முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நடப்பவை யாவும் நன்மைக்கே

அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பதை  பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.     மொழி, இனம், பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கைகளால் உருவான கட்சி திமுக.  ஆனால் வெறும் நடிகரின் முகத்தைப் பார்த்து உருவான கட்சி அதிமுக.  நடிகரால் உருவான ஒரு கட்சியை பின்னாளில் ஒரு நடிகை கைப்பற்றி, அந்த நடிகையின் காலில் விழுந்து கிடந்தவர்களே இன்றைய அதிமுக உறுப்பினர்கள்.     அந்தக் கட்சியில் லும்பன்கள் இல்லாமல் வேறு யார் இருப்பார்கள் ? அந்தக் கூற்றை உண்மையாக்கும் சம்பவங்களைத்தான் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்கிறார்.  பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சசிகலா அதிமுகவின் பொதுச் செயலளாராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் கொண்டு பன்னீர் செல்வமே சசிகலாவை சந்திக்க போயஸ் தோட்டம் செல்கிறார்.   போயஸ் தோட்டம் சென்றதும், சசிகலாவின் காலில் விழுகிறார்.    அவரைத் தொடர்ந்து இதர அமை...

தென்னிந்திய சூரியன் :கலாநிதிமாறன்

இந்தியாவின் மிகப்பெரிய  மீடியா கம்பெனியை  உருவாக்கியவரின் கதை மகேஸ்வரன் பாண்டியராஜ்  நான் காண்பிப்பதைதான் மக்கள் பார்க்க வேண்டும் ; நான் சொல்வதைத்தான் மக்கள் கேட்கவேண்டும் ; நான் கொடுப்பதைதான் மக்கள் படிக்க வேண்டும் மீடியா உலகின் தன் இலட்சியம்பற்றி இப்படி சொன்னவர் யார் தெரிய்மா ? கலாநிதிமாறன்.வெறுமனே சொன்னது மட்டுமல்ல ; அதனை நடைமுறைப்படுத்திக்காட்டியதற்கு இன்றைக்கு ஊடகத்துறையில் பரந்து விரிந்துகிடக்கும் சன் குழுமம் தான் சாட்சி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடத்தில் மொத்தம் 33 தொலைக்காட்சி அலைவரிசைகளுடன் 27 உலக நாடுகளிலும் தென்னிந்தியாவிலும் காட்சி ஊடகத் துறையில் முதலிடத்தில் இருக்கிறது சன் அமெரிக்காவில் பென்சில்வேனியாவிலுள்ள யுனிவர்சிட்டி ஆப் ஸ்க்ரான்டனில் எம்.பி.ஏ முடித்த கலாநிதிமாறன் தனது குடும்பத்தின் "குங்குமம்" பத்திரிக்கையின் பொறுப்பை ஏற்பதற்காக 1980 களில் மத்தியில் தமிழ்நாட்டுக்குத் திரும்பினார்.இருந்தாலும் அவரின் காதல் தொலைக்காட்சியின் மீதுதான் இருந்தது.தூர்தார்ஷன் மட்டுமே அப்போது இருந்தது. 1990 களில் பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் தாராளமயம...

வானவில்லின் மறுபாதி

[ A+ ]  / [ A- ] தற்காலிக மனநிலையில் எடுத்த உறுதியான முடிவு என் காதல் – வானவில்லின் மறுபாதி அவள் – பிடிக்காத பாடலின் வரிகள் போல சிலசமயங்களில் மாறிவிடுகிறாய் – எழுதிய நான்கைந்து வரிகளுள் எது கவிதை வரி என்பது நீ வாசிப்பதில் இருக்கிறது – தவறி விழுந்த இலையை காடு சென்று சேர்க்க அலைகிறது காற்று – ஏதேனின் தோட்டத்தில் கிடைப்பதை என் வீட்டுத்தோட்டத்தில் கண்டெடுத்தேன் – எழுத மறந்த வரிகள் இன்னும் கவிதையாகத்தான் இருக்கின்றன – மாற்றம் என்றால் கம்பளிப்பூச்சியிலிருந்து வண்ணத்துப்பூச்சி போன்றதாக இருக்கவேண்டும் – சிமணி சொன்னாரென்று கையைக்காலாக்கி நடந்து செல்கிறேன் கால்களை என்ன செய்ய ?! – கிளிகளைப் பிடித்துக்கொண்டுவருபவனுக்கு கூட பூனைகளிடம் அத்தனை பரிச்சயமில்லை – சோளக்கொல்லை பொம்மையும் மழையை ரசிக்கிறது கைகளை விரித்தபடி – எல்லாச்சாலைகளிலும் நான் பயணி அத்தனை நதியிலும் என் ஓடம் – எல்லாக்கோடுகளும் சிறிதாகி விடுகின்றன காலம் கடக்கும்போது அருகில் இன்னொரு பெரிய கோட்டிற்கு எவ்விதத்தேவையுமின்றி - சின்னப்பயல் 

அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால்தான் என்ன பிரச்சினை?

                                                சமஸ்,  தமிழ்நாடு சம்பந்தமான கோரிக்கைகளோடு, டெல்லியிலுள்ள அரசப் பிரதிநிதிகளை இங்குள்ளோர் சந்திக்கச் செல்கையில், எங்கள் டெல்லி செய்திப் பிரிவைத் தொடர்புகொண்டு “கொஞ்சம் விசேஷ கவனம் கொடுங்கள்” என்று கேட்டுக்கொள்வது வழக்கம். டெல்லி செய்தியாளர் ஷஃபி முன்னா, விவசாயிகளைப் பொறுத்தமட்டில் கூடுதலான அக்கறை எடுத்துக்கொண்டு உதவக் கூடியவர். அவர்களுடனான அனுபவங்களை அவர் சொல்லும்போது மிகுந்த வலி உண்டாகும். “டெல்லி நிலவரம் அரசியல் கட்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்ப சூதானமாக நடந்துகொள்வார்கள். விவசாயிகளின் நிலைமை அப்படி அல்ல. இவ்வளவு பெரிய நகரத்தில், பல்லாயிரக்கணக்கில் கூடாமல், தேசியக் கட்சிகள், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது சுலபமல்ல. நாடாளுமன்ற வளாகம், பிரதமர் அமைச்சர்கள் வீடுகள், காங்கிரஸ், பாஜக அலுவலகங்கள் அமைந்திருக்கும் ‘லூட்டியன்ஸ் டெல்லி’ பகுதியில் பலத்த பாதுகாப்பு இருக்கும். கையில் கொடியுடனோ...