1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார். அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்