முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று உள்ளாடைகள்

மார்ச்  மொழியற்ற அப்பெருநிலத்தில் முதல்முறை நான் அதைச் சந்திக்கும்போது அவள் தன் தற்கொலையின் விளிம்பில் இருந்தாள் பிறகு மெல்ல இறங்கி வந்து என்னை அணைத்துக்கொண்டாள் உள்ளாடைகளுக்கு மீதாக அவள் தன் தினசரி சேலையை அணிந்துகொள்ளுமுன் அன்று நான் எனக்குள் அவளுக்கு உறுதியளித்தேன் பெண்ணே உன் த்ற்கொலையை நான் ஒரு நாள் நிறைவேற்றுவேன் முழு ஆடையுடன். o நீ என்னை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாய் தெரியுமா நந்து எனக்கு என்னை காட்டிக்கொள்வதில் மிகுந்த கூச்சமுண்டு பெண்ணே எனக்காக ஆடையை நெகிழச்செய்தவர்கள் இன்று உயிரோடு இல்லை தெரியுமா ஆக என்னைக் கொல்வதற்காக என் ஆடைகளை நெகிழச் செய்தாயா இல்லை பெண்ணே என் மீது சத்தியம் நான் என்னைக் கொன்றுவிடக்கூடாதென்ற பயத்தில்தான் இதுவரை பலரை ஆடைகளை நெகிழச் செய்திருக்கிறேன் பலமுறை o அது நிச்சயம் ஒரு திரைப்படம் அல்லது அது நிச்சயம் ஒரு கனவு அல்லது ஒரு மனப்பிரம்மை அந்தப்பெண் அடுத்த அறையிலிருந்து கதவை அறைந்து கொண்டேயிருக்கிறாள் என்னால் குடிக்க முடியவில்லை அடுத்த கோப்பையை சாய்க்கும் முன் அவன் அலறுகிறாள் அப்பா தெய்வமே நீ இங்கிருக்க...

ஹெலிகாப்டர் தேடும் பெண்களும், விமானப் பயணத்திற்காக ஏங்கும் முத்துகிருஷ்ணன்களும்

BY T N GOPALAN  சேலத்தைச் சேர்ந்த தலித் பி எச் டி மாணவன் முத்துகிருஷ்ணனின் தற்கொலை நம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. அது தொடர்பான செய்திகளை சமூக வலைதளங்களில் நிறைய பகிர்ந்துகொண்டோம். அச் செய்திகளில் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தினை பலரும் தவறவிடுவதாக எனக்குத் தோன்றியது. ஆனால் அது குறித்து அந்நேரத்தில் எழுத தயக்கமாயிருந்தது. அது அபசுரமாகக் கருதப்படக்கூடும் என்ற அச்சம். தலித் மாணவர்களின் அவலநிலை குறித்து எல்லோரும் விவாதிதுக்கொண்டிருக்கும்போது நான் அதி மேதாவித்தனமாக, ஆனால் சற்றும் இரக்க உணர்வேயின்றி எழுதுகிறேன் என்று குற்றச்சாட்டுக்கள் எழக்கூடும் என்பதால் ஏதும் எழுதவில்லை. நேரம் வரட்டும் என்று நினைத்தேன். இப்போது வந்திருக்கிறது. பெற்றோருக்கு எவ்வித சிக்கல்கள் எழுந்தாலும் சரி, பிறந்த வீட்டிலிருந்து புகுந்தவீட்டிற்கு இயன்றவரை அள்ளிச்செல்லவேண்டும் என நினைக்கும், ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை அழைப்பு என்று கனாக்காணும் நம் பெண்களை கோபிநாத்தின் நீயா நானாவில் நாம் பார்த்தோம். அந்நிகழ்ச்சி இக்கால பெண்களின் மதிப்பீடுகள் குறித்து எத்தனை வேதனை அளித்ததோ அது போன்றதொரு மன...

புழங்கா உன்னதம்

........ அறிமுகங்கள் துவக்கம் அல்ல காத்திருந்தது அறிமுகங்களுக்காக  துவக்கம் என்றோ எப்போதோ துவங்கிவிட்டது உலகம் முழுக்க எதால் நிரம்பினால் அதிசயமோ அதால் நிரம்பியிருக்கிறது புன்னகைக்கும் பிரியங்கள் உன் பெயர் இன்னதா? என் பெயர் இன்னது! பிரியங்கள் கண்டுகொள்ளும் கண்டுகொண்ட பிரியங்கள் ஒன்றையொன்று வதைக்கும் வதைப்பதற்கு பிரியங்களை மிகுதியாய்ப் பொழியும் கிடைக்கமாட்டேன் போவென்று பிரியத்தின் பிரியத்தில் பிரியம் முரண்டு செய்யும் பாடம் புகட்டுவதாக பழிவாங்குவதாக தள்ளி நின்று அழும் பாவப்பிரியம் புரிந்துகொண்டதாக தேம்பும் சகப்பிரியம் துவக்கங்கள் துவங்கியதாகவே இருக்கட்டும் அறிமுகம் நடவாதிருக்கச்செய்வோம் நானுன்னை நீயாய் விட்டுவிடுகிறேன் நீயென்னை நானாய் விட்டுவிடு

புலிக்கலைஞன்-அசோகமித்திரன்

பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக்கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்குச் சாப்பிட உட்கார்ந்து காரியாலயத்திற்குப் பதினொன்றரைக்கு வந்து சேர்ந்து ,  உடனே ஒரு மணிக்கு டிபன் சாப்பிடப் போவது அசாத்தியமாக இருந்திருக்கிறது. அதனால்தான் காண்டீனில் எப்போதும் இரண்டு மணிக்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி என்பதைப் பத்தரையாக்கி ,  அதையும் ஒரு மாதமாகப் பத்து என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். டிபனுக்காகப் பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு வரை. மாலை ஐந்து மணிக்கும் முடியும் காரியாலயம் ,  இப்போது ஆறு மணி வரை நீட்டி வைக்கப்பட்டுவிட்டது. வேலை எப்போதும் நடந்த வேலைதான். ஃபாக்டரி பிரிவு என்றிருந்த தச்சுவேலை செய்பவர்கள் ,  எலக்ட்ரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ,  லாட்டரிக்காரர்கள் இவர்களுக்கு என்றுமே எட்டு மணி நேர வேலை. அதே போலக் கணக்குப் பிரிவு. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட...

எண்கள் - அசோகமித்ரன்

இந்த ஆள் எப்போ முடிப்பார்னு தெரியலை. தினம் இந்த மாதிரிதான் ஆயிடறது. ஒவ்வொருநாளும் கொஞ்சம் முன்னாலே வந்து பேப்பரை முழுக்கப் பாத்துட்டுப் போகலாம்னா நாம வரத்துக்குள்ளே நாலு பேராவது ஏற்கனவே வந்துடறாங்க. இவங்க வீடெல்லாம் பக்கத்திலேயே இருக்கோ என்னவோ. இந்த ஆள் வீடு ரொம்பப் பக்கத்திலே இருக்கணும். ரொம்ப ரொம்பப் பக்கத்திலே இருக்கணும். இந்தச் சாலையிலே இரண்டு சாரிலேயும் ஒரே பாங்குகளும் கடைகளுந்தான் இருக்கு  . இந்தப் பாங்குகளையும் கடைகளையும் எட்டு மணிக்குத்தான் திறக்கிறான். இந்த ஒரு இடந்தான் ஏழு மணிக்கே திறக்கிறான். ஏழு மணிக்கே வந்தா இங்கே வர இரண்டு மூணு பேப்பரையும் அஞ்சு நிமிஷத்துலே பாத்துட்டுப் போயிடலாம். நாளைக்காவது ஏழுமணிக்கு வந்துடணும். ஏழு மணிக்கு வந்தா வீட்டிலே தண்ணி பிடிச்சு வைக்க முடியாது. எட்டு குடும்பம் நடுவிலே ஒண்டுக் குடித்தனம் வாழற அழகிலே ஒழுங்காக் கொல்லைப்புறம் போயிட்டு வரமுடியாது. ஏழு மணிக்குள்ளே பழைய சோத்தைக் கொட்டிண்டு கிளம்ப முடியாது. பேப்பரைப் படிச்சுட்டு மறுபடியும் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டுச் சாப்பிட்டுட்டு கிளம்பறதுக்கு நேரம் இருக்காது. வெறும் வயத்தோட ஒன்பதே ...

அறம்

ஒரு வழியாக என் ஆதர்ச எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் சிறுகதைத் தொகுப்பினை படித்து முடித்தாயிற்று.  மன அழுத்தம் சென்ற இரண்டு வாரங்களாக உச்சத்தில் இருந்த நிலையில் வார இறுதியில் அனைத்துக் கதைகளையும் தொடர்ச்சியாக படித்து முடித்தேன். ஒவ்வொரு கதையின் முடிவிலும் துக்கம் தொண்டையின் வழியே சென்று நேரடியாக நெஞ்சை அடைத்ததைப் போல உணர்ந்தேன். மிகை படுத்திச் சொல்லவில்லை. இது நடந்தது உண்மை. ஜெயமோகனை என் எழுத்துக்கு வித்திட்ட மிகப் பெரிய ஆளுமையாகவே பார்கிறேன். சற்று அவர் மேல் கோபமும் வரத்தான் செய்கிறது. கோபத்திற்கான முதல் காரணம் என்னை நான் ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளனாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஊமைச் செந்நாய் மற்றும் அறம் தொகுப்பினை படித்தவுடன் என் எண்ணம் அனைத்தும் தவுடு பொடி ஆகிவிட்டது. நான் இந்நாள் வரை எழுதியிருந்த சிறுகதைகளை வலைத்தளத்தில் வெளியிடவே கூச்சமாக உள்ளது. இன்னும் எவ்வளவோ உழைக்கவும், படிக்கவும் வேண்டியிருக்கிறது. மெல்ல அவரது தாக்கத்தை என் எழுத்திலிருந்து வெளியேற்றவும் அவசியம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது படைப்புக்களை வாசித்து வரும் நான் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு எழுந்து எனக்கென ...