முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?

நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே கனத்த பைக்கின் ஒலி கேட்டது. என் பெண் வருகிறாள்என்றார் நண்பர். கடினமான செருப்பு பளிங்குத்தரையை உரசும் ஒலியுடனும் மூச்சுக்குள் முனகப்பட்ட மெட்டுடனும் உள்ளே வந்த பெண்ணுக்கு பதினெட்டுவயதிருக்கும். என்னைவிட சில அங்குலங்கள் உயரம் அதிகம் இருக்கலாம். செம்மண் நிறத்தில், ஏராளமான தொங்கல்களும் தோல்பட்டைகளும் பித்தளை வளையங்களும் பித்தான்களும் தேவையே இல்லாத பைகளும் கொண்ட ஜீன்ஸ் அணிந்து; மேலே ஜீன்ஸின் மேல் விளிம்புடன் தொட்டும் தொடாமலும் பிரிந்த, குட்டைக்கையுள்ள வெண்ணிற மேல்சட்டை போட்டிருந்தாள். கையிலிருந்த புத்தகங்களையும் குறுவட்டுகளையும் போட்டுவிட்டு மென்னிருக்கையில் பலமாக அமர்ந்து என்னைப்பார்த்து ஹாய்!என்றாள்.
என்னைத்தெரியுமா?” என்றேன்.பதின்பருவத்திற்குரிய மென்மை பளபளத்த கரிய சருமம். மூக்கின் மேல் வளைவு சற்றே பதிந்து சிறிய உதடுகளும் குண்டுக்கன்னங்களுமாக குழந்தைத்தனம் காட்டியது முகம். சிறு குழந்தைகளுக்கே உரிய தெளிந்த கண்களில் ஒளிபோல சிரிப்பு.
சொல்லுங்கஎன்றாள். அந்தப்பதிலின் சாதுரியத்தின் நான் புன்னகை செய்தேன். நண்பர், ”இவருதான் எழுத்தாளர் ஜெயமோகன். சொல்வேனில்ல?”என்றார்.அவள் கண்களை விரித்து அப்டியா? ஸாரி, நான் கதைகள் படிக்கிறதில்லைஎன்றாள்
என்ன படிப்பே?”என்றேன்.
எனக்கு சூழலியல் தான் பிடிச்ச விஷயம். அதிலேதான் மேலே படிக்கணும்னு இருக்கேன். பறவைகளிலே தனி ஈடுபாடு உண்டு…”
சூழலியல் என்ற சொல்லை அவளிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. தமிழ்லே யாரோட எழுத்து படிப்பே?”
தமிழ்லே தியடோர் பாஸ்கரன் மட்டும்தானே தொடர்ந்து எழுதறார்?”
சரிதான், அவரிடமிருந்து கிடைத்த சொல். ஒரு மொழியில் உண்மையான சிந்தனைகள் உருவாகவேண்டுமென்றால் அதற்கான கலைச்சொற்கள் உருவாக வேண்டுமென்று நம்புகிறவர் அவர். தியடோர் பாஸ்கரன் ரொம்ப கஷ்டப்பட்டு கலைச்சொற்களை உண்டு பண்ற மாதிரி இருக்கில்ல?”என்றேன், வேண்டுமென்றே
அவர் எங்கியோ சொல்லியிருக்கார், ஒரு கலைச்சொல்லுங்கிறது ஒரு சமூகம் ஒருவிஷயத்தைப்பத்தி அடைஞ்ச ஞானத்தை சுருக்கி திரட்டி வச்சிருக்கிற புள்ளின்னு. ஒரு விதை மாதிரி அது. அதை நட்டு தண்ணி ஊத்தினா முளைச்சிரும். சூழலியல்ங்கிறது எக்காலஜிங்கிற சொல்லுக்கு தமிழாக்கம். ஆனா அதுக்கு தமிழிலே வேற ஆழமான பொருளும் இருக்கு. சூழ்ந்திருக்கிற எல்லாத்தப்பத்தியும் அறியற துறைன்னு சொல்லலாம்.
மரம் செடி கொடீன்னு பேச ஆரம்பிச்சா அறுத்துத் தள்ளிருவாஎன்றார் நண்பர்.
எனக்கும் சூழலியலிலே ஆர்வம் உண்டுஎன்றேன்
நிஜம்மாவா?”
ரொம்ப இல்லை, கொஞ்சமாஎன்றேன். என்னைப்பொறுத்தவரை இயற்கைங்கிறது மனசோட வெளித்தோற்றம். அப்டித்தான் சங்ககாலம் முதல் சொல்லியிருக்காங்க…”
அது அத்வைதமில்ல?”
விஞ்ஞானவாத புத்தம், அத்வைதம் எல்லாம் அதித்தன் சொல்றது. எல்லாமே பழைய தமிழ் ஞானத்தோட வளர்ச்சிப்படிகள்தான்…”
நீங்க பேசிட்டிருங்க, ஒரு நிமிஷம்என்று நண்பர் எழுந்துசென்றார்.
நான் எட்டிப்பார்த்தேன். என்ன?” என்றாள் அவள்.
நீ யார் கூட வந்தே?”
தனியாத்தான்ஏன்?” என்றதுமே புரிந்துகொண்டு பைக்கைச் சொல்றீங்களா? அதான் எனக்கு வசதி…” என்றாள்.
மொரட்டு வண்டிமாதிரி சத்தம் கேட்டது
ஆமா, அதுக்கென்ன? நானே தனியா வயநாட்டுக்கும் டாப்ஸ்லிப்புக்குமெல்லாம் போறேனே அப்றமென்ன?”
சுதந்திரமான பொண்ணா உணருறதுக்கு அது உதவியா இருக்கோ?”
ஆமான்னு வைச்சுக்கிடுங்க..
இந்த டிரெஸ்…”
அதுவும்தான். ஜீன்ஸ்தான் எனக்குப்பிடிச்ச டிரெஸ். எப்டிவேணுமானாலும் இருக்கலாம். ஆனா மேலே முரட்டுத்தனமா ஒண்ணும் போட்டுக்க மாட்டேன்ஐ லைக் மை பூப்ஸ். பெண்ணுக்கு மார்புகள்தான் அதனி அழகு இல்லியா? மார்புகளோட வடிவம் தனியா தெரியணும்னு தோணும்…”
என் வளர்ப்பில் அப்படிப்பட்ட பேச்சுக்கு இடமில்லை. ஆனால் அவள் கண்களில் முகத்தில் எந்தவிதமான தயக்கமும் கூச்சமும் இல்லை. நான் அருகே இருந்த புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன். பறவைகள். க.ரத்னம் தமிழ்நாட்டுப் பறவைகளைப்பத்தி எழுதின புஸ்தகத்தைப் படிச்சிருக்கியா?”
நல்ல புத்தகம். ஆனா அதுமாதிரி நிறைய வேணும். இயற்கையைப்பத்தி ஒரு மொழியில என்ன இருக்குங்கிறது ரொம்ப முக்கியம். நம்ம பறவைகளைப்பத்தி வெளிநாட்டுக்காரங்க முழுமையா எழுதிர முடியாதுபறவைங்கிறது ஒரு பண்பாட்டுப்பொருளும்கூட, இல்லியா? ”
அப்ப உன்னோட எதிர்காலம் இதிலேதான்…”
கண்டிப்பா. நான் பிளஸ்டூ முடிக்கிறதுக்குள்ள அப்பாகிட்டே சொல்லிட்டேன். ஐ ஹேவ் மை ஓன் டிரீம்ஸ்
நான் உள்ளுக்குள் புன்னகைசெய்தபடி கல்யாணம் குடும்பம் எல்லாத்தைப்பத்தியும்…?” என்றேன்
ஆமா. வை நாட்? எனக்கு ஒரு துறையில ஆர்வம் இருக்குன்னா தோட ஒத்துப்போற ஆள்தானே வேணும்?” அவள் கண்களையே பார்த்தேன்.துல்லியமான கரிய பளிங்குகள்.
சரிதான்..என்றேன் அப்டி யாராவது கண்ணுக்கு படறானா?”
சேச்சே. இப்ப அப்டில்லாம் இல்லை. இப்ப எல்லாரும் ஜஸ்ட் ·ப்ரண்ட்ஸ் மட்டும்தான்அதெல்லாம் அப்றம். உங்க கதைகளிலே சூழலியல் வருமா?”
மனசோட வடிவமா வரும். அதாவது எதெல்லாம் அந்த கதைச் சந்தர்ப்பத்திலே உள்ள மனஓட்டத்தைக் காட்டுதோ அதுமட்டும் வரும்..
எனக்கு நேர்மாறா இயற்கைதான் மனசுன்னு தோணுது…”என்றாள் அவள் .இதுவரை மனித இனம் தன்னைப்பத்தியே நினைச்சிட்டிருந்தது. இப்பதான் தன்னை இயற்கையோட ஒரு துளியா பார்க்க ஆரம்பிச்சிருக்கு. சூழலியல்தான் இனிவரக்கூடிய எல்லா அறிவியலுக்கும் தாய். இனிமே நோபல்பரிசுகள் எல்லாமே சூழலியல் அறிஞர்களுக்குத்தான்…”
நான் சற்று முன்னகர்ந்து புன்னகையுடன் என்ன, நோபல் பரிசு வாங்குற உத்தேசம் இருக்கா?”என்றேன்.
அவள் வெட்கச்சிரிப்புடன் மேலுதட்டை இழுத்துக் கடித்தபடி உடலை நெளித்து பார்வையை சன்னல் நோக்கித்திருப்பிக் கொண்டாள். முகமும் கழுத்தும்கூட சிவந்து கன்றியவை போலிருந்தன.
நண்பர் வந்து அமர்ந்து ஸாரிஎன்றார்
உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்காநான் சொன்னேன்ல வெக்கப்படுறப்பதான் பெண் அழகா இருக்கா
வெக்கமா, இவளா?”
ஆனா எப்ப எப்டி வெக்கபடணும்னு அவளுக்கு தெரிஞ்சிருக்குஎன்றேன். அவள் திரும்பிப் பார்த்து சிரித்தபடி புத்தகங்களை எடுத்துக்கொண்டு செல்ல முற்பட நான் சிடிஎன்றேன். சிரித்தபடி வந்து எடுத்துக் கொண்டு உள்ளே போனாள் பேரழகி.

[ஆனந்தவிகடனில் வெளியான கட்டுரையின் முழுவடிவம்] [மறுபிரசுரம்/முதற்பிரசுரம்Jun 28, 2004]
நன்றி:ஜெமோ

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...