினார் என்பதையெல்லாம் படித்தால், மல்லையாவை காலம் ஊரை விட்டு விரட்டியது சரிதான் என்கிற முடிவிற்கு இயல்பாகவே வந்து சேர்ந்து விடுவோம். என்னையெல்லாம் கேட்டால் காலம் அவரை தண்ணியில்லாத காட்டிற்குத்தான் துரத்தியிருக்க வேண்டுமென்பேன். ஏற்கனவே பல இடங்களில் பலநேரங்களில் சொன்னதைத்தான் திரும்பவும் இந்த இடத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது. வெயிலடி படுகிற செடிகளே எல்லா வறட்சிகளையும் எதிர்த்து நிற்கிற திராணியைப் பெறுகின்றன.
சித்தார்த்தா விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே இருந்த தங்களுடைய குடும்ப வணிகத்தைத் திறம்பட எடுத்து விரித்துப் பறந்தார். ஆனாலும் நிழலடி பட்ட செடியே அவர். எதிர்த்து நிற்கிற திறத்தை எங்கே இழந்தார்? என்ன இல்லை அவரிடம்? எதற்காக காலத்தின் முன்னால் மண்டியிட்டார்? கேப்டன் கோபிநாத் கதை அப்படியில்லை. வெறும் கையில் முழம் போட்டு வானத்தில் தனக்கான அடையாளத்தைப் பறக்க விட்டார். சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். ஏர் டெக்கானின் முதல் விளம்பரத் தூதர் ஆர்.கே.லட்சுமண் வரைந்த காமன்மேன் வரைசித்திரமே. தரையிலிருந்து புறப்பட்ட காமன்மேன் எதிர்ப்புகளை எளிதாகவே எதிர்கொண்டார்.
இதைப் பொதுமைப்படுத்த முடியாது என்பது நன்றாகவே புரிகிறது. எல்லா இடங்களிலும் எல்லா மாதிரியான ஆட்களும் இருக்கவே செய்வார்கள். ஆனாலும் பொதுவாகவே முதல் தலைமுறையாய் முட்டி மோதுகிறவர்களிடம் இருக்கிற தீரம் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோர்களிடம் இருப்பதில்லை. நன்றாகத் தெரிந்த சரவண பவன் ஹோட்டல் சங்கிலியையே எடுத்துக் கொள்வோம். சில கிளைகளுக்கு இப்போது போய்ப் பார்த்த போது, அருளடங்கி இருப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. உணவிலும் தரத்திலும் எப்போதோ அது சரிவை நோக்கி நகர்ந்து விட்டதென அதன் நிரந்தர வாடிக்கையாளர்கள் புலம்புவதைக் காதுபடவே கேட்க முடிகிறது. எதனால் என்பதை இந்தப் பின்னணியில் வைத்து ஆராய்ந்தால் புரிந்து கொள்ளலாம். பெரும்பாலும் மூன்றாம் தலைமுறை கைமாற்றி விடுவதிலும் இழுத்து மூடுவதிலுமே அதிகமும் ஆர்வம் காட்டுகிறது. கிளைபரப்பி நிற்கிற ஆலமரத்தை பாடுபட்டாவது வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள். தொட்டதற்கெல்லாம் சுணங்கி விடும் ஆட்களை அங்கேதான் அதிகமும் பார்க்க முடிகிறது.
மாறாக இழப்பதற்கு ஒன்றுமில்லையென முட்டி மோதி முன்னுக்கு வருகிறவர்கள் பலரிடம் இயல்பான தீரம் ஒட்டியிருப்பதைப் பார்க்கவும் முடிகிறது. சித்தார்த்தா விஷயத்தில் இருந்து இதையே நான் கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன். சுபிக்‌ஷா நிறுவனர் இப்போதும் எங்கேயாவது முட்டி மோதிக் கொண்டிருப்பார் என்பதை உறுதியாகச் சொல்லி விடமுடியும். எல்லாவற்றையும் இழந்த பிறகும் இப்படி முட்டி மோதுகிறவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர் குறித்து ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் ஏர்செல் சிவசங்கரனே மிகச் சிறந்த உதாரணம்தான். அவரும் சித்தார்த்தாவும்கூட நல்ல நண்பர்கள் என்கிற மாதிரி ஒரு குறிப்பொன்றையும் இப்போது படித்தேன். எங்களுடைய கடையின் வாடிக்கையாளராகவும் அவர் இருக்கிறார்.
இந்தியாவில் இருக்கும் போதெல்லாம் கடைக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் அவர், எங்களுக்கு சொத்தாய் பல அறிவுரைகளை எங்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் சொல்லியிருக்கிறார். அவருக்கு வணிகத்தில் ஏற்படாத சிக்கல்களா? நாட்டை விட்டே ஓடி ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்ட போதுகூட எப்படி முட்டி மோதி எதிர்த்து நின்றார்? இவர்களிடமிருந்தே புதிய தொழில்முனைவோர்கள் பாடம் கற்க வேண்டுமெனவும் தோன்றுகிறது.
சித்தார்த்தா விஷயத்தில் வேறொரு கோணத்தில் ஒரு சிக்கல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். தினமும் புழங்குகிற பெரிய இடத்தில் “தோற்றுப் போன தொழில்முனைவோனாக” நிற்க விரும்பாத மன அயர்ச்சியே அவரை இந்த முடிவிற்குத் தள்ளியிருக்கக்கூடும். அவர் தன்னுடைய நிறுவன சகாக்களுக்கு எழுதிய கடிதத்தை முழுமையாகப் படித்த போது, அதை உணரவும் முடிகிறது. ஏனெனில் தொழில்முனைவோன் என்பது பதவியல்ல. அது ஒரு பொறுப்பு. நம்மை நம்பி வந்த பணியாளர்களைக் கரை சேர்க்க வேண்டுமென்கிற துடிப்பு அந்தப் பொறுப்பிற்கு முன்னால் இருக்கிறது. அதனால்தான் அந்தக் கடிதத்தில் கவனமாக அந்த வார்த்தைகளைக் கையாள்கிறார்.

இறுதியில் அவர் தன்னுடைய பணியாளர்களுக்கு அவநம்பிக்கையையே பரிசாக அளித்து விட்டும் சென்றிருக்கிறார் என்கிற வகையில் ஆழமான வருத்தமே மேலிடுகிறது. எதைக் கொண்டு வந்தோம், எதை இழப்பதற்கு என்பதை வணிகத்தில் மட்டுமாவது பின்பற்றலாம் என்றே நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும், அதைச் செலுத்துவது மனமென்னும் லகான்தான். அதன் பிடியை விட்டு விட்டால், பல்லாயிரம் கோடி ரூபாய்கூட அற்பமாய் ஆற்றில் மிதக்கும்!





 சரவணன் சந்திரன் ,லகுடு ,பார்பி  உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்



கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...