முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

உயிரோட்ட பாதையில் ஒரு தமிழ் சினிமா!

monday, march 31, 2014       அம்பிஆர்கைவ்ஸ் கார்பன் காப்பி..            குக்கூ …. திரைவிமர்சனம். குக்கூ …. திரைவிமர்சனம். Kukkoo… Tamil Film Review ராஜீமுருகன், முன்னாள் ஆனந்தவிகடன் நிரூபர், புதிய படத்திற்கு இயக்குநராகி படைத்திருப்பதுதான் குக்கூ… நிரூபராக இருந்த காலத்தில், பலதரப்பட்ட மக்களை சந்தித்ததாகவும், அதில் இந்த காதல் கதை நாயகனையும், நாயகியையும் சந்தித்ததாகவும், அவரே திரையில் தோன்றி கதையுடன் அப்வெப்பொழுது வந்து சொல்கிறார். எலக்ட்டிரிக் டிரெய்னில் பொருள்கள் விற்கும் கண்ணில்லாத கதாநாயகன், அவருடைய கூட்டாளிகள் (பெண்களும் உண்டு) கண்ணில்லாத சுதந்திரக்கொடி (அதாங்க கதாநாயகி பேரு)யை ஒரு சில சந்தர்ப்பங்களில் வழக்கமான திரைப்படங்கள் போல, முதலில் சண்டை பின்னர், கொஞ்சல் பார்முலாவில் காதலிக்கும் சந்தர்ப்பங்கள் உருவாக, அதனை நெய் ஊற்றி வளர்க்கும் விதமாக சுற்றத்தாரும் நடந்துகொள்ள கண்ணில்லாத இருவர் காதலும் திருஷ்டி சுந்றி போடும் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இடையில், காதலியின் அண்ணன் நண்பன் காதலியின் மீது ஆசைப்பட்டு 3 லட்சம் செலவு செய்து,...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

தீதும் நன்றும்... …

“டெஹல்கா". இந்திய பத்திரிக்கை உலகையே இந்தப் பெயர் மாற்றிப் போட்டது என்றால்   அது மிகையல்ல. 1999ம் ஆண்டு ஒரு சாதாரண வலைத்தளமாக உருவான டெஹல்கா,  பிஜேபியின் அரசாங்கத்தையே ஆட்டிப்படைத்தது. நாங்கள் வித்தியாசமானவர்கள் என்ற முழக்கத்தோடு ஆட்சியைப் பிடித்த பிஜேபி கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதத்திலும் குறையாத மோசடிப் பேர்விழிகளைக் கொண்டது என்பதை தோலுரித்துக் காட்டியது டெஹல்கா. டெஹல்கா நடத்திய "ஆபரேஷன் வெஸ்ட் என்ட்” என்ற பெயர் கொண்ட அந்த ஸ்டிங் ஆபரேஷன், பத்திரிக்கை உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி ஸ்டிங் ஆபரேஷன்களின் தந்தை என்று பெயரெடுத்தது. அரசு நிர்வாகத்தில், குறிப்பாக ராணுவத் துறையில் எவ்வளவு சாதாரணமாக ஊழல் புரையோடிப்போயிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியது டெஹல்கா. ராணுவ உயர் அதிகாரிகளும், ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகளும், பெண்ணாசை மற்றும் பொன்னாசைக்காக இல்லாத ஒரு ராணுவ தளவாடத்தை வாங்க பேரம் நடத்தும் அளவுக்கு சோரம் போயிருந்தார்கள் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. பத்திரிக்கை உலகின் ஜாம்பவான்களாகத் திகழ்ந...

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!

ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! அம்பி ஆர்கைவ்ஸ் கார்பன் காப்பி.    ·    PRINT    ·    T+    வீரம் படத்தில் நடிகர் அஜித் ஜில்லா, வீரம் ஆகிய படங்களின் 'மாபெரும்' வெற்றிக்கு முக்கியமாக உழைத்தவர்கள் தல - தளபதியின் ரசிகர்கள். U -  அனைவரும் பார்க்கலாம் U/A -  பெரியவர்களுடன் பார்க்க வேண்டிய படம் A -  கண்டிப்பாக பெரியவர்கள் மட்டும்... இதில் புதிதாக ஒரு சென்சார் சான்றிதழை,  T -  தல, தளபதி ரசிகர்களுக்கு மட்டும்  என்று கொண்டு வரவேண்டும். ஜில்லா, வீரம் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்த படம் கிடையாது. என்ன... ஒன்று சுமார் மொக்கை, இன்னொன்று சூர மொக்கை. இரண்டு படங்களிலும் ஹை-லைட் காட்சி என்று கூற, ஒன்றுகூட இல்லை. வெறும் சண்டை, பன்ச் டயலாக். மசாலா படங்களுக்கு தேவையான இன்சைட்டிங் பாயின்ட் என்ற ஒரு விஷயம் சுத்தமாக தென்படவில்லை. இந்த இரண்டு படங்களில் 'நம்பர் ஒன்' ஆகச் சிறந்து விளங்குவது ஜில்லா. கடுப்பேற்றிய முதல் விஷயம் எடிட்டிங். அ...