முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாருங்கள் கமல்ஹாசன்.

_MG_5390
ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியிடும் கருத்துக்கள் மூலமாகவே தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை கமல்ஹாசன் ஏற்படுத்தியுள்ளார்.  அரசியல்வாதிகள் பதைபதைக்கிறார்கள்.  ஆத்திரமடைகிறார்கள்.  வசவுகளை அள்ளி வீசுகிறார்கள்.  கமல்ஹாசன் நேரடியாக எடப்பாடி அரசையும் அதன் அமைச்சர்களையும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்குகிறார்.   கேள்விகளால் துளைக்கிறார்.   அந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காத அமைச்சர்கள், அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை தொடுக்கிறார்கள்.
கமல் குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட அதிமுக பிரமுகர்கள் எதிர் தாக்குதல் தொடுப்பதிலாவது ஒரு நியாயம் இருக்கிறது.  ஆனால் சம்பந்தமே இல்லாமல்  பிஜேபி தலைவர்கள் கமலை பிராண்டுகிறார்கள்.  எங்கே நேரடியாக அரசியலுக்கு வந்து விடுவாரோ என்று அஞ்சுகிறார்கள்.  அதிமுகவினர் கமல் மீது தொடுக்கும் தாக்குதலை விட, பிஜேபியினர் தொடுக்கும் தாக்குதல் மிக கடுமையாக இருக்கிறது.
கமல் திரைப்படங்கள் சிறு வயதில் என்னுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதில்லை.    ஏழு வயதில் மூன்றாம் பிறை திரைப்படம் பார்த்தபோது, அந்த படம் எனக்கு துளியும் பிடிக்கவில்லை.   முதன் முதலாக எனக்கு பிடித்த கமல் திரைப்படம், சகலகலா வல்லவன்.  பெற்றோர்களோடு பார்த்த பிறகு, வீட்டுக்கு எந்த உறவினர் வந்தாலும் அவர்களை சகலகலா வல்லவன் திரைப்படத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டு பல முறை பார்த்துள்ளேன்.   இறுதியாக தஞ்சாவூரில் குடியிருந்தபோது,  இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு காலனியில் சகலகலா வல்லவன் திரைப்படத்தை திரையிடுகிறார்கள் என்று அறிந்து வீட்டில் சொல்லாமல் சென்று அந்த திரைப்படத்தை இரவு பார்த்து விட்டு, வீட்டுக்கு வந்த பிறகு, அம்மா காலையில் என்னை வீட்டின் வெளியே இருந்த மின்சார கம்பத்தில் கட்டி வைத்து உரித்து எடுத்தது இன்னும் நினைவிருக்கிறது.
அதன் பிறகு பார்த்த திரைப்படங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஒரு தீபாவளி அன்று, கமல்ஹாசனின் நாயகன், ரஜினிகாந்தின் மனிதன் மற்று விஜயகாந்தின் நல்லவன் ஆகியவை அனைத்தும் ஒன்றாக ரிலீஸ் ஆனது.   பின்னாளில் கம்யூனிஸ்டாக மாறிய நண்பன், நாயகன்தான் பார்க்க வேண்டும் என்றான்.    நானும் மற்ற நண்பர்களும் மனிதன் தான் பார்க்க வேண்டும் என்றோம்.   இறுதியாக டிக்கெட் கிடைக்காமல் நல்லவன்தான் பார்த்தோம்.   நாயகன் எப்படிப்பட்ட ஒரு காவியம் என்பதை நான் அறிந்து கொள்ள பல வருடங்கள் ஆகியது.   ஒரு பேட்டியில் கமல்ஹாசன், எங்கள் தெருவில், ஒவ்வொருவரும காட் ஃபாதர் நாவலை படித்து விட்டு மூன்று ஸ்க்ரிப்ட் வைத்திருப்போம் என்று சொன்னது எனக்கு அப்போது புரியவில்லை.   நாயகன் படத்தின் முக்கியத்துவத்தை நான் புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகியது.
3042641290_707bc2a7e6
பல ஆண்டுகள் கழித்து சென்னையில் உள்ள பெரியார் திடலுக்கு கமல்ஹாசன் வந்திருந்தார். கமல் ஒரு பிராமணர் என்பது நன்றாக தெரியும்.   அவரை கி.வீரமணி அழைத்ததும், அதற்கு ஒப்புக் கொண்டு கமல் வந்திருந்ததும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தது.   முதன் முதலாக கமல் அந்த மேடையில்தான் தன்னை நாத்தீகன் என்று அறிவித்தார்.  கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தார்.   “அக்ரஹாரத்தில் இருந்து புறப்பட்ட ஒரு புயல் இன்று பெரியார் திடலை வந்தடைந்திருக்கிறது” என்றார் கமல்.    நான் ஒரு நாத்தீகன் என்பதை முன்பே அறிவித்திருப்பேன்.   இன்றைய நிகழ்ச்சிக்கு நான் பென்ஸ் காரில் வந்துள்ளேன்.   முன்னதாகவே நாத்தீகன் என்று அறிவித்திருந்தால், ஆட்டோவில் வந்திருப்பேன் என்று கூறினார். அப்போது என்னை ஆக்ரமித்திருந்த மிகத் தீவிர நாத்தீக உணர்வு கமல்ஹாசனை மிக பிரமிப்பாக பார்க்க வைத்தது.    அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து சென்னை புத்தக கண்காட்சியில் கமல்ஹாசன் ஆற்றிய உரை அவர் மீதான மரியாதையை உயர்த்தியது.    அன்பே சிவம் திரைப்படம் கமல் மீது ஒரு பெரும் பிரமிப்பை உண்டாக்கியது.
ஹேராம் மற்றும் அன்பே சிவம் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாக கமலுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்றாலும், அது போன்ற படங்களைத்தான் அவர் தொடர்ந்து எடுத்து வந்தார்.   அதனால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்களை அவர் பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை.   திரையுலகில் விசாரித்துப் பாருங்கள்.   இன்று வரை, தனக்கு தரப்பட வேண்டிய மொத்த ஊதியத்தையும் கருப்பில் வாங்காமல் வெள்ளையில் வாங்குவது கமல்ஹாசன் மட்டுமே.
தமிழக அரசியல் இன்று ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது.   ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்து வரும் அராஜகங்களும் அட்டூழியங்களும் மக்களை கடும் கோபமடைய வைத்துள்ளன.  ஆனால் இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றது என்பதால் அனைவரும் கையறு நிலையில் இருக்கின்றனர்.  இந்த அரசை ஆட்டம் காண வைக்க வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான திமுக புதிய வடிவங்களும், ஆலோசனைகளும் இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது.   1991 ஆட்சி காலத்தில் திமுகவுக்கு பரிதி இளம்வழுதி என்ற ஒற்றை எம்எல்ஏ மட்டுமே இருந்தார்.    அன்று அதிமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி வெகு சில காலங்களிலேயே கூட்டணியை முறித்தது.  அன்று திமுகவின் ஒற்றை எம்எல்ஏ பரிதியும், காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சேர்ந்து சட்டப்பேரவையை ஸ்தம்பிக்க வைத்தனர்.  உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி, மக்களின் கவனத்தை தங்கள் பால் ஈர்த்தனர்.   ஆனால் இன்று திமுகவுக்கு 89 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.   சட்டப்பேரவை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படும் அளவுக்கு போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். இந்த ஊழல் ஆட்சிக்கு எத்தகை தொந்தரவுகளை தர முடியுமோ அத்தனை தொந்தரவுகளையும் தந்திருக்க வேண்டும்.  ஆனால், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் எடப்பாடியின் ஆட்சி நிம்மதியாக சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்தி முடித்திருக்கிறது.   புளிமூட்டை பழனிச்சாமி கூட்டத் தொடர் வெற்றிகரமாக முடிந்ததை கொண்டாடும் வகையில் ஜெயலலிதா சமாதியில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.    அதிமுகவினர் வெற்றி முரசு கொட்டுகின்றனர்.
cs-jaya-jun6-1_647_052616020635
புளிமூட்டை பழனிச்சாமியின் ஆட்சியில் அங்கிங்கெனாதபடி, எங்கெங்கும் ஊழல் நிறைந்துள்ளது அப்பட்டமாகவே தெரிகிறது.   அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை வாரிக் குவிக்கின்றனர்.  சாதாரண பணியிட மாற்றம் முதல், பல கோடி ரூபாய் கான்ட்ராக்டுகள் வரை, லஞ்சம் பெருமளவில் தலை விரித்து ஆடுவது கண் கூடாகவே தெரிகிறது.   அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை அறிந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் அமைச்சர்களும், ஒவ்வொரு நாளையும் பொன் போல கருதி வசூலை குவித்து வருகின்றனர்.    இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்தாலும், அறிக்கை விடுவதைத் தாண்டி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.    ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஊழல் இலை மறை காயாக நடைபெற்றது என்றால், தற்போது வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது.   ஊழல் மற்றும் தமிழகத்தின் நலன்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக நடைபெறும் சில போராட்டங்களில் ஈடுபடுவோரையும், தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்கிறது.  வெறும் துண்டறிக்கைகளை விணியோகம் செய்த காரணத்துக்காக ஒரு கல்லூரி மாணவியான வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.   இதை சட்டப்பேரவையிலேயே புளிமூட்டை பழனிச்சாமி நியாயப்படுத்தியுள்ளார்.    இப்படிப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களில் தலையிட்டு நியாயத்தை நிலை நாட்ட வேண்டிய நீதிமன்றங்கள், அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றன.
அயோக்கியத்தனத்தின் உச்சமாக, குட்கா வியாபாரத்துக்கு ஒத்துழைத்ததற்காக பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்ற டிகே.ராஜேந்திரனை பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, நள்ளிரவில் டிஜிபியாக இரண்டாண்டு பணி நீட்டிப்பு கொடுத்து நியமனம் செய்தது எடப்பாடி அரசு.   பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு புளி மூட்டை பழனிச்சாமி அளிக்கும் மரியாதையின் அளவுகோல் இதுதான்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஒரு வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய காலகட்டத்தில் ஒரு இறுக்கமான மவுனம் தமிழகத்தில் நிலவுகிறது.    பல்வேறு காரணங்களால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடியாமல் தனித்தனியாக நின்று, எடப்பாடி அரசை பலப்படுத்தி வருகின்றன.   பெரிய அளவில் எந்தவொரு அரசியல் அனுபவமோ, சாணக்கியத்தனமோ இல்லாமல், குண்டூசியின் மீது நின்று கொண்டிருக்கும் எடப்பாடி அரசு, ஒய்யாரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில்தான் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை பார்க்க வேண்டும்.   கமல்ஹாசன் இந்த முயற்சியில் வெற்றி பெறுவாரா, அல்லது தோல்வியை சந்திப்பாரா என்பதற்கான விடை காலத்தின் கைகளிலேயே இருக்கிறது.  ஆனால் வரலாற்று தரும் உதாரணங்களை வைத்து நாம் ஒரு ஊகத்துக்கு வர முடியும்.  ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனைப் போல பெரிய ரசிகர் கூட்டத்தையும் பின்தொடர்பாளர்களையும் வைத்திருப்பவர் அல்ல விஜயகாந்த்.   இருவரோடு ஒப்பிடுகையில், விஜயகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் அல்ல. ஆனால் 14 செப்டம்பர் 2005 அன்று கட்சி தொடங்கிய விஜயகாந்த், 2006 சட்டமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குகளைப் பெற்று அனைத்துக் கட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.  விஜயகாந்த்தின் தேமுதிக அந்த தேர்தலில் போட்டியிடாமல் போயிருந்தால், திமுக மைனாரிட்டி அரசாக உருவாகியிருக்காது.
11-1457676572-web
அன்று விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது, இருந்த சூழல் வேறு.  அன்று கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் வலுவாக இருந்தனர்.   முழுமையான செயல்பாட்டில் இருந்தனர்.   தீவிர அரசியலில் இருந்தனர்.   அப்படி இருந்தும், விஜயகாந்த்தால் 30 லட்சம் வாக்குகளை பெற முடிந்தது.   ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ்.   கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகளும் முழுமையான அரசியல் செயல்பாட்டில் இல்லை.   ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆகர்ஷிக்கும் ஒரு தலைமை தமிழகத்தில் இல்லை.   எடப்பாடி பழனிச்சாமியும் அவரது அமைச்சர்களும், உதிரிகளாக உலா வந்து கொண்டிருக்கின்றனர்.    சிறப்பான அரசியல் செய்தாலும், பாட்டாளி மக்கள் கட்சியால், சாதிக் கட்சி என்ற முத்திரையை உதற முடியவில்லை.  வட தமிழகத்தைத் தாண்டி, இதர மாவட்டங்களில் காலூன்ற முடியவில்லை.  இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கட்சிகளின் பலம் மிகக் குறைவே.   ஒட்டுமொத்த தமிழகத்தையும் தங்கள்  வசப்படுத்தும் பலம் அவர்களுக்கு இல்லை.
பிரதான எதிர்க்கட்சியான திமுகவோ, முட்டுசந்தில் மாட்டிக் கொண்டது போல முழிக்கிறது.  சட்டப்பேரவையில் எடப்பாடி அளிக்கும் பதிலில் சமாதானமடையும் அளவிலேயே ஸ்டாலின் இருக்கிறார்.   சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, சட்டவிரோதமாக விற்கப்படும் குட்காவை அவைக்கு எடுத்து வந்ததற்காக, உரிமை மீறல் புகார் என்று ஆளுங்கட்சியினர் குரல் எழுப்பியபோது, ஆம், உரிமை மீறல்தான்.   சட்டவிரோத பொருட்கள் சகஜமாக கடைகளில் விற்கப்படுவதை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை.  இது விதி மீறல் என்றால் இந்த விதி மீறலை தொடர்ந்து செய்வோம் என்றே பதில் அளித்திருக்க வேண்டும்.  ஆனால் பதில் அளிக்க முடியாமல் திமுகவினர் திணறினர்.
அரசியலுக்கு வர கமலுக்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.   ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது.   அவர் ஆளவில்லையா ?  எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது.  அவர் ஆளவில்லையா ?   அதிமுகவின் அமைச்சர்கள் பலருக்கு என்ன தகுதி இருக்கிறது அவர்கள் ஆளவில்லையா ?   விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகவில்லையா ?
08jayalalithaa1
செந்தில் முருகன் என்ற தொழிலதிபர் இது குறித்து பேசுகையில், “வாக்களிக்கும் உரிமை உள்ள அத்தனை பேருக்கும் அரசியலில் இறங்க தகுதி இருக்கிறது.    நாம் உண்ணும் உணவு முதல் அருந்தும் தண்ணீர் வரை அனைத்திலும் அரசியல் இருக்கிறது.   இந்தியா முழுக்க பல்வேறு சூப்பர் ஸ்டார்கள் ரசிகர் மன்றம் வைத்திருந்தாலும், அந்த மன்றத்தை நற்பணி மன்றம் என்று மாற்றி, உறுப்பு தானம், ரத்த தானம் என்ற பழக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கியவர் கமல்ஹாசன்.   தற்போது ரத்ததானம் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு பிறந்தநாளில் உணவிடுவது ஃபேஷனாகி விட்டது.  ஆனால் இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னால் இதை செய்தவர் கமல்ஹாசன்.
செந்தில் முருகன், தொழிலதிபர்
செந்தில் முருகன், தொழிலதிபர்
ஜெயலலிதா பலம் பொருந்திய மிகப்பெரும் ஆளுமையாக இருந்த காலத்தில், கலைஞர் கருணாநிதியின் நள்ளிரவு கைதை வெளிப்படையாக கண்டித்தவர் கமல்ஹாசன் என்பதை மறந்து விடக்கூடாது” என்றார்.
கமல்ஹாசனுக்கு சாதி மதத்தை கடந்த ஏற்புணர்வு இருக்கிறது.   அவரின் தமிழறிவு மற்ற எவருக்கும் சளைத்ததில்லை.   மொழி என்ற அடிப்படையில் மட்டுமே திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது என்பதை நாம் மறக்க முடியாது.   கமலை கடுமையாக விமர்சித்து வரும் பிஜேபியின் எச்.ராஜா, கமல் விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் மண்டியிட்டார் என்று விமர்சிக்கிறார்.  விஸ்வரூபத்தின் அடிப்படை பிரச்சினை, மன்னார்குடி மாபியாவின் கட்டளைக்கு இணங்க, விஸ்வரூபம் திரைப்படத்தை குறைந்த விலைக்கு ஜெயா டிவிக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதே. இது தொடர்பாக கமலஹாசனின் சகோதரர் சந்திரகாசன் சசிகலாவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.   மன்னார்குடி கூட்டம் கேட்ட குறைந்த விலைக்கு விற்பனை செய்யமுடியாது என்பதை வெளிப்படையாக தெரிவித்த பிறகே, திரைப்படம் தடை செய்யப்படுகிறது.    இந்த விவகாரம் குறித்து எதுவுமே அறியாத இஸ்லாமிய இயக்கத்தினர் ஜெயலலிதா விரித்த வலையில் விழுந்தனர்.
இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் கோழை போல செயல்பட்டார் என்று விமர்சனம் செய்பவர்கள் ஒரு விஷயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.   தன் வாழ்நாள் முழுக்க சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் ஒரே திரைப்படத்தில் இழக்கும் வலி என்ன என்பதை உணர்ந்தவர்கள், கமல் மீது இப்படிப்பட்ட விமர்சனத்தை வைத்திருக்க மாட்டார்கள்.   கமல் மீது பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் வைக்கும் எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் அவர் கணவர் மீது குவியும் புகார்கள் குறித்து வாயே திறப்பதில்லை.   மேலும், வானதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்கள், பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அல்ல.   பாஜகவின் முக்கிய பிரமுகர்களே அந்த குற்றச்சாட்டுகளை முன்னெடுப்பவர்கள்.
கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்தளித்த தி வீக் ஆங்கில வார இதழின் தமிழக தலைமை செய்தியாளர் லட்சுமி “அரசியலும் திரைத்துறையும் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களில், பிரபலமானவர்கள் அரசியலில் குதிப்பது புதிதன்று.   கமல்ஹாசன், தான் எடுக்கும் நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்காதவர்.   பல விஷயங்களில் குழப்பமில்லாமல் தெளிவான நிலைப்பாட்டை எடுப்பவர்.   எல்லைகளை மீறுவது, கமலுக்கு இயல்பான ஒன்று.   தேவைப்படுகையில் எல்லைகளை தாண்டுவதற்கு தயங்காதவர் கமல்ஹாசன்.    விஸ்வரூபம் விவகாரத்தில் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று வெளிப்படையாக அறிவிப்பதாக இருக்கட்டும், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான கருத்துகளாக இருக்கட்டும்.    விளைவுகள் குறித்து கவலைப்படாமல் தெளிவான முடிவெடுப்பவர் கமல்ஹாசன். ஒரு கருத்தை தெரிவித்து, ஒரு சில நாட்களில் பின்விளைவுகளை கருதி அதிலிருந்து பின் வாங்கும் இதர நட்சத்திரங்களை போன்றவர் அல்ல கமல்ஹாசன்.   அவர் ரஜினிகாந்தைப் போல அரசியல் குறித்து சிந்திப்பவர் அல்ல.  ஊழலுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்பதை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.” என்றார்.
பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன்.
பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியன்.
கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசுகையில் ரஜினிகாந்தின் நிலைபாட்டோடு ஒப்பிடுவதை தவிர்க்க இயலாது.  1996ம் ஆண்டு, காலம் ரஜினிக்கு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.  ஆனால் அரசியலை விட, தனது சினிமா வியாபாரத்தையே பிரதானமாக ரஜினி கருதினார்.    ஒவ்வொரு முறையும், தனது அரசியல் பிரவேசம் என்ற விவகாரத்தை தனது சினிமா வியாபாரத்துக்காக மட்டுமே ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொண்டார்.  தனது சொந்த நலன்கள் பாதிக்கப்படுகையில் மட்டுமே ரஜினி அரசியல் வசனங்களை உதிர்த்தார்.    தனது வார்த்தைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மிகவும் கவலைப்படுபவர்தான் ரஜினிகாந்த்.    சிஸ்டம் சரியில்லை என்று வக்கணையாக பேசும் ரஜினிகாந்த், கோச்சடையான் திரைப்பட வியாபாரத்தில், தனது குடும்பத்தினரே மோசடியில் ஈடுபட்டு காவல்துறை வரை புகார் சென்றபோது, அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   எந்த விவகாரமாக இருந்தாலும், தெளிவான நிலைபாட்டை எடுக்காமல், அதை குழப்பி, தனக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்பவர்தான் ரஜினிகாந்த்.
பாரதீய ஜனதா கட்சியினர், ரஜினிகாந்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாதுவதும், கமல்ஹாசனை கடுமையாக   விமர்சிப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.   ரஜினிகாந்த் ஒரு சாமியார் மட்டுமல்லாமல் ஒரு கோழை.   எந்த விவகாரத்திலும் வெளிப்படையாக கருத்து கூற தயங்கக் கூடியவர்.  மாட்டிறைச்சி விவகாரத்தில், எனது உணவை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது என்று கமல் வெளிப்படையாக கருத்து கூறியபோது, வாயே திறக்காமல் அமைதியாக இருந்தவர்தான் ரஜினிகாந்த். இவரைப் போன்ற மவுனிகளும், சுய சிந்தனை இல்லாத கோழைகளையுமே பிஜேபி விரும்புகிறது.   கமல் போன்ற துணிச்சலான சிந்தனைகள் உள்ளவர்களை அல்ல.
raji1
DMK-MLA-J-Anbazhaganகமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனிடம் பேசினோம்.  “அவரது அரசியல் பிரவேசம் வரவேற்கப்பட வேண்டியதே.   எல்லா குடிமகன்களையும் போல, அவருக்கு கருத்து சுதந்திரம் உண்டு. ஆனால் அவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், தனிப்பட்ட முறையில் அவர் மீது தொடுக்கப்படும் தாக்குதல் கண்டிக்கப்பட வேண்டியது. ” என்றார்.   ரஜினியை பாஜக முன்னிறுத்துவதால், கமல்ஹாசனை திமுக முன்னிறுத்துகிறது என்ற கேள்விக்கு, “திமுக ஒரு மிகப்பெரிய இயக்கம்.   ஒரு நடிகரையோ அல்லது வேறு நபரையோ பின்னிருந்து இயக்கித்தான் அரசியல் செய்ய வேண்டும் என்ற தேவை திமுகவுக்கு ஒரு போதும் கிடையாது.   ஒரு அரசியல்வாதி மட்டுமே கருத்து கூற முடியும் என்பது போல பிஜேபியும், அதிமுகவும் கமலை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.  வாக்களிக்கும் உரிமை உள்ள ஒவ்வொருவருக்கும், அரசை விமர்சனம் செய்யும் உரிமை உண்டு. ” என்றார்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார், கமல்ஹாசன் மீது அவரது விமர்சனத்தை முன்வைத்தார். “எல்லா குடிமகன்களையும் போல, கருத்து சொல்வதற்கு கமல்ஹாசனுக்கும் உரிமை உண்டு.  அவர் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் அவர் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்.   பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு சொல்கிறார்.   இந்த இடத்தில் ஊழல், இவர் ஊழல் செய்திருக்கிறார் என்று தெளிவாக ஒரு குற்றச்சாட்டையும் கமல் இது வரை சொல்லவில்லை.   ஒரு பிரபலமாக இருப்பவர், பொறுப்போடு பேச வேண்டும்.  ஆனால் கமல்ஹாசன் வாய்க்கு வந்த குற்றச்சாட்டுகளை ஆட்சியின் மீது அள்ளி வீசுகிறார்.  இப்படி பொத்தாம் பொதுவாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சொல்கையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நாங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்” என்றார்.
ஒரு பத்திரிக்கையாளன் மற்றும் பொதுமக்கள், குற்றச்சாட்டுகளைத்தான் தெரிவிக்க முடியும்.  அதற்கான ஆதாரங்களை புலனாய்வு செய்து தேட வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆதாரங்களோடு குட்கா ஊழலை ஊடகங்கள் வெளியிட்டபோது, அதன் மீது எடப்பாடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?  லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை என்ற பெயரில், அந்த ஊழலை மூடி மறைப்பதைத் தவிர வேறு என்ன செய்தது இந்த அரசு ? இப்போது ஆதாரங்களை அனுப்பினால் மட்டும் நடவடிக்கை எடுத்து விடுவார்களா என்ன ?  எல்ஈடி பல்பு ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம், குட்கா ஊழல் என்று எத்தனை ஊழல்கள் ஆதாரத்தோடு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன ?  என்ன நடவடிக்கை எடுத்தது இந்த அரசு ?
அதிமுக அடிமைகளை விட, பிஜேபியினர் கமல்ஹாசனை கரித்துக் கொட்டுவதுதான் புதிராக உள்ளது.    எதற்காக அவர்களுக்கு இந்த கோபம் என்பது புரியவேயில்லை.  பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் கல்யாண் இது குறித்து பேசுகையில், “கமல்ஹாசனால் தனது குடும்பத்தைக் கூட ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை.   அவரது மனைவிகளையும், வைப்பாட்டிகளையும் (Concubine) கூட அவரால் அவரோடு தக்க வைக்க முடியவில்லை.  இதைக் கூட செய்ய முடியாத ஒரு நபரால், எப்படி ஒரு மாநிலத்தை வழிநடத்த முடியும்”  என்றார்.
பிஜேபி செய்தித் தொடர்பாளர் கல்யாணராமன்.
பிஜேபி செய்தித் தொடர்பாளர் கல்யாணராமன்.

கமலஹாசன் ஒரு போதும் தான் திருட்டுத்தனமாக ஒரு பெண்ணோடு குடும்பம் நடத்துதாக ஒரு சொன்னதில்லை.   நான் இந்தப் பெண்ணாடு அவர் சம்மதத்தோடு வாழ்கிறேன் என்பதை வெளிப்படையாக அறிவித்தே வந்துள்ளார்.    மோடியின் நிலைபாடு என்ன ?  நிர்மலா பேன், என் கணவர் என்னை  கைவிட்டு விட்டார் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளாரா இல்லையா ?   கமலின் தனிமனித ஒழுக்கம் குறித்து பேசும் நபர்கள், மோடியை கேள்வி கேட்டு விடை கிடைத்த பிறகு வேறு வார்த்தை பேசட்டும்.
எனக்கு பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பல நண்பர்கள் உள்ளனர்.  நான் ஒரு தீவிரமான மோடி எதிர்ப்பாளர் என்பதை நன்றாக அறிந்தும் என்னோடு நட்பு பாராட்டுகிறார்கள்.  அவர்கள் நட்பு பாராட்டுவதற்கான ஒரே காரணம், பொய் சொல்ல மாட்டான்.  சொந்த ஆதாயத்துக்காக ஒரு போதும் எழுத மாட்டான் என்பது மட்டுமே.  அப்படிப்பட்ட எனது நண்பர்கள், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது சுமத்தும் பெண் தொடர்பான குற்றச்சாட்டுகளை எழுத பல கட்டுரைகள் தேவைப்படும்.    அவர்களுக்கும் அந்த விஷயங்கள் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.   ஏனென்றால் கட்சி பாதிக்கப்படும்.  ஆனால் தங்கள் ஆதங்கத்தை என்னோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.   கமலாலயத்தில் உள்ள படுக்கையறையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை வையுங்களேன்.   துடிதுடித்து உங்களை கடுமையாக விமர்சிப்பார்கள்.  ஏனென்றால் அங்கே நடப்பவை அனைத்தும் அதுதான்.     இன்னும் சில பெண் பிரமுகர்கள் குறித்து என்னால் எழுத முடியும்.  நாகரீகம் கருதி தவிர்கிறேன்.
இன்று ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுழலாக இருக்கும் விஜயபாரதத்தின் ஆசிரியர் குழந்தைகளோடு செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஒரு பீடோஃபைலா இல்லையா என்று கேளுங்கள்.    நேர்மையான ஆர்எஸ்எஸ் அன்பர்கள் இதை மறுக்க மாட்டார்கள்.   நிரந்தரமாக சிறையில் இருக்க வேண்டிய ஒரு பீடோஃபைலை விஜயபாரதத்தின் ஆசிரியராக நியமித்து அதை வழிநடத்தும் ஒரு அமைப்பை தாங்கிப் பிடிக்கும் எச்.ராஜாவுக்கு கமல்ஹாசனின் ஒழுக்கத்தை பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது ?
பிஜேபியினரின் கமல் மீதான கருத்துக்கள் வெறித்தனமாக இருக்கிறது.    பரம்பரை சொத்துக்களை கமல் களவாண்டவர் போல பேசுகிறார்கள்.   அவர்களின் இந்த கருத்து, கமல்ஹாசனை எந்த அளவுக்கு ஆபத்தாக பார்க்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி இது குறித்து விளக்கினார். “கமலின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டமாக அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் எனக்கு வியப்ப அளிக்கிறது.   கமல் இப்படி வெளிப்படையாக பேசுவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை.   மாநில அரசின் மீது அவரது நேரடியான தாக்குல் வியப்பை ஏற்படுத்துகிறது.   எந்த விஷயத்திலும் அவர் இது வரை பின்வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.   ஊழலுக்கு எதிரான அவரது நிலைபாடுதான் இருப்பதிலேயே மிகச் சிறப்பானது. இதனால் அவர் மீதான மரியாதை அதிகரித்திருக்கிறது.
ஆனால் அதே நேரத்தில், தனது திரைத்துறை முழுக்கவே கருப்புப் பணத்தில் இயங்குகிறது என்பதையும் கமல் அறிவார்.  அவர் அது குறித்தும் பேச வேண்டும்.   கமல் எந்த அளவுக்கு ஆபத்தானவர்.  அவரால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை முழுக்க உணர்ந்தவர்கள் பிஜேபியினர்.   அதனால்தான் அவர் மீது கடுமையான தாக்குதலை தொடுக்கிறார்கள்.   பிஜேபி தலைவர்கள் கடுமையான பயத்தில் உள்ளார்கள். அந்த பயம்தான் அவர்களை வரம்பின்றி வார்த்தைகளை பிரயோகிக்க வைக்கிறது.
அதே நேரத்தில் ட்ராஃபிக் கான்ஸ்டபிளும், விஏஓவும் வாங்கும் 100 அல்லது 200 ரூபாய் மட்டும் லஞ்சமல்ல.  அதை விட அமைச்சர்கள் கோடிக்கணக்கில் வாங்கும் லஞ்சத்தின் தீவிரத்தை புரிந்து கமல் செயலாற்ற வேண்டும். ” என்றார்.
காவல்துறையில் ஒரு மூத்த ஐபிஎஸ்  அதிகாரி கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினார்.  “கமல் ஒரு அற்புதமான நடிகர் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.     ஆனால் ஒரு நிர்வாகத்தை நடத்த நடிப்புத் திறன் மட்டும் போதுமானதல்ல.   ஒரு வரி செலுத்தும் குடிமகனாக, வாக்களிக்கும் குடிமகனாக அரசாங்கத்தை கேள்வி கேட்க அவருக்கு எல்லா உரிமையும் உள்ளது. அவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை.  அதே நேரத்தில் தேசத்தையே உலுக்கிய 2ஜி ஊழலின் போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் ?  இலங்கையில் அரசுகளின் துணையோடு மக்கள் கொல்லப்படுகையில் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விகளை தவிர்க்க முடியவில்லை.
வெறும் நடிகர் என்ற அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வகையில் மக்கள் முட்டாள்கள் அல்ல.     மக்கள் மிக மிக புத்திசாலிகள்.  அரசியலில் பல நடிகர்கள் இறங்கியிருந்தாலும், எம்ஜிஆர், என்டி.ராமாராவ் மற்றும் ஜெயலலிதாவை மட்டுமே வெற்றி பெற வைத்தார்கள்.  பிரேம் நசீர், சிவாஜி கணேசன், எஸ்எஸ்.ராமச்சந்திரன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர் போன்றோரை மண்ணைக் கவ்வ வைத்தார்கள்.   எம்ஜிஆருக்கு நிகரான புகழைப் பெற்ற சிவாஜி தனது சொந்த மண்ணிலேயே தோற்றார் என்பதை நாம் புறந்தள்ள இயலாது.
சிலரைத் தேர்ந்தெடுத்து பலரை மக்கள் உதாசீனப்படுத்துவதற்கான காரணத்தை மக்களே முடிவு செய்வார்கள்.   அவர்களின் அறிவை என்றுமே குறைத்து மதிப்பிட முடியாது.  கமலஹாசன் இம்மக்களின் அறிவை உணர்ந்து செயல்படுவாரோயானால் அவர் வெற்றி பெறுவார்.   அதை விடுத்து, அவசர கதியில், உடனடி முதல்வர் கனவில் அவர் இருப்பாரோயானால் அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
பல்வேறு ஆதரவான கருத்துக்களையும் எதிர்க் கருத்துக்களையும் பார்த்தோம்.    கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டுமா கூடாதா என்ற கேள்விதான் இறுதியில் நிற்கிறது.   அவர் வர வேண்டும் என்பதை தீர்மானமாக சொல்கிறது சவுக்கு.    கூத்தாடிகள் மிக எளிதாக அரசியலில் வந்து வெற்றி பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையே.   கூத்தாடிகள் வரக்கூடாதென்றால், அரசியலில் வெற்றி பெறுபவர்கள் அனைவரும், சுதந்திரப் போராட்ட தியாகிகளா என்ன ?   திமுவை எடுத்துக் கொண்டால் கூட, முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள்தானே இன்று பதவிக்கு வருகிறார்கள் ?   முக.ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி மொழிப்போர் தியாகியா என்ன ?   டிஆர்.பாலுவின் மகன் டிஆர்பி.ராஜா அரசியல் விஞ்ஞானியா ?
ஒரு சாதாரணர், கடைநிலையில் உள்ளவர், அரசியலில் குதித்து வெற்றி பெறுவது நடக்காத ஒரு காரியம் என்பதை நாம் அனைவருமே அறிவோம்.  அதுதான் யதார்த்தம்.   யதார்த்தத்தின் புரிதலோடு தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமென்றால், பிரபலமான, அனைவருக்கும் ஏற்புடைய ஒருவர் வர வேண்டும்.  அது கமலஹாசன் மட்டுமே.
கருப்புப் பணத்தை வைத்து மட்டுமே தொழில் நடத்தும் திரைத்துறையில் நான் கணக்கில் காட்டப்படும் வெள்ளைப் பணத்தை மட்டுமே வாங்குவேன் என்று பிடிவாதமாக இருக்கும் ஒரே ஒரு குணம் மட்டுமே கமல்ஹாசனை அரசியலுக்கு வர தகுதியானவராக்குகிறது.   நான் கருப்புப் பணம் வாங்கிதில்லை என்று ரஜினியை சொல்லச் சொல்லுங்கள் ?   ராஜ்குமார் வீரப்பனால கடத்தப்பட்டபோது அவருக்கு பிணைத் தொகையை வசூல் செய்து நான் தரவிலை என்று ரஜினியை சொல்லச்  சொல்லுங்கள்…….!!!!!  அவரால் சொல்ல முடியாது.   சொல்லவும் மாட்டார்.
இதனால்தான் .    வாருங்கள் கமல்ஹாசன்.   வழிநடத்துங்கள்.
_KAMAL_HAASAN
வாருங்கள் கமல்ஹாசன்.
குறிப்பு :  தயவு செய்து, ட்விட்டரில் தமிழில் எழுதுங்கள்.   புறநானூறு நடையில் எழுதினால் அதை புரிந்து கொள்வதற்குள் மண்டை காய்கிறது.    நீங்கள் படித்த அதே முத்தையா செட்டியார் பள்ளியில்தான் நானும் படித்தேன்.   உங்களுக்கு ஆசிரியராக இருந்த கேடி.கோவிந்தராஜன் எனக்கு தலைமை ஆசிரியர்.   அவருக்கு நீங்கள் வாங்கிக் கொடுத்த சைக்கிளை அவர் பல முறை அன்போடு ப்ரேயர் கூட்டங்களில் நினைவு கூர்ந்துள்ளார்.   இறுதி வரை அவர் சைக்கிளில்தான் வந்தார்.    அந்த பள்ளிதான் என்னை செதுக்கியது.  உங்களையும் செதுக்கியதை என்னால் காண முடிகிறது.    வாருங்கள்.   கொள்ளைக் கூட்டத்தை விரட்டி அடியுங்கள்.
உண்மை விளம்பி

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

TAMIL MAGAZINES

JAGADEESH N.V. TAMIL MAGS Thousand Lights In The Pocket Small in format, but brimming over with articles and photos on everything under the sun, explaining politics, films, gobar gas VAASANTHI   I am sure that to the outside world, Tamil Nadu appears queer: those conservative, retrograde, idli-dosa-eating, film-crazy, ves­hti-clad Madrasis! But to me, an insider, the most enduring image of my state is that of rickshaw-pullers reading Tamil newspapers and magazines during their free time, unmindful of the scorching sun. Tucked under the passenger seat of every rickshaw, there would always be some reading mate­rial, some daily or periodical. And the roadside petti-­kadais (small shops that sell cigarettes, paan, bananas, cold drinks and even tea) have one major attraction—rows of Tamil periodicals, many of them pocket-sized, bestriding the string by the middle-page, or columns held in place by clips. You’ll never find last week’s iss­ue of  Vikatan, Kumudam, K...

Politics is a dangerous game: Rajinikanth

In an in-depth interview at his home in Poes Garden, Rajinikanth spoke candidly to India Today not only about his life and films but also his political vision for Tamil Nadu, and a range of burning public issues. Raj Chengappa  Amarnath K. Menon  New Delhi  November 30, 2018 ISSUE DATE: December 10, 2018 UPDATED: December 1, 2018 10:26 IST Photographs by Bandeep Singh Will he, won't he? Southern superstar Rajinikanth has exhibited Hamletian indecision about pursuing a political career ever since he announced he was joining the fray in December 2017. So far, he has not even announced the name of his political party, choosing instead to deploy his massive fan following under the umbrella of his Rajini Makkal Mandrams and using them to build a cadre of party workers across Tamil Nadu. Meanwhile, the ageing star (he is 67) continues to do what he knows best-make iconic films. His latest-2.0, releasin...

இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:

இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தினார்.இதனை...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

சொன்னதும் செய்ததும்.

தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டு வருகிறது.  முடங்கிப் போன நிர்வாகம், பெருகிய ஊழல், செயல்படாத அரசு, தலைகாட்டாத முதல்வர் என்று அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார் ஜெயலலிதா.    கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசுகையில், “அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான். எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தன...