தமிழகத்தின் தேர்தல் களம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே அனல் பறக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான், நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகும். குறிப்பாக தேர்தல் தேதியை ஒட்டி விளம்பரங்கள் நாளிதழ்களில் வெளியாகும். ஆனால், திமுகவின் “என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா” விளம்பரங்கள் அனைத்து நாளிழ்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விளம்பரங்களின் தாக்கத்தை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. அதிமுக இதற்கு ஆற்றும் எதிர்வினையை விட, மக்கள் நலக்கூட்டணியின் எதிர்வினை அதிகமாக உள்ளது. விளம்பரங்களை கண்டித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிடுகிறார். அதிமுக தரப்பு ஆதரவாளர்கள், சமூக வலைத்தளங்களில் திமுக விளம்பரங்களுக்கு எதிரான பல்வறு மீம்ஸ்களை உருவாக்கி உலவ விட்டாலும், அதிமுக தலைமையிடமிருந்து இந்த விளம்பரங்களுக்கென்று உருப்படியான பதிலடி இது வரை வரவில்லை. திமுக ஏன் இத்தனை அவசரமாக விளம்பரங்களை வெளியிடுவது, இத்தேர்தலை வாழ்வா சாவா போ...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்